For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வண்டியை பார்க் பண்ணறதுக்கும் வாஸ்து இருக்காம்... நீங்க இந்த திசைல தான் நிறுத்திறீங்களா?...

இந்த காலத்தில் வண்டி இல்லாத வீடுகளே இல்லை. வண்டி நிறுத்துதற்கான இடம் என்பது மிக முக்கியமான ஒன்று. இது வண்டி திருடு போகாமலும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் அமைய வேண்டும். அதற்கும் வாஸ்து முக்கியம்.

|

"வாஸ்து" என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் அம்சங்களையும் பற்றி விளக்கும் வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறையாகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

vastu tips in tamil

வாஸ்து சாஸ்திரம் உங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல உங்கள் வாகனத்தை எங்கே நிறுத்த வேண்டும். அதற்கான தகுதியான இடம் எங்கே அமைய வேண்டும் என்பதையும் கூறுகிறது. நீங்கள் வாஸ்து சாஸ்திரப்படி வாகன நிறுத்த இடத்தை அமைக்கும் போது வாகன திருட்டு போன்றவை இல்லாமல் உங்கள் வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கும்.மேலும் எங்கு சென்றாலும் நாம் உபயோகிப்பது வாகனத்தை தான். எனவே வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் பார்க்கிங் இடத்தை அமைக்கலாம். அதை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திசை

திசை

உங்கள் வாகனத்தை கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் நிறுத்தி வைக்க வேண்டும். பார்க்கிங்கை மேற்கில் கட்டினால் தென்மேற்கு பகுதி காலியாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தெற்கில் அமைத்து தென்மேற்கு பகுதியை காலியாக விடலாம்.

மேற்கூரை

மேற்கூரை

Image Courtesy

பார்க்கிங் இடத்தின் மேற்கூரையானது வடக்கு நோக்கி கீழே சரிந்து காணப்பட வேண்டும். வாகனத்தை கண்டிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நிறுத்த வேண்டும்.

இந்த திசைகள் வேண்டாம்

இந்த திசைகள் வேண்டாம்

வாகனத்தை தெற்கு நோக்கி நிறுத்தவே கூடாது. அதே மாதிரி வட கிழக்கு மற்றும் தென் மேற்கு மூலையில் நிறுத்தக் கூடாது.

வாஸ்துப்படி பார்க்கிங் இடத்தின் நுழைவு வாயில் கதவு கிழக்கு அல்லது தெற்கில் இருக்க வேண்டும். பார்க்கிங் இடத்தின் கதவின் உயரமானது சுவர்களை விட குறைவாக இருக்க வேண்டும்.

தகுந்த திசை

தகுந்த திசை

உங்கள் வாகனங்களை நிறுத்த வடமேற்கு திசை சிறந்தது.

கார் ஷெட்

கார் ஷெட்

கார் ஷெட் அமைக்கும் போது அது வீட்டையோ அல்லது காம்பவுன்ட் சுவரையோ தொட்டுக்கொண்டு இருக்காமல் தனியாக அமைப்பதே சிறந்தது.

இடவசதி

இடவசதி

கார் நிறுத்திய பிறகு சுற்றிலும் 2 முதல் 3 அடி அளவுக்கு அல்லது குறைந்தது 16 அங்குலம் இடைவெளி இருப்பது நல்லது. இது உங்கள் கார்களை எளிதாக வெளியே எடுத்துச் செல்ல உதவும்.

அகச் சிவப்பு கதிர்கள்

அகச் சிவப்பு கதிர்கள்

Image Courtesy

தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் காரை நிறுத்தி வைப்பது நல்லது கிடையாது. ஏனென்றால் அகச்சிவப்பு கதிர்களால் காரில் தீப்பற்ற வாய்ப்புள்ளது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

நிறங்கள்

நிறங்கள்

Image Courtesy

உங்கள் பார்க்கிங் இடத்திற்கு வெளிர் நிறங்களை பூசுவது நல்லது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்கள் நன்மை சேர்க்கும்.

தனிக் கூரை

தனிக் கூரை

Image Courtesy

பார்க்கிங் இடவசதி இல்லாதவர்கள் தனிக் கூரை அமைத்து கார்களை நிறுத்துவதே நல்லது. அதுவும் வீட்டுடன் ஒட்டியிருக்க கூடாது.

தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள்

பொதுவாக நீங்கள் தொழிலதிபராக இருந்தால் வடக்கு நோக்கி காரை நிறுத்துவது நல்லது. அதே நீங்கள் அரசியல் வாதி அல்லது அரசு அதிகாரிகள் என்றால் கிழக்கு நோக்கி நிறுத்தி கொள்ளுங்கள்.

ஈசான்ய மூலை வேண்டாம்

ஈசான்ய மூலை வேண்டாம்

நீர் மூலதார திசையான வடகிழக்கு ஈசான்ய மூலையில் பார்க்கிங் வசதி வேண்டாம். இது அறிவியல் பூர்வமாகவும் உண்மையாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu tips: Park your vehicle in the right direction

Parking area is important now days for keeping car and other vehicles at place and safe from being theft.
Story first published: Friday, July 6, 2018, 13:04 [IST]
Desktop Bottom Promotion