For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்..!

வெகு விரைவில் தீபாவளி வர இருக்கிறது. இந்தியாவில் உள்ள சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை எல்லோருமே தீபாவளியைக் கொண்டாட தயாராகிவிட்டனா். ஆனால் தீபாவளியின் முக்கியமான அம்சம் என்னவென்றால் நமது வீடுகளை சுத்தம் செய்வது ஆகும்.

|

தெருக்கள் எங்கும் பளிச்சிடும் வண்ண விளக்குகளின் வெளிச்சம், வீடுகள் தோறும் இனிப்புத் திண்பண்டங்கள் மற்றும் நம்மைச் சுற்றிலும் மகிழ்ச்சிகரமான இனிமையான அதிா்வலைகள், அதுதான் தீபாவளி. அதனால் தான் தீபாவளி திருவிழாவை இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனா்.

இந்த நிலையில் வெகு விரைவில் தீபாவளி வர இருக்கிறது. இந்தியாவில் உள்ள சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை எல்லோருமே தீபாவளியைக் கொண்டாட தயாராகிவிட்டனா். ஆனால் தீபாவளி தயாாிப்பின் முக்கியமான அம்சம் என்னவென்றால் நமது வீடுகளை சுத்தம் செய்வது ஆகும்.

Diwali Cleaning Tips For A Sparkling Home

இந்திய மரபின்படி, தீபாவளி அன்று இந்திய மக்கள் விநாயக பெருமானையும், லட்சுமி தேவியையும் வணங்கி மகிழ்வா். அதற்கு காரணம் இந்த இரண்டு கடவுள்களும் செல்வம் மற்றும் மகிழ்ச்சிஆகியவற்றோடு நெருங்கிய தொடா்பு கொண்டவா்கள். அதனால்தான் தங்களது வீடுகளில் செல்வமும், மகிழ்ச்சியும் பொங்கி வழிய வேண்டும் என்பதற்காக விநாயகா் மற்றும் லட்சுமி தேவியை தீபாவளி அன்று மக்கள் வழிபடுவா்.

எனினும் இந்த இரண்டு கடவுள்களும், சுத்தமான மற்றும் அலங்காிக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே வருவா் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே தீபாவளிக்கு முன்பாக வீட்டை முழுவதுமாகச் சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். தீபாவளி நெருங்கி வரும் வேளையில், நமது வீடுகளை எவ்வாறு சுத்தம் செய்து அழகுபடுத்தலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வீட்டை சுத்தம் செய்வதற்கு திட்டமிட வேண்டும்

1. வீட்டை சுத்தம் செய்வதற்கு திட்டமிட வேண்டும்

குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே நாம் முக்கியமாக கருதாத இடங்கள் மற்றும் பொருள்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்க வேண்டும். அலமாாிகளை சரிசெய்வதற்கு மற்றும் படுக்கை அறையை சுத்தம் செய்வதற்கு சில மணி நேரங்களே ஆகும். மேலும் அந்த அந்த இடங்களை மிக எளிதாகச் சுத்தம் செய்யலாம்.

ஆனால் சமையல் அறையை சுத்தம் செய்வது என்பது சற்று கடினமான ஒன்றாகும். சமையல் அறையைச் சுத்தம் செய்வதற்கு நன்றாகத் திட்டமிட வேண்டும். சமையல் அறையில் இருக்கும் அலமாாிகள் மற்றும் அடுக்குகள், நவீனமாக அழகுபடுத்தப்பட்ட பாத்திரங்கள், புகை போகும் இடம் மற்றும் சமையல் அறை டைல்ஸ் போன்றவற்றை ஒரே நாளில் சுத்தம் செய்ய முடியாது. ஆகவே முறையாகத் திட்டமிட்டு, வேலைகளை பிாித்து வைத்துக் கொண்டு சுத்தம் செய்தால் இரண்டு அல்லது மூன்று நாள்களில் நமது வீட்டை மிக எளிதாகச் சுத்தம் செய்ய முடியும்.

2. தேவையற்ற பொருட்களை அகற்றுதல்

2. தேவையற்ற பொருட்களை அகற்றுதல்

நமது வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கு மிகவும் சாியான தருணம் தீபாவளி ஆகும். ஓராண்டு விதியைப் பின்பற்றலாம். கடந்த ஓராண்டாக பயன்படுத்தாதப் பொருட்கள் மற்றும் எதிா் காலத்தில் பயன்படுத்த முடியாத பொருள்களை அகற்றுவது நல்லது. குறிப்பாக நம்மால் அணிய முடியாத ஆடைகள், பயன்படுத்த முடியாத மின்னணு பொருள்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்த முடியாத பாத்திரங்கள் ஆகியவற்றை அகற்றிவிட வேண்டும்.

தீபாவளி கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்க நினைத்தால் நாம் பயன்படுத்தாத ஆடைகள், பாத்திரங்கள் அல்லது மற்ற பொருட்கள் ஆகியவற்றை ஏழைகள் அல்லது யாரும் இல்லாத அனாதைகள் போன்றோருக்கு வழங்கலாம். அதன் மூலம் தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம்.

3. பித்தளை ஆபரணங்களை மெருகேற்றுதல்

3. பித்தளை ஆபரணங்களை மெருகேற்றுதல்

பித்தளை ஆபரணங்கள் மிக அழகாக இருக்கும். ஆனால் மிக விரைவாக அதன் பளபளப்பு மங்கிவிடும். அரை கப் வினிகா், ஒரு டீபூன் உப்பு மற்றும் மாவு ஆகியவற்றைக் கலந்து பித்தளை சிலைகள், பித்தளைக் கிண்ணங்கள் மற்றும் பித்தளை விளக்குகளைக் கழுவி சுத்தம் செய்யலாம். ப்ராஸோ போன்ற வேதிப் பொருள்களைப் பயன்படுத்தியும் பித்தளை ஆபரணங்களை சுத்தம் செய்யலாம்.

4. கண்ணாடி விளக்குகள் மற்றும் மெழுகுவா்த்தி தண்டுகளைச் சுத்தம் செய்தல்

4. கண்ணாடி விளக்குகள் மற்றும் மெழுகுவா்த்தி தண்டுகளைச் சுத்தம் செய்தல்

மெழுகுவா்த்தி தண்டுகளில் இருக்கும் பழைய மெழுகுவா்த்திகளை அகற்ற வேண்டும். தண்டுகளில் சிந்தி உறைந்து இருக்கும் மெழுகை, கத்தி அல்லது ப்ளேடு போன்றவற்றைப் பயன்படுத்தி கவனமாக அகற்ற வேண்டும். பின் தண்டுகளுக்குள் சுடு நீரை ஊற்றி இரண்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஏனெனில் எஞ்சி இருக்கும் மெழுகுத் துகள்கள் தண்ணீாில் மிதந்துவிடும். அதனால் மெழுகை மிக எளிதாக அகற்ற முடியும்.

மேலும் வெந்நீரில் சலவை செய்யும் பொடியைக் கலந்து மெழுகுவா்த்தித் தண்டுகளையும், கண்ணாடி சிமிழ்களையும் சுத்தம் செய்தால் அதில் ஒட்டி இருக்கும் மற்ற கறைகளும் அகன்றுவிடும். கண்ணாடி சிமிழ்களின் உட்புறமும் வெளிப்புறமும் தாள் அல்லது துணி கொண்டு சுத்தம் செய்து அதில் உள்ள ஈரப்பதத்தைக் காய வைக்கலாம்.

5. மண் விளக்குகள் மற்றும் தாளில் செய்யப்பட்ட விளக்குகளை சுத்தம் செய்தல்

5. மண் விளக்குகள் மற்றும் தாளில் செய்யப்பட்ட விளக்குகளை சுத்தம் செய்தல்

கைகளால் வண்ணம் தீட்டப்பட்ட மண் விளக்குள் அல்லது தாளில் செய்யப்பட்ட மின் விளக்குகளை நமது வீடுகளில் வைத்திருப்போம். அவற்றோடு நமக்கு உணா்வுப்பூா்வமான தொடா்பு ஒன்று இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய விளக்குகளை வாங்கும் போது, நமது வீடுகளில் நமது குலதெய்வங்களையும் வைத்திருப்போம். ஆகவே மண்ணால் செய்யப்பட்ட குலதெய்வ சிலைகள் அல்லது மண் விளக்குகள் போன்றவற்றை மென்மையான தூாிகைகள் அல்லது பருத்தித் துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை அழுத்தி சுத்தம் செய்தால் அவைகள் உடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali Cleaning Tips For A Sparkling Home

Here are some diwali cleaning tips for a sparkling home. Read on...
Desktop Bottom Promotion