Latest Updates
-
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது!
மகா சிவராத்திரி நாளில் இந்த செடிகளை வாங்கி வீட்டுல வையுங்க.. சிவனின் அருள் எப்பவும் இருக்கும்...
Maha Shivratri 2024: இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சிவபெருமானுக்கு உரிய சிறப்பான நாள் தான் மகா சிவராத்திரி. இந்து மதத்தில் மிகவும் உயர்ந்த தெய்வமாக போற்றப்படும் சிவபெருமான், அழிக்கும் மற்றும் காக்கும் கடவுளாக கருதப்படுகிறார்.
சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சிவ பக்தர்கள் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானின் ஆசியை பெற முயற்சிப்பர்.

இது தவிர இந்த மகா சிவராத்திரி நாளன்று குறிப்பிட்ட செடிகளை வாங்கி வந்து வீட்டில் வளர்த்து வந்தால், சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெறலாம். நீங்கள் உங்கள் வீட்டில் தோட்டம் வைத்திருந்தால், அந்த தோட்டத்தில் சிவனின் ஆசியைப் பெற உதவும் செடியை வளர்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள செடிகளை மகா சிவராத்திரி நாளில் வாங்கி வையுங்கள்.
1. வில்வ மரம்
மரங்களுள் வில்வ மரம் மிகவும் மங்களகரமான மரமாகும். இந்த வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. பண்டைய வேதங்களின் படி, வில்வ இலைகளும், அதன் பழங்களும் சிவபெருமானின் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இன்று வரை சிவபெருமானை வழிபடும் போது, சிவனை மகிழ்விக்கவும், அவரது அருளைப் பெறவும் வில்வ இலைகளை வாங்கி வழிபட்டு வருகிறோம். இப்படிப்பட்ட வில்வ மரம் உங்கள் வீட்டில் இல்லாவிட்டால், இந்த மகா சிவராத்திரி நாளில் வில்வ செடியை வாங்கி வீட்டில் வைத்து வளர்த்து வாருங்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படுவதோடு, சிவனின் அருள் அந்த வீட்டில் உள்ளோருக்கு இருக்கும்.
2. கரு ஊமத்தை செடி
பொதுவாக வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்கக்கூடாது என்ற ஒரு கருத்து வாஸ்துவில் கூறப்பட்டிருந்தாலும், மகா சிவராத்திரி அன்று கரு ஊமத்தை செடியை வாங்கி வளர்க்கலாம். ஜோதிடர்களின் கூற்றுப்படி, கரு ஊமத்தை செடியை மகா சிவராத்திரி நாளில் வீட்டில் வாங்கி வந்து வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்த்தால், மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, சிவனின் அருளால் வீட்டில் ஏற்படும் பேரழிவுகள் தடுக்கப்பட்டு, சிவனின் ஆசி பரிபூர்ணமாக கிடைக்கும்.
3. மல்லிகை செடி
மகா சிவராத்திரி நாளில் வீட்டில் வாங்கி வர ஏற்ற மற்றொரு அற்புதமான செடி தான் மல்லிகை செடி. இந்த செடி பார்வதி தேவிக்கு மிகவும் பிடித்த செடியாக நம்பப்படுகிறது. எனவே சிவ பக்தர்கள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் ஆசியைப் பெற விரும்பினால், நல்ல மணம் கொண்ட மல்லிகை செடியை வீட்டில் வாங்கி வளர்த்து வாருங்கள். இதனால் சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளால் தம்பதிகளிடையே உள்ள பிரச்சனைகள் நீங்கும் மற்றும் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 செடிகளையும் வருகிற மகா சிவராத்திரி நாளில் வாங்கி வீட்டில் வளர்த்து வந்தால், சிவன் மற்றும் பார்வதி தேவியின் பரிபூர்ண அருள் எப்போதும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications