வீட்டில் வரும் 10 வகையான வாடைகளும்... அதை போக்கும் வழிகளும்...

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

நம்மால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் துர்நாற்றம் மற்றும் கெட்ட வாடையை பொறுத்துக் கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியாது. அதனால் நாம் குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கவே நாம் அனைவரும் முயற்சி செய்வோம். நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பும் போது, உங்கள் வீடு நற்பதமான வாசனையுடன் இருக்குமா அல்லது வாடை அடிக்குமா? அல்லது இந்த வாடை நீடித்து உள்ளதா?

நன்றாக யோசியுங்கள்! உங்கள் குளியலறை? உங்கள் கழிப்பறை? ஏன் வாகனம் நிறுத்தும் அறை? இங்கிருந்து எல்லாம் கெட்ட வாடை வருகிறதா? உங்கள் வீட்டில் இம்மாதிரி கெட்ட வாடைகள் வருகையில் அது எப்படி வருகிறது, அதை எப்படி நிறுத்துவது என்பதெல்லாம் பலருக்கும் தெரிவதில்லை. இப்போது அதற்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது. அது தான் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடாவில் கிருமிநாசினி குணங்கள் உள்ளது. கூடுதலாக குளிர்ச்சியான குமிழ் உண்டாக்குகிற தன்மையும் உள்ளது. அமிலத்துடன் சேரும் போது தான் இதிலிருந்து நுரை ஏற்படும்.

கெட்ட வாடைகளை பேக்கிங் சோடாவை கொண்டு எப்படி நீக்குவது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாமா? இதோ 10 வகையான வாடைகளும்... அதை போக்கும் வழிகளும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கப்படிக்கும் கழிப்பறை

கப்படிக்கும் கழிப்பறை

வீட்டை சுத்தப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் டிப்ஸ் பற்றி உங்களிடம் கூறாமல் இருப்பதற்கு காரணம் உள்ளது - ஆமாம், அந்த விஷயம் தெரிந்து விட்டால் உங்கள் அவர்கள் இனி தேவைப்பட மாட்டார்கள் அல்லவா? கழிப்பறையை சுத்தப்படுத்த, முதலில் கோப்பையை தண்ணீர் ஊற்றி கழுவவும். பின் அதனுள் ஒரு கப் பேக்கிங் சோடாவை போட்டு, அதன் மூடியை மூடி விடவும். அதன் நுரையே கறைகளை தேய்க்கும். ஒரு மணிநேரம் கழித்து, நீரை ஊற்றி கழுவவும்.

துர்நாற்றம் வீசும் பூனை இருக்கும் அறை

துர்நாற்றம் வீசும் பூனை இருக்கும் அறை

பூனைகள் மிகவும் நாற்றம் பிடித்த மிருகங்கள்; குறிப்பாக அறைகளில் அவைகள் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போது. எப்போதாவது பூனை அசிங்கப்படுத்திய அறையை அல்லது இடத்தை கழுவியுள்ளீர்களா? அதை விட பெரிய கொடுமை இருக்க முடியாது. இந்த அவஸ்தையை அனுபவித்தவர்களுக்கே அந்த கஷ்டம் புரியும்.

கவலையை விடுங்கள்! உங்கள் கஷ்ட காலம் எல்லாம் போய் விட்டது. பூனை இருக்கும் அறைக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு கை பேக்கிங் சோடாவை எடுத்து, அந்த அறையில், பூனை அசிங்கப்படுத்திய இடங்களில் தினமும் காலையில் தூவி விடுங்கள். இது உங்களையோ அல்லது பிராணியையோ எந்த விதத்திலும் பாதிக்காது. அதன் வாசனையும் அதிகமாக இருக்காது. சரி எவ்வளவு தூவ வேண்டும்? முதலில் 1/4 கப் மட்டும் தூவுங்கள். பின் அறையை விட்டு வெளியேறுங்கள். இன்னமும் வாடை அடித்தால், இன்னொரு 1/4 கப் சேர்த்துக் கொள்ளுங்கள். வாடை கண்டிப்பாக நீங்கும். ஆனால் ஒரு முறை செய்தால் வாழ்நாள் முழுவதும் வாடை மீண்டும் வராது என்றெல்லாம் இல்லை.

வாடையடிக்கும் கூலர் மற்றும் ப்ளாஸ்க்

வாடையடிக்கும் கூலர் மற்றும் ப்ளாஸ்க்

இந்த இரண்டு வகையான பாட்டில்களிலும் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை நிரப்புங்கள். ப்ளாஸ்க் என்றால் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் 3 கப் தண்ணீர் கலந்திடவும். இதனை கலந்து 20 நிமிடங்களுக்கு ப்ளாஸ்க்கை அப்படியே வைத்து விடுங்கள். பின் அலசுங்கள். இதுவே கூலர் என்றால், பாட்டில் முழுவதும் தண்ணீரை நிரப்பி அதனுடன் ½ கப் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும். அதனை மூடி விட்டு, ஒரு மணிநேரம் கழித்து அலசவும்.

கெட்ட நாற்றத்தை கொண்ட வாய்க்கால்

கெட்ட நாற்றத்தை கொண்ட வாய்க்கால்

கெட்ட நாற்றத்தை கொண்ட வாய்க்காலில் ஒரு வாரத்திற்கு சில டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தினமும் சில முறை போடவும். ஒரு மணிநேரம் கழித்து, அதன் மீது வெந்நீரை சற்று நேரம் ஊற்றவும். சிறிது நேரத்திலேயே வாடை நீங்கி விடும்.

வேக்யூம் கிளீனரில் இருந்து வரும் துர்நாற்றம்

வேக்யூம் கிளீனரில் இருந்து வரும் துர்நாற்றம்

பூனை அசுத்தம் செய்த அறையை சுத்தப்படுத்தி விட்டீர்களா? இனி அது உங்கள் ஹாலில் உங்கள் கார்பெட் மீது அசுத்தம் செய்தால் என செய்வீர்கள்? மீண்டும் பேக்கிங் சோடா தான் உங்களுக்கு கை கொடுக்கும். அதனை கார்பெட் மீது தூவவும். அது சிறிது நேரத்திற்கு கார்பெட் மீது இருக்கட்டும். ஒரு மணிநேரத்திற்கு பின் அதன் மீது வேக்யூம் கிளீனரை வைத்து சுத்தப்படுத்துங்கள். இதனால் கார்பெட் மட்டுமல்லாது வேக்யூம் கிளீனரும் சுத்தமாகும்.

வாடையடிக்கும் ஷூக்கள்

வாடையடிக்கும் ஷூக்கள்

1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஷூக்களின் மீது தூவுங்கள். டென்னிஸ் ஷூக்களை வாஷிங் மெஷினில் போட்டு கழுவலாம் தான். அதன் பின் பேக்கிங் சோடா போட்டு கழுவினால் முழுமையாக வாடை இல்லாமல் இருக்கும்.

துர்நாற்றம் வீசும் குளிர் சாதனப்பெட்டி

துர்நாற்றம் வீசும் குளிர் சாதனப்பெட்டி

மிகவும் சுலபமானது இது. அரை கப் பேக்கிங் சோடாவை ஒரு கிண்ணத்தில் போடவும். அந்த கிண்ணத்தை குளிர் சாதனப்பெட்டியில் வைத்திடவும். பழைய உணவுகளினால் ஏற்படும் வாடையை இது நீக்கும். முதலில் இதை செய்யுங்கள்.

வெங்காயம் நறுக்கிய பிறகு வாடையடிக்கும் கைகள்

வெங்காயம் நறுக்கிய பிறகு வாடையடிக்கும் கைகள்

வெங்காயம் என்ற அபூர்வ உணவை பற்றியும், புற்று அணுக்களை அழிக்கும் அதன் திறனை பற்றியும், நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனை அதிகமாக உண்ணுவதற்கு பல காரணங்கள் உள்ளது. வெங்காயத்தை நறுக்கிய பிறகு, சில டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் நீரில் போடவும். உங்கள் கைகளை அதை கொண்டு கழுவவும். அதன் பின் கைகளை கழுவ மறந்து விடாதீர்கள்.

மீட்டிங் செல்வதற்கு முன்பு பயமுறுத்தும் வாய் துர்நாற்றம்

மீட்டிங் செல்வதற்கு முன்பு பயமுறுத்தும் வாய் துர்நாற்றம்

வெங்காயங்கள் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு, சிறந்த மௌத் வாஷைக் கொண்டு உங்கள் வாயை அலசும் நேரம் வந்துவிட்டது. அந்த மௌத் வாஷ் வேறு எதுவும் அல்ல; அது தான் பேக்கிங் சோடாவுடன் கலக்கப்பட்ட தண்ணீர். இதனை வாயில் ஊற்றி வாய் முழுவதும் சில நிமிடங்களுக்கு சுழற்றவும். இதனால் உங்கள் வாயில் அடிக்கும் துர்நாற்றம் நீங்கும். அதனை விழுங்கி விடாமல் வெளியே துப்பி விடுங்கள்.

அக்குளில் இருந்து வரும் வாடை

அக்குளில் இருந்து வரும் வாடை

அக்குள் வாடையை போக்க இயற்கையான டியோடரண்ட் வேண்டுமானால், ½ கப் பேக்கிங் சோடாவை உங்களுக்கு பிடித்தமான அதிமுக்கிய எண்ணெய் 6 சொட்டுக்களை கலந்திடவும். இந்த அதிமுக்கிய எண்ணெய் உண்ணத்தக்க வகையில் இருக்க வேண்டும்; செயற்கை சேர்க்கம் இருக்கக் கூடாது. லாவெண்டர், ரோஸ், ஒய்லாங் ஒய்லாங் அல்லது தோட்ட செடி வகை எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஏன் இவையனைத்தையும் கூட ஒன்றாக கலக்கலாம். அதனை கலந்து ஒரு பெர்ஃப்யூம் ஜாடியில் போட்டு வைக்கவும். இதனை உங்கள் பையில் ஒரு ப்ரஷ்ஷுடன் வைத்துக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா வாடையை நீக்குவது மட்டுமல்லாது சிக்கனமானதும் கூட. புதுமையாக யோசியுங்கள். உங்களுக்காக பேக்கிங் சோடா பலவற்றை செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Really Bad Smells Erased With Baking Soda

Baking soda has antiseptic properties as well as a really cool effervescent quality to it. It only bubbles in the presence of an acid. How To Eliminate Bad Smells with Baking Soda. Here’s the list of 10 pretty stinky smells and what to do about them: