For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?

என்ன தான் குப்பை தொட்டியானது வீட்டின் குப்பையை போடும் ஒரு பொருளாக இருந்தாலும், அதையும் சரியான திசையில் வைக்க வேண்டும்.

|

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்கள் வைக்கப்படும் திசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரது வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் வாஸ்துப்படி வைக்காமல், தவறான திசையில் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டிற்கு தீங்கை விளைவிக்கும். உதாரணமாக, வீட்டில் கடிகாரம், காலெண்டர், துடைப்பம் போன்ற பொருட்கள் சரியான திசையில் வைக்காமல் இருந்தால், அது அந்த வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பல பிரச்சனைகளை வீட்டில் உருவாக்கும்.

Which Direction Dustbin Should Be Placed According To Vastu In Tamil

அப்படி அனைவரது வீட்டிலும் இருக்கும் மற்றொரு பொருள் தான் குப்பை தொட்டி. என்ன தான் குப்பை தொட்டியானது வீட்டின் குப்பையை போடும் ஒரு பொருளாக இருந்தாலும், அதையும் சரியான திசையில் வைக்க வேண்டும். தவறான திசையில் குப்பை தொட்டியை வைத்தால், அது வீட்டில் உள்ளோரின் மீது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கி, பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது வாஸ்துப்படி குப்பை தொட்டியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வடக்கு மற்றும் வடகிழக்கு திசை

வடக்கு மற்றும் வடகிழக்கு திசை

வீட்டின் வடக்கு திசையானது நேர்மறை ஆற்றலை உருவாக்கும் இடமாக கூறப்படுகிறது. மேலும் இந்த திசையை குபேர திசை என்றும் அழைப்பார்கள். அதே வேளையில் வடகிழக்கு திசையில் சிவன் குடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்கக்கூடாது. ஒருவேளை வைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் பாய்ந்து நிதி நெருக்கடியை சந்திப்பதோடு, ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசை

கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசை

வீட்டின் கிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்கக்கூடாது. இந்த திசையில் குப்பை தொட்டியை வைத்தால், அது அந்த வீட்டில் உள்ளோருக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு, தனிமையை அதிகம் உணர வைக்கும். மேலும் இந்த திசையில் குப்பை தொட்டியை வைத்தால், அது ஒருவரது முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.

அதேப் போல் தென்கிழக்கு திசை மங்களகரமான திசை மற்றும் நெருப்புடன் தொடர்புடையது. இந்த திசையில் குப்பை தொட்டியை வைத்தால், அது வீட்டின் வருமானத்தை குறைப்பதோடு, தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும்.

தெற்கு மற்றும் தென்மேற்கு திசை

தெற்கு மற்றும் தென்மேற்கு திசை

வீட்டின் தெற்கு திசையானது எமனுக்கு உரிய திசையாகும். இந்த திசையில் குப்பை தொட்டியை எக்காரணம் கொண்டும் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது வீட்டில் வறுமையை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தொழிலில் பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும்.

குப்பை தொட்டி வைக்க சரியான திசைகள்

குப்பை தொட்டி வைக்க சரியான திசைகள்

வாஸ்துப்படி குப்பைத் தொட்டியை வீட்டின் தெற்மேற்கு, வடமேற்கு திசைகளில் வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல், நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டுமென விரும்பினால், இந்த இரண்டு திசைகளில் குப்பை தொட்டியை வையுங்கள்.

நினைவில் கொள்ள வேண்டியைவை:

நினைவில் கொள்ள வேண்டியைவை:

* வீட்டில் வைக்கப்படும் குப்பை தொட்டியானது மூடியிருக்க வேண்டும் மற்றும் குப்பை தொட்டிகளை தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

* குப்பை தொட்டியை வீட்டின் நுழைவாயிலில் வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் வீட்டினுள் நுழையும் நேர்மறை ஆற்றல் ஓட்டமானது குப்பைகளால் எதிர்மறை ஆற்றலாக மாறி வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும். மேலும் குப்பை தொட்டியை பூஜை அறைக்கு அருகில் வைக்கக்கூடாது.

* படுக்கை அறையில் குப்பை தொட்டியை வைக்கக்கூடாது. முக்கியமாக குப்பை தொட்டியானது உடைந்திருந்தால், அதை உடனே மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which Direction Dustbin Should Be Placed According To Vastu In Tamil

Vastu Tips For Dustbin: Which direction dustbin should be placed at home according to vastu shastra? Read on to know more...
Story first published: Friday, January 27, 2023, 19:30 [IST]
Desktop Bottom Promotion