For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஷ் வாஷ் லிக்விட்டைக் கொண்டு எந்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்யலாம் தெரியுமா?

டிஷ் வாஷ் லிக்விட் வெறும் சமையலறையில் உள்ள பாத்திரங்களை மட்டும் சுத்தம் செய்வதற்கு மட்டும் தான் பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

|

முன்பெல்லாம் வீட்டில் உள்ள பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு டிஷ் வாஷ் சோப்பை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் தற்போது பாத்திரங்களை சுத்தம் செய்ய டிஷ் வாஷ் லிக்விட் வந்துள்ளது. இந்த லிக்விட் வந்த பின்னர் பலரது வீடுகளில் சோப்பிற்கு பதிலாக லிக்விட்டை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஷ் வாஷ் லிக்விட் வெறும் சமையலறையில் உள்ள பாத்திரங்களை மட்டும் சுத்தம் செய்வதற்கு மட்டும் தான் பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

Things You Can Clean With Dish Wash Liquid In Tamil

ஏனெனில் இந்த டிஷ் வாஷ் லிக்விட்டைக் கொண்டு நாம் நமது வீட்டில் உள்ள பல பொருட்களை சுத்தம் செய்யலாம். சொல்லப்போனால் இந்த டிஷ் வாஷ் லிக்விட்டைக் கொண்டு சுத்தம் செய்தால், அழுக்கு அல்லது கறைகளானது நாம் நினைத்திராத அளவில் வேகமாக நீங்கும். கீழே டிஷ் வாஷ் லிக்விட்டைக் கொண்டு எந்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்யலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீப்பை சுத்தம் செய்வதற்கு...

சீப்பை சுத்தம் செய்வதற்கு...

நாம் தினமும் பயன்படுத்தும் சீப்புக்களில் அழுக்குகள் அதிகமாக சேரும். சிலரது வீடுகளில் சீப்புக்களானது கருப்பாக, பிசுபிசுப்பாக இருக்கும். இந்த மாதிரியான சீப்புக்களை காணும் போது அதை தூக்கி எறிந்துவிடலாம் என்று பலருக்கும் தோன்றலாம். ஏனெனில் அதில் உள்ள எண்ணெய் பிசுக்கு அழுக்குகளை அகற்றுவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் டிஷ் வாஷ் லிக்விட் இருந்தால், அதை சில துளிகள் வெதுவெதுப்பான நீரில் ஊற்றி கலந்து, அந்நீரில் இந்த சீப்புக்களைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்தால், எளிதில் அழுக்குகள் நீங்கி, புத்தம் புதிது போன்று காட்சியளிக்கும்.

நகைகளை சுத்தம் செய்வதற்கு...

நகைகளை சுத்தம் செய்வதற்கு...

உங்களின் நகைகள் சற்று நிறம் மங்கி உள்ளதா? உங்கள் நகைகளை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்படியானால் ஒரு பௌலில் சிறிது டிஷ் வாஷ் லிக்விட்டை எடுத்து, அதில் சிறிது கார்பனேட்டட் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரில் நகைகளைப் போட்டு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து நகைகளை ஒரு பிரஷ் கொண்டு தேய்த்தால், நகைகளின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கி, நகைகள் புத்தம் புதிது போன்று ஜொலிக்கும்.

பழ ஈக்களை அழிக்க...

பழ ஈக்களை அழிக்க...

உங்கள் வீட்டின் சமையலறையில் பழ ஈக்கள் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் ஒரு கிண்ணத்தில் வினிகரை ஊற்றி, அதில் சில துளிகள் டிஷ் வாஷ் லிக்விட்டை ஊற்றி கலந்து வையுங்கள். இதனால் வினிகரானது ஈக்களை ஈர்க்கும் மற்றும் அந்த டிஷ் லிக்விட்டானது ஈக்களை வினிகரில் மூழ்கடித்து அழித்துவிடும். பின் ஈ தொல்லையே இருக்காது.

துணியில் உள்ள க்ரீஸ் கரைகளை அகற்ற...

துணியில் உள்ள க்ரீஸ் கரைகளை அகற்ற...

உங்கள் துணியில் எண்ணெய் சிந்திவிட்டதா? இம்மாதிரியான நிகழ்வு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இந்த எண்ணெய் பிசுபிசுப்பை துணிகளில் இருந்து எளிதில் அகற்ற முடியாது. ஆனால் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள துணியின் பகுதியில் டிஷ் வாஷ் லிக்விட்டை ஊற்றி தேய்த்து, பின் நீரில் அலசினால், துணியில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு எளிதில் நீங்கிவிடும். சமையலறையில் உள்ள கறித்துணி நிச்சயம் பலரது வீடுகளில் பிசுபிசுப்பாக இருக்கும். அந்த கறித்துணிகளில் உள்ள பிசுபிசுப்பை நீக்க இந்த முறையை முயற்சித்துப் பாருங்கள்.

கைத் துடைக்கும் துணிகளை சுத்தம் செய்ய..

கைத் துடைக்கும் துணிகளை சுத்தம் செய்ய..

பலரது வீடுகளில் வாஷ் பேஷனுக்கு அருகே கைகளைத் துடைக்கும் துணிகள் இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் வாஷிங் மெஷின் இருப்பதால், துணி துவைக்கும் சோப்பு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்நிலையில் கைத் துடைக்கும் துணிகளை தனியாக துவைக்க விரும்புபவர்கள், டிஷ் வாஷ் லிக்விட்டைக் கொண்டு சுத்தம் செய்யலாம். அதற்கு நீரில் சிறிது டிஷ் வாஷ் லிக்விட்டை ஊற்றி கலந்து, அந்நீரில் இந்த துணியை சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலசி வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Can Clean With Dish Wash Liquid In Tamil

Here are some things you can clean with dish wash liquid in tamil. Read on to know more...
Story first published: Saturday, November 26, 2022, 13:30 [IST]
Desktop Bottom Promotion