For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்களுக்கும் உடற்பயிற்சி சொல்லிக் கொடுங்கப்பா!!!

By Maha
|

Dog Exercise
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஒரு சிறு குழந்தைப் போன்றது. குழந்தைகளது உடல்நிலையை எவ்வாறு கவனமாக பார்த்துக் கொள்கிறோம் அதேப்போல் தான் நம் வீட்டு செல்லப் பிராணிகளின் உடல்நிலையையும் கவனமாக ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்க்கும் செல்லப் பிராணிகளில் ஒன்றான நாய்கள் நன்கு ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க, அவற்றிற்கு உடற்பயிற்சிகளை கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளிலேயே நாய்கள் தான் ஒரு சிறந்த நண்பன் போன்று நடக்கும். அத்தகைய சிறந்த நண்பனான நாய்க்கு நல்ல உணவு மட்டும் ஆரோக்கியத்தை தருவதில்லை, அவற்றிற்கு ஒரு சில உடற்பயிற்சிகள் அவசியமாகியுள்ளது. அது என்னவென்று சற்று படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்...

* நாய்களுக்கு வெளியே நடந்து செல்வது என்பது மிகவும் பிடித்த ஒன்று. உங்களுக்கு காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செல்லும் பழக்கம் இருந்தால், அப்போது மறக்காமல் நாய்களையும் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் தினமும் தெரு முனை வரையிலாவது அழைத்துச் சென்று வாருங்கள். இது நாய்களுக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் ஆரோக்கியம் தான்.

* வீட்டில் வளர்க்கும் செல்லம் ஆரோக்கியமாக இருக்க அதனுடன் சிறிது நேரம் விளையாட வேண்டும். அதிலும் பந்து அல்லது பறக்கும் தட்டை சற்று தூரம் தூக்கிப் போட்டு, அதனை எடுத்து வரும் படி செய்யலாம். இதனால் நாய்கள் நன்கு சந்தோஷமாக இருப்பதோடு, இதுவும் ஒரு வகையான உடற்பயிற்சி தான்.

* ஏதாவது ஒரு பொருளை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு, அதனை எடுத்துவரும் படி செய்யலாம். அனைத்து நாய்களுக்கும் அதற்கு பிடித்த பொருள் என்று ஏதாவது இருக்கும். ஆகவே அதனை மறைத்து வைத்து விடுங்கள். இதனால் நாய்களது மோப்ப சக்தி அதிகரிப்பதோடு, அங்கும் இங்கும் ஓடுவதால், அதன் நுரையீரல் சரியாக வேலை செய்யும். ஆகவே இந்த மாதிரியான செயல்களை செய்தால், நாய்களுக்கு மிகவும் நல்லது.

* ஓடுதல் மனிதர்களுக்கு மட்டும் நல்லதல்ல, நாய்களுக்கும் தான். இதனால் தசைகள் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இயங்கும். அதற்கு நிறைய வழிகள் உள்ளது. உதாரணமாக, எப்போதும் நாய்கள் வீட்டில் நாம் எங்கு சென்றாலும் அங்கு பின்னாடியே வரும். ஆகவே வீட்டில் மாடியை ஏறி இறங்கி வந்தால், நாய்களும் செய்யும். இது செல்ல நாய்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

* உடற்பயிற்சியிலேயே நீச்சல் மிகவும் சிறந்தது. அதிலும் நாய்கள் பிறப்பிலேயே ஒரு சிறந்த நீச்சல் வீரர்கள். ஆகவே அந்த நாய்களை குளத்திற்கு அழைத்துச் செல்லலாம். இல்லையென்றால், நாய்களுக்கான நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்லலாம். இதனால் நாய்களுக்கு ஆர்த்ரிடிஸ் இருந்தாலும் சரியாகிவிடும். மேலும் நாய்களது தசைகள் நன்கு வலுபெறுவதோடு, இதயமும் நல்ல நிலையில் இருக்கும்.

ஆகவே இவ்வாறெல்லாம் செய்தால், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, வீட்டில் சந்தோஷமாக துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்.

English summary

best exercises for your dog | நாய்களுக்கும் உடற்பயிற்சி சொல்லிக் கொடுங்கப்பா!!!

A pet is like a kid to you. And who does not want their pet to stay in good health. There are certain pets like dogs who need exercises to stay fit and healthy. You need to do a few things to maintain their health. Dogs are the best friend of a man. They are much like us. Just good food is not enough to keep your pets in good health.
Story first published: Thursday, August 30, 2012, 16:45 [IST]
Desktop Bottom Promotion