Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
New Year 2023 Vastu Tips: வாஸ்துப்படி, செல்வம் பெருக புத்தாண்டிற்கு முன் வீட்டில் இருந்து அகற்ற வேண்டியவைகள்!
வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் இருப்போரின் வாழ்வில் பலவிதமான தடையை ஏற்படுத்தும். ஆகவே அந்த மாதிரியான பொருட்களை புத்தாண்டிற்கு முன்பே வீட்டில் இருந்து அகற்ற வேண்டும்.
New Year 2023 Vastu Tips: வரக்கூடிய 2023 புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென அனைவருமே விரும்புவோம். வரவிருக்கும் புத்தாண்டில் பணப்பிரச்சனைகள், மன கஷ்டங்கள் எதுவும் வராமல் இருக்கவும், வீட்டில் செல்வம் பெருகவும், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்ய வேண்டும். ஒருவரது வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் காரணமாக இருக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

ஏனெனில் வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் இருப்போரின் வாழ்வில் பலவிதமான தடையை ஏற்படுத்தும். ஆகவே அந்த மாதிரியான பொருட்களை புத்தாண்டிற்கு முன்பே வீட்டில் இருந்து அகற்ற வேண்டும். இப்போது செல்வம் பெருக புத்தாண்டிற்கு முன் வீட்டில் இருந்து அகற்ற வேண்டியவைகள் குறித்து காண்போம்.

குப்பைகளை அகற்ற வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை சேமித்து வைக்கக்கூடாது. இது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தை பாதிக்கும். அதுவும் பழைய ஆடைகள், பயன்படுத்தாத காலணிகள், குப்பைகள் அல்லது துருப்பிடித்த பொருட்கள் போன்றவை எதிர்மறை ஆற்றலின் மூலமாகும். எனவே உங்கள் வீட்டில் இவை இருந்தால், புத்தாண்டிற்கு முன்னரே வீட்டில் இருந்து அகற்றுக்ஙள்.

சுத்தம் செய்ய வேண்டும்
வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான வீடுகளில் தான் லட்சுமி தேவி வாசம் செய்வாள். பெரும்பாலான வீடுகளின் மூலைகளில் சிலந்தி வலைகள் இருக்கும். வீட்டில் சிலந்தி வலைகள் இருந்தால், அது வாஸ்து குறைபாடுகளை உருவாக்கும். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எனவே 2023 ஆம் ஆண்டில் உங்கள் வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், வீட்டில் உள்ள சிலந்தி வலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

உடைந்த பொருட்களை அகற்றவும்
உங்கள் வீட்டில் உடைந்த சமையலறை பாத்திரங்கள், கண்ணாடிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், உடைந்த போட்டோக்கள், கடிகாரங்கள், விளக்குகள் போன்றவை இருந்தால், அவற்றை புத்தாண்டிற்கு முன்னரே வீட்டில் இருந்து அகற்றுங்கள். ஏனெனில் இந்த பொருட்கள் அனைத்திலும் எதிர்மறை ஆற்றல் நிரம்பியுள்ளது. இவற்றை வீட்டில் வைத்திருக்கும் போது, அது அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும் மற்றும் பண வருகையும் தடைப்படும். ஒருவேளை உங்கள் வீட்டில் உடைந்த தெய்வங்களின் சிலைகள் இருந்தால், அவற்றை ஓடும் நீரில் போடுங்கள்.

அகற்ற வேண்டிய படங்கள்
வீட்டில் மாமிசங்களை உண்ணும் விலங்குகளின் போட்டோக்கள் இருந்தால், அதை உடனே அகற்றுங்கள். ஏனெனில் இவை மனதில் எதிர்மறை உணர்வுகளை உருவாக்கும். இம்மாதிரியான விலங்குகள் உள்ள படங்கள் வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இது தவிர போர் காட்சிகள், காய்ந்த மரங்கள், சோகமான போட்டோக்கள், இரத்தக்கறை படங்கள் போன்றவற்றையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் வாஸ்துப்படி, இதுப்போன்ற படங்கள் அசுபமாக கருதப்படுகிறது.

நடராஜர் சிலை
சிவபெருமானின் நடராஜர் வடிவம் சிவனின் தாண்டவத்தைக் குறிக்கிறது. சிவனின் தாண்டவம் அழிவைக் குறிக்கிறது. ஏனெனில் சிவன் கோபம் கொண்ட போது தான் தாண்டவம் ஆடினார். எனவே நவராஜர் வடிவத்தை வீட்டில் வைத்திருந்தால், அது எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். எனவே இந்த சிலை உங்கள் வீட்டில் வைத்திருக்காதீர்கள். இல்லாவிட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications