Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2024 உங்களுக்கு செழிப்பா இருக்கணுமா? அப்ப வாஸ்துப்படி இந்த செடிகளை வீட்டுக்கு வாங்கிட்டு வாங்க..
New Year 2024: நாம் தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2024 புத்தாண்டிற்குள் நுழையவுள்ளோம். அனைவருமே ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
உங்களுக்கும் அப்படி ஆசை இருந்தால், புத்தாண்டின் முதல் நாளில் ஒருசில அதிர்ஷ்ட செடிகளை வீட்டிற்கு வாங்கி வாருங்கள். இந்த செடிகளை வீட்டில் வைப்பதன் மூலம், உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிப்தோடு, வீட்டிலும் செல்வம் அதிகம் சேரும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வருகின்ற புத்தாண்டு சிறப்பாக இருக்கவும், வீட்டில் பணம் மற்றும் உணவிற்கு பஞ்சம் வராமல் இருக்கவும் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஒருசில செடிகளை வாங்கி வைக்கலாம். இப்போது வருகின்ற 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு இருக்க எந்த மாதிரியான செடிகளை புத்தாண்டு நாளில் வீட்டில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மூங்கில் செடி
மூங்கில் செடி செல்வத்தை ஈர்க்கும் ஒரு அதிர்ஷ்ட செடி. இந்த செடியை வீட்டில் வைத்தால், அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதோடு, வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டில் உள்ளோர் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பதோடு, வீட்டின் நிதி நிலைமையும் உயரும்.
அந்தூரியம்
வாஸ்து சாஸ்திரத்தில், அந்தூரியம் மிகவும் அதிர்ஷ்டமான செடியாக கருதப்படுகிறது. இந்த அந்தூரியம் செடியை புத்தாண்டு நாளில் வீட்டிற்கு கொண்டு வந்தால், அது அந்த ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும். இந்த செடியானது நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கும்.
பொன்சாய் மரம்
பொன்சாய் மரம் மற்றொரு அதிர்ஷ்டமான செடி. இந்த செடியை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. வருகிற 2024 புத்தாண்டு மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க விரும்பினால், இந்த செடியை வீட்டிற்கு வாங்கி வாருங்கள். இந்த செடி வீட்டில் இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிப்பதோடு, வீட்டு சூழல் அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
பீஸ் லில்லி
பீஸ் லில்லி என்னும் செடி அதன் பெயரைப் போலவே வீட்டின் சூழலை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவி புரியும். முக்கியமாக இந்த செடியை புத்தாண்டு நாளில் வீட்டில் வாங்கி வந்தால், அது அந்த ஆண்டு முழுவதும் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
மணி பிளாண்ட்
வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்ட செடியாக கருதப்படும் மற்றொரு செடி தான் மணி பிளாண்ட். இந்த செடி வீட்டில் இருந்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டிற்கு அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரும். திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும். முக்கியமாக வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து, வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications