Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைபவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
இந்த பழைய பொருட்கள் வீட்டுல இருந்தா உடனே தூக்கிப் போடுங்க... இல்ல பண பிரச்சனைய சந்திப்பீங்க..
கீழே ஒருவரது வீட்டில் வாஸ்து தோஷத்தை உண்டாக்கும் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.
வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே வீட்டினுள் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் இருப்போரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பலர் தங்களது வீடுகளில் தங்களை அறியாமலேயே வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் சில பொருட்களை சேர்த்து வைத்திருப்பார்கள். ஒருவரது வீட்டில் உபயோகப்படுத்தாத பொருட்கள் நீண்ட காலமாக இருந்தால், அது வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை பரப்புவதோடு மட்டுமின்றி, அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தையும் தடுக்கும்.

நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தாத பொருட்களை சேகரித்து வைத்திருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள். உங்களுக்கு எந்த பொருட்கள் எல்லாம் வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை பரப்புவதோடு, துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்பது தெரியாதா? கீழே ஒருவரது வீட்டில் வாஸ்து தோஷத்தை உண்டாக்கும் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லாவிட்டால் நிறைய பண பிரச்சனையை சந்திப்பீர்கள்.

பயன்படுத்தாத பழைய பொருட்கள்
பெரும்பாலானோர் தங்களின் வீட்டில் உள்ள ஸ்டோர் ரூமில் பயன்படுத்தாத பொருட்களை வைத்திருப்பார்கள். வாஸ்துப்படி பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இதனால் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி கோபமடைந்து, அந்த வீட்டில் இருந்து வெளியேறுவதோடு, செல்வம் நிலைத்திருக்காமல் செய்வார். எனவே நீங்கள் அதிக நிதி பிரச்சனைகளை சந்தித்தால், உங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை உடனே தூக்கி எறியுங்கள்.

பழைய டைரி
நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தாத டைரிகளை அதிகம் வைத்துள்ளீர்களா? அப்படியானால் அதை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள். ஏனெனில் வாஸ்துப்படி பழைய டைரிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தும்.

ஓடாத கடிகாரம்
உங்கள் வீட்டில் ஓடாத அல்லது உடைந்த கடிகாரம் இருந்தால், அதை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். ஏனென்றால் வாஸ்துப்படி, உடைந்த அல்லது ஓடாத கடிகாரமானது உங்களின் நல்ல நேரத்தை தடுத்து நிறுத்திவிடுவதோடு, உங்களின் முன்னேற்றத்திலும் இடையூறை ஏற்படுத்தும். ஆகவே இம்மாதிரியான கடிகாரத்தை தாமதிக்காமல் உடனே தூக்கி எறியுங்கள்.

பழைய செய்தித்தாள்
உங்களுக்கு தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியானால் அவ்வப்போது அந்த பழைய செய்தித்தாளை அப்புறப்படுத்துங்கள். வாஸ்துப்படி பழைய செய்தித்தாள்களை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலைப் பரப்பி, வீட்டின் சூழலை மோசமாக்கும்.

பழைய மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள்
நிறைய பேர் தங்கள் வீட்டில் பழைய ஓடாத மொபைல் போன, கேபிள்கள், பல்புகள், சார்ஜர்கள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி இந்த மாதிரியான பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டினுள் எதிர்மறை ஆற்றலைப் பரப்பும். மேலும் வீட்டில் உள்ளோர் நிறைய பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

சேதமடைந்த பூட்டுகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சேதமடைந்த அல்லது துருப்பிடித்த பூட்டுகளை வைத்திருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த பூட்டுகளால் அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றம் தடைபடுவதோடு, நிறைய பண பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே உடனே இம்மாதிரியான பூட்டுகளை உடனே தூக்கி எறியுங்கள்.



Click it and Unblock the Notifications