Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
கோடைகாலத்தில் உங்க சமையலறையை எப்படி குளு குளுவென வைத்துக் கொள்ளலாம் தெரியுமா?
கோடை காலம் வந்துவிட்டாலே சமைப்பது என்பது எல்லாருக்கும் கடுப்பான விஷயமாகவே அமைகிறது. காரணம் கிச்சனுக்கு சென்றாலே போதும் வியர்த்து கொட்ட ஆரம்பித்து விடும். இதனாலயே நம்ம வீட்டு பெண்கள் கொஞ்ச நேரம் கூட கிச்சனில் நிற்க முடியாத சூழலை சந்திக்கின்றனர். கிச்சனில் அதிகப்படியான சூட்டில் நின்று சமைக்கும் போது சரும எரிச்சல், சரும கொப்புளங்கள் மற்றும் வியர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்கின்றனர்.

இதற்கு தீர்வாகத்தான் உங்கள் வீட்டு கிச்சனை இந்த கோடை காலத்தில் எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்? மேலும் சமைக்கும் போது குளிர்ச்சியாக இருக்க எந்த மாதிரியான டிப்ஸ்களை பின்பற்றலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சமைப்பதற்கு சரியான நேரத்தை தேர்ந்தெடுங்கள்
கோடை காலத்தில் மதிய வேளையில் சமைக்கும் போது உங்களுக்கு இயற்கையாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே முடிந்த வரை காலை வேளையிலேயே உங்கள் சமையலறை வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்.
மேலும் என்ன சமைக்க வேண்டும் என்பதை முன்னரே திட்டமிட்டு கொள்ளுங்கள். இதனால் கூடுதல் நேரம் சமையலறையில் இருப்பது தவிர்க்கப்படும். காய்கறி நறுக்குவது மற்றும் சின்ன சின்ன இதர வேலைகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்து நீங்கள் செய்யலாம். இதன் மூலம் அதிகப்படியாக வியர்வை வெளியேறுவதை நீங்கள் தவிர்க்க முடியும்.
கோடைகாலத்தில் எளிய சமையலை மேற்கொள்ளுங்கள்
அதிக நேரம் அடுப்பிலயே இருக்கும் உணவு வகைகளை சமைக்காதீர்கள். முடிந்த வரை சீக்கிரமே தயாராகும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சமைப்பது நல்லது. மேலும் எதாவது அரைக்க வேண்டியது இருந்தால் அதை காலை வேளையிலயே அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீண்ட நேரம் சமையலறையில் நிற்பது தவிர்க்கப்படும். புரோட்டீன் வகையான உணவுகள் சீக்கிரமே வெந்து விடும். எனவே மெல்லிய இறைச்சி, சிக்கன், வேகக் கூடிய காய்கறிகள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து சமையுங்கள்.
சமைக்கும் போது ஜன்னல்களை திறந்து வையுங்கள்
சமையலறையில் நல்ல காற்றோட்டமான வசதி இருப்பது மிகவும் அவசியம். எனவே சமைக்கும் போது ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள். உங்கள் கிச்சனுக்கு என்று கைக்கு அடக்கமான மின்விசிறிகள் தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது. அதைக் கூட நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். சமையலறையில் வெப்பம் மற்றும் புகையை வெளியேற்றும் ஃபேன் வசதி இருந்தால் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
கிரில்லை பயன்படுத்தி வெளிப்புறத்தில் சமைக்கலாம்
கோடை காலத்தில் வெளியில் சமைப்பது என்பது உங்களுக்கு வெப்பத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே கிரில்லை பயன்படுத்தி சமைக்கக் கூடிய உணவு வகைகளை வெளியே வைத்து சமைக்கலாம். இதன் மூலம் நீண்ட நேரம் நீங்கள் அடுப்படியில் நிற்பது தவிர்க்கப்படும். பால்கனி மற்றும் மொட்டை மாடியில் கூட கிரில்லை பயன்படுத்தி உங்களால் சமைக்க முடியும். உங்களுக்கு பிடித்த சிக்கன், மீன் போன்ற உணவுகளை எளிதாக சமைத்து பரிமாறலாம். இந்த கிரில்களை சுத்தம் செய்வதும் எளிதானது.
சமைக்க சிறிய பாத்திரத்தை பயன்படுத்துங்கள்
சமைக்கும் போது பெரிய பாத்திரங்களை பயன்படுத்துவது வெப்பத்தை அதிக அளவு எடுத்து சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் உங்கள் சமையலறை அதிகளவு வெப்பமடைகிறது. எனவே சிறிய பானை அல்லது சிறிய பாத்திரத்தை பயன்படுத்துங்கள். மேலும் சமைக்கும் போது பெரிய பர்னரை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய பர்னரை பயன்படுத்துங்கள். இதன் மூலம் அதிக வெப்பம் வெளிப்படுவதை தவிர்க்க முடியும்.
உங்களை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
சமைக்கும் போது உங்களை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது மிக மிக அவசியம். அப்பொழுது தான் நீங்கள் சோர்வடையாமல் சமைக்க முடியும். எனவே நிறைய தண்ணீர், குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம்கள் மற்றும் பழச்சாறுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது சமைக்கும்போது ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய உதவுகிறது. மேலும் உங்களை குளிர்ச்சியாக வைக்கவும் மற்றும் சமைக்கும் போது செளகரியமாக வைக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications


