வீட்டில் உள்ள குழந்தைகளின் பொம்மையை துவைக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகளுக்கு பொம்மை என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் கரடி பொம்மையை வாங்கி வீட்டையே நிரப்பிவிடுவார்கள். அப்படி அவர்கள் வாங்கும் கரடி பொம்மை அல்லது இதர பொம்மைகள் நாட்கள் செல்ல செல்ல தூசிகள் படிந்து நிறம் மாறி, கிருமிகளின் இருப்பிடமாக மாற ஆரம்பிக்கும்.

அந்த பொம்மையை குழந்தைகள் பயன்படுத்தினால் அவர்களுக்கு சருமத்தில் மட்டுமின்றி உடலினுள்ளும் பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே வீட்டில் உள்ள பொம்மையை அவ்வப்போது துவைத்து பராமரிக்க வேண்டும். பலருக்கு பொம்மையை எப்படி துவைப்பது என்று தெரியாது. அதனால் அதனை துவைக்காமல் அப்படியே தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை தூசிகள் படிந்துள்ள குழந்தைகளின் பொம்மையை பாதுகாப்புடன் துவைக்க சில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதன்படி துவைத்தால், பொம்மைகள் பாழாவதைத் தடுக்கலாம்.

Smart Hand Washing Tips For Your Soft Toys

* முதலில் பொம்மையை துவைப்பதற்கு முன், அதில் ஏதேனும் ஓட்டை உள்ளதா என்று சோதித்துப் பார்த்து, ஓட்டை இருந்தால், அவ்விடத்தில் தையல் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்னர் பொம்மையை புத்தம் புதிது போல் வெளிக்காட்ட, 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடருடன், 2 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை பையால் பொம்மையின் மேல் தேய்க்க வேண்டும். இதனால் பேக்கிங் பவுடரானது பொம்மையை சுத்தப்படுத்தும்.

Smart Hand Washing Tips For Your Soft Toys

* இல்லாவிட்டால், பொம்மையில் படிந்துள்ள கறைகளைப் போக்க 3 டேபிள் ஸ்பூன் நீர்ம டிஷ் வாஷ், 1/4 டீஸ்பூன் அம்மோனியா மற்றும் 3/4 கப் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக நன்கு கலந்து, டூத் பிரஷ் கொண்டு கறைகள் படிந்த இடத்தில் தேய்க்க வேண்டும். முக்கியமாக அப்படி தேய்க்கும் போது, கலவை காய்வதற்குள், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

* வேண்டுமெனில் நீரில் சிறிது வினிகர் சேர்த்து நன்கு கலந்து, அந்த கலவையைக் கொண்டு பொம்மையைத் துடைத்து எடுத்தாலும், கறைகள் அகலும்.

* மற்றொரு முறை, 1/2 கப் ஆல்கஹாலை, 1/4 கப் நீருடன் கலந்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நீர்ம டிஷ் வாஷை சேர்த்து நன்கு கலந்து, பின் கறைப்படிந்த இடத்தில் தேய்த்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

முக்கியமாக பொம்மையானது நார் இழை அல்லது காகிதம் கொண்டு நிரப்பப்பட்டிருந்தால், அவற்றை துவைக்க முடியாது.

English summary

Smart Hand Washing Tips For Your Soft Toys

Usually washing stuffed toys can be tricky, if you don’t know how to remove the dirt or grime. Here are some of the best ways to wash soft toys.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter