வீட்டின் டைல்ஸ் தளத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா?

Posted By: Staff
Subscribe to Boldsky

சுத்தமான மற்றும் கிருமிகள் இல்லாத வீட்டை விரும்பாதவர்கள் யாருமில்லை. உங்களுடைய வீட்டின் தளம் பளபளப்பாக இல்லையென்றால், ஒட்டு மொத்த வீட்டிற்கும் செய்திருக்கும் சிறந்த அலங்காரங்கள் கூட பயனற்றதாகி விடும் உங்கள் வீட்டிலுள்ள அனைத்து அறைகளிலும் தரைத்தள டைல்ஸ்கள் கண்டிப்பாக இருக்கும்.

வரவேற்பறை, சமையலறை, குளியலறை என்றும், மேலும் உங்களுடைய துணிகளை துவைக்கும் இடத்திலும் கூட டைல்ஸ்கள் இருக்கும். தினந்தோறும் பயன்பாட்டில் இருக்கக் கூடிய இந்த டைல்ஸ்கள், தொடர்ச்சியான பயன்பாட்டிற்குப் பிறகு கறை படிந்தோ அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும் இடங்களாகவோ ஆகி விடுகின்றன.

அழுக்கான டைல்ஸ்களால் அந்த அறையும் கூட சோகையிழந்து, விரும்பத் தகாத இடமாகிவிடும். இவ்வாறான இடங்களை அப்படியே விட்டு விடக் கூடாது. அவற்றை சுத்தம் செய்வதற்காக சற்று நேரத்தைச் செலவிட்டு, அவை மீண்டும் பளபளப்பாக இருக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு டைல்ஸ்களை பளபளப்பாக மாற்றுவதற்கு எண்ணற்ற குறிப்புகள் உள்ளன.

எனினும், உங்களுக்கு இது பற்றித் தெரியாமல் இருந்தால், இனிமேல் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. மேற்கொண்டு இந்த கட்டுரையைப் படித்து, வேண்டியமட்டிலும் டைல்ஸ்களை பளபளப்பாக்கி விடுங்கள்.

டைல்ஸ்களை சுத்தம் செய்வதற்கான பல்வேறு பொருட்களும் சந்தைகளில் கிடைக்கின்றன, ஆனால் இதில் எந்த வகை உங்களுடைய டைல்ஸ்களுக்குப் பொருந்தும் என்ற விஷயம் தெரியாமல் இருக்கலாம். மேலும், இவ்வாறு சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் சற்றே விலை கூடுதலானவையாகவும், வீரியம் மிக்க வேதிப்பொருட்களை கொண்டவைகளாகவும் இருப்பதால், உங்களுடைய டைல்ஸ் தளம் வண்ணம் மற்றும் பொலிவை இழந்து விடவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே, வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் சில பொருட்களை வைத்து உங்களுடைய டைல்ஸ்களை சுத்தம் செய்வது மட்டுமே இதற்கான சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு வீட்டிலேயே இயற்கை முறையில் கிடைக்கக் கூடிய மற்றும் டைல்ஸ்களை சுத்தம் செய்யும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா?

அம்மோனியா

ஒரு வாளியில் சூடான தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் ¼ கோப்பை அம்மோனியாவை கலக்கவும். பிறகு துடைப்பானை எடுத்து இந்த கலவையில் நன்றாக முக்கி எடுத்த பின்னர், நன்றாக பிழியவும்.

How To Keep The Floor Tiles Shining?

இப்பொழுது டைல்ஸ் தரையை துடைத்து கிருமிகளை இல்லாமல் செய்யுங்கள். தரையிலுள்ள டைல்ஸ்களில் மஞ்சள் கறைகள் இருந்தால், அவற்றின் உண்மையான பளபளப்பைக் கொண்டு வர அம்மோனியா தான் மிகச்சிறந்த தீர்வாகும். இது தரையின் டைல்ஸ்களை சுத்தம் செய்ய உதவும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

போரக்ஸ், வினிகர் மற்றும் அம்மோனியா

அழுக்குகள் அல்லது மோசமான சோப்பு துகள்களால் உங்களுடைய தரைதளம் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை களைவதற்கான சிறந்த தீர்வாக இருப்பவை ¼ கோப்பை போரக்ஸ், ½ கோப்பை வினிகர் மற்றும் ½ கோப்பை அம்மோனியா ஆகியவையே.

How To Keep The Floor Tiles Shining?

ஒரு காலன் சூடான தண்ணீரில் இவற்றை நன்றாக கலக்கவும். துடைப்பானைக் கொண்டு தரை தளத்தை நன்றாக துடைக்கவும். இதன் பின்னர் எஞ்சியிருப்பவற்றை கழுவி விடவும். இது மிகவும் சரியான பலன்களைக் கொடுத்து உங்களுடைய டைல்ஸ்களை பளபளக்கச் செய்யும் வழியாகும்.

வினிகர்

ஒரு வாளியில் ஒரு கேலன் தண்ணீரையும், அதனுடன் காய்ச்சி வடிகட்டிய வினிகரை ஒரு பகுதி கலக்கவும். வினிகர் தண்ணீருடன் நன்றாக கலக்கும் வரையிலும், கலவையை நன்றாக கலக்கவும், வினிகர் உங்களுடைய தரையில் கிருமி நாசினியாகவும், தரை நறுமணத்துடன் இருக்கவும் உதவுகிறது.

How To Keep The Floor Tiles Shining?

வினிகர் கலக்கப்பட்ட தண்ணீரை கொண்டு உங்களுடைய தரையை நன்றாக துடைக்கவும். இவ்வாறு செய்யும் போது, அதிக தண்ணீர் வராதவாறு துடைப்பான நன்கு பிழிந்து விடவும்.

சமையல் சோடா

உங்களுடைய தரை தள டைல்ஸ்களில் மோசமான கறைகள் இருந்தால், அவற்றை சுத்தம் செய்ய சமையல் சோடா மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். சம அளவில் சமையல் சோடாவையும், சூடான தண்ணீரையும் கலவையாக கலந்து பசை போல செய்ய வேண்டும்.

How To Keep The Floor Tiles Shining?

இப்பொழுது, ஒரு டூத் பிரஸ்-ஐ எடுத்து, இந்த சமையல் சோடா பேஸ்ட்-ல் தடவி எடுத்து, டைல்ஸ்களிலுள்ள ஓட்டைகள் மற்றும் இடுக்குகளில் தடவி விடவும். 10 நிமிடங்கள் கழிந்த பின்னர், சூடான தண்ணீரைக் கொண்டு தரை தள டைல்ஸ்களை கழுவி விடவும். கறைகளில்லாத தரை தரள டைல்ஸ்களாக பளிச்சிடும் வரையிலும் இதை தொடர்ந்து செய்யவும்.

தண்ணீர் மற்றும் ஹைட்ரஜன் பேராக்ஸைடு

உங்கள் வீட்டில் செராமிக் தரை தள டைல்ஸ்கள் இருந்தால், அவற்றிலுள்ள விரிசல்கள் மற்றும் ஓட்டைகளை அடைக்க தண்ணீரையும், ஹைட்ரஜன் பேராக்ஸைடையும் சம அளவில் கலந்து எடுத்துக் கொள்ளவும்.

How To Keep The Floor Tiles Shining?

இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக் கொண்டு, ஓட்டை இருக்கும் இடத்தில் தேவையான அளவிற்கு அடிக்கவும். 30 நிமிடங்கள் பொறுமையாக காத்திருங்கள் மற்றும் தேவையென்றால் இந்த செயல்பாட்டை மீண்டு செய்யவும்.

மர டைல்ஸ்களை டைல்ஸ் சுத்திகரிப்பான்

உங்களிடம் மர தரைதள டைல்ஸ்கள் இருந்தால், மர டைல்ஸ் சுத்திகரிப்பான் தான் சரியான தீர்வாக இருக்கும். இதைக் கொண்டு களையிழந்து கிடக்கும் உங்களுடைய டைல்ஸ்களை துடைக்கும் போது, அவை இழந்த பளபளப்பை மீண்டும் பெறுகின்றன.

பாத்திரம் கழுவும் சோப்

சிறதளவு பாத்திரம் கழுவும் சோப்-ஐ எடுத்து தண்ணீரில் கலக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையைக் கொண்டு கிரீஸ் கறை படிந்த உங்களுடைய டைல்ஸ்களை சுத்தம் செய்திட முடியும்.

How To Keep The Floor Tiles Shining?

இந்த கலவையைக் கொண்டு உங்களுடைய தரை தளத்தை நீங்கள் துடைத்த பின்னர், மென்மையான ஸ்பாஞ்சைக் கொண்டு அவற்றை துடைத்துப் பாருங்கள்... பளபளப்பை உணருங்கள்!

Read more about: home, improvement, வீடு
English summary

How To Keep The Floor Tiles Shining?

Take a look at the best ways to keep your floor tiles shining. As these are the home remedies that help you to keep your flour tiles shining.
Story first published: Monday, September 26, 2016, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter