For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூனை வளர்க்கறீங்களா? டயட் அவசியம் !

By Mayura Akilan
|

Pet Care
செல்லப்பிராணிகளை சாதாரணமாக வளர்க்க முடியாது குழந்தைகளைப்போல அவைகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ளவேண்டும். நாய்களை வளர்ப்பதைப் போல பெரும்பாலான வீடுகளில் செல்லப் பிராணிகளாக பூனைகளை வளர்க்கின்றனர். பழங்காலத்தில் பூனை இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால் எலி இல்லாத வீடும் இல்லாமல்தான் இருந்தது. அதனால் பூனையை வீட்டில் வளர்ப்பது ஒன்றும் தவறில்லை என்கின்றன ஜோதிட சாஸ்திரம்.

பூனை நல்லது

பொதுவாக வீட்டில் பூனை இருப்பது நல்லது. ஏனென்றால் பூனைக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. நாய் மோப்ப சக்தியால், சில துர்தேவதைகளை நெரு‌‌ங்கவிடாமல் விரட்டக்கூடியது. அதைவிட அசாத்தியமான ஒரு ஆற்றல் பூனைக்கு உண்டு. அதிலும் கடுவண் பூனைக்கு அபார சக்தி உண்டு. அதேபோல் பூனை இருக்கும் இடத்தில் பில்லி சூனியம் வைக்க முடியாது என்ற ஒரு கருத்தும் உண்டு. கரும்பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பூனை வளர்த்தல் என்பது நல்லது. அது ஒரு பரிகாரம் போன்றதுதான் என்கின்றனர் ஜோதிடர்கள்.

பூனைக்கு ஏற்ற உணவு

பூனைகள் அசைவப்பிராணிகள். வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் சில நாட்கள் சைவ உணவுகளையும் சாப்பிடுகின்றன. பூனைக்கு என்று வைட்டமின்கள், தாது உப்புகள் அடங்கிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுக்கவேண்டும் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள். எனவே பூனை குட்டியாக இருக்கும் போதே புரதச்சத்து, கார்போஹைடிரேட், கொழுப்பு, தாது உப்புகள், தண்ணீர் கொடுத்து வளர்ப்பதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான பூனையை வளர்க்க முடியும் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

பூனையின் வளர்ச்சிக்கு taurine and arginine என இரண்டுவிதமான அமினோ அமிலங்கள் அவசியம். இதில் Taurine எனப்படும் அமினோ அமிலம் பூனைக்கு ஏற்படும் கண்பார்வை கோளாறு, இதயகோளாறுகளை நீக்க உதவுகிறது. இந்த அமினோ அமிலக்குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே பூனைக்கு கொடுப்படும் உணவுகளில் இந்த அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கவேண்டும்.

புரதம், கொழுப்பு சத்து

பூனைக்கு தினசரி 30 முதல் 45 சதவிகித அளவிற்கு உலர்ந்த அளவில் புரதம் கிடைக்குமாறு உணவுகளை அளிக்கவேண்டும். அதேபோல் 10 முதல் 30 சதவிகிதம் அளவில் உலர்ந்த கொழுப்பு உணவுகள் அதேபோல் வைட்டமின் அல்லது தாதுச் சத்துள்ள உணவுகள் கொடுக்கவேண்டும். உணவுகளை கொடுக்கும் முன்பு சரியான கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

பசும்பால்

பூனை பசுவின் பாலை விரும்பி குடிக்கும். எனவே அதற்கு லேசான இனிப்புச் சத்துள்ள பசுவின் பாலை அளிக்கலாம். அதேபோல் பூனையின் உடல் வெப்பத்தன்மைக்கு ஏற்ற உணவுகளை அளிக்கவேண்டும். சில பெரிய பூனைகள் லாக்டோஸ் அதிகமுள்ள பாலை அதிக அளவில் குடிப்பதன் மூலம் ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்படும். இதுபோன்ற தருணங்களில் கால்நடை மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary

Cat Food & Diet | பூனை வளர்க்கறீங்களா? டயட் அவசியம் !

Cats are obligate carnivores and hence, must eat animal tissue to maintain their long-term well-being. If left on its own the cat survives on whatever small animal prey is available in the habitat. And from the bones and viscera (intestines and other organs), it obtains vitamins, minerals, and other important nutrients.
Story first published: Monday, April 2, 2012, 16:18 [IST]
Desktop Bottom Promotion