வீட்டை மழையிலிருந்து பாதுகாக்கும் சில வழிகள்!!!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

மழைக்காலத்தில் உடைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தி பாதுகாப்பு அளிக்காமல், உங்கள் வீட்டின் மீதும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். ஏனெனல் உங்கள் வீட்டு அறைகலன்கள், அவற்றைப் பாதுகாக்கும் உறைகள், நகை மற்றும் அணிகலன்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் என அனைத்துமே ஈரத்தினால் பாதிக்கப்பட்டு சேதமடைய வாய்ப்புள்ளது.

எனினும், சிறிது அக்கறை இதில் எடுத்துக் கொண்டால் நம்முடைய பொருட்களை இந்த சேதத்திலிருந்து பாதுகாக்கலாம். எப்படி என்று பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துணி மற்றும் அலமாரிகள்

துணி மற்றும் அலமாரிகள்

அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை துணிகளை உலர்த்துவது. துணிகள் சரியாகக் காயவில்லை என்றால், அவற்றின் மீது ஒரு வித வாடை வீசுவதோடு அடுத்த முறை நீங்கள் துவைக்கும் வரை அந்த வாடை நீங்காத அளவிற்கு கடுமையாக இருக்கும். உங்கள் துணி வைக்கும் அலமாரி அல்லது பெட்டகங்களை ஈரமற்று வைக்க, ஈரத்தை உறிஞ்சக்கூடிய ரசக்கற்பூரங்களைப் போட்டு வையுங்கள். உங்கள் அலமாரியை நீங்கள் சுத்தமாக வைக்காவிடில், பூஞ்சை பிடிக்கத் தொடங்கி கெட்ட வாடை வீசும். துணியில் உள்ள அழுக்குகளை நல்ல தூய்மையாக்கும் பொருட்களை கொண்டு நீக்கவும். சரியாக உலராத துணிகளை அலமாரியில் வைக்க முயலாதீர்கள். துணிகளை அவ்வப்போது உலர்த்துங்கள்.

மரச்சாமான்கள்

மரச்சாமான்கள்

பூச்சி மற்றும் செல்லரிப்பு ஆகியவை மழைக்காலத்தில் வரும் மிகப்பெரிய தொல்லைகள். கற்பூர வில்லைகள், கிராம்பு அல்லது வேப்பிலை ஆகியவை இதற்குச் சரியான தீர்வாக இருக்கும். நீங்கள் தற்போது புதிய மரச்சாமான்களை வாங்க நினைத்திருந்தால் பூஞ்சை அல்லது செல்லரிப்பு இல்லாத சாமான்களாக பார்த்து வாங்குங்கள். தேவைப்பட்டால், சாமான்களில் உள்ள திருகுகளை (ஸ்க்ரு) நன்கு இறுக்கிவிடுங்கள். ஒரு சில வாரங்களுக்கு நீங்கள் வீட்டில் இல்லாமல் வெளியூர் செல்ல நேர்ந்தால், பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டு அவற்றை மூடுங்கள். அடிக்கடி உங்கள் வீட்டு நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அவற்றை ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாக்க க்ளிசரின் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் நாற்காலி அல்லது மேஜை நிறைய அழுக்குகளைக் கொண்டிருந்தால் அல்லது பாழாகியிருந்தாலோ அசிடோனை உபயோகித்தால் உடனடியாகக் காய்ந்து விடும். மேஜைக்கு மேலுறைகள் அல்லது சிறு வட்டிகள் வைப்பதன் மூலம் சூடான, ஈரமான அல்லது வண்ணப் பொருட்களால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கலாம். சிலிகா ஜெல்லை அலமாரிகளில் வைப்பதன் மூலம் ஈரமின்றி பாதுகாக்கலாம். மர சாமான்களைத் துடைக்கும்போது உலர்ந்த துணிகளையே பயன்படுத்துங்கள்.

காலணி வைக்கும் அலமாரிகள்

காலணி வைக்கும் அலமாரிகள்

ஷூ ராக் எனப்படும் இவற்றை தொடர்ந்து சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். ஷூக்கள் பெரும்பாலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவனவாக இருப்பதால், அதுப்போன்ற ஈரமான ஒன்றை அணிவது கால்களில் சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். முடிந்தால் ஒரு குறைந்த மின்சாரத்தில் எரியும் சிறு பல்பை அலமாரிக்குள் பொருத்தி வைப்பது, உள்ளே சூட்டைப் பரப்பி ஈரப்பதத்தைக் குறைக்கும்.

தரைவிரிப்புகள் மற்றும் திரைச் சீலைகள்

தரைவிரிப்புகள் மற்றும் திரைச் சீலைகள்

வீட்டிலுள்ள கார்பெட் மற்றும் கர்டைன்களை மழைகாலத்தில் உபயோகிக்காமல் தவிர்ப்பது நல்லது. அவற்றைச் சுருட்டி பத்திரப்படுத்தி வையுங்கள். எனினும், அவற்றை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அவற்றை உலர்வாக வைத்திருக்க முயலுங்கள். தரைவிரிப்புகளில் காலை வைக்கும் முன் நன்கு துடைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் மண் நிறைந்தால், அவற்றை ஒரு பிரஷ் கொண்டு நன்கு சுத்தம் செய்தபின் அவற்றை துவைப்பது நல்லது. ஏனெனில், இந்த மண்ணும் தூசியும் துவைக்கும் போது பிறவற்றிற்கும் பரவ வாய்ப்புள்ளது. ஜன்னல் திரை சீலைகள் ஈராமானால் வாடை வீசுவதோடு உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை சுருட்டி மாட்டி வைக்கவேண்டும். அவற்றில் நிறைய தூசி படிவதால் அவ்வப்போது சுத்தப்படுத்துவது நல்லது. நல்ல வெயிலடிக்கும் நாட்களில் உங்களுடைய போர்வைகள், தரைவிரிப்புகள் மற்றும் திரைச் சிலைகளை நன்கு உலர்த்தி ஈரமாற்றதாக்குங்கள்.

தோலால் ஆன சோபா உறைகள்

தோலால் ஆன சோபா உறைகள்

நீங்கள் தோலினாலான பொருட்களைத் தொடர்ந்து உபயோகிப்பீர்களானால், நல்ல தரமான தொழில் செய்த பொருட்களையே உபயோகியுங்கள். இரு வாரங்களுக்கு ஒருமுறை அப்பொருட்களை சுத்தம் செய்யுங்கள். அவற்றை உலர்ந்த மென்மையான துணி கொண்டு துடையுங்கள். அவற்றிற்கு ஈரப்பதத்தை தரும் மாய்ஸ்சுரைசர் போன்ற திரவங்களில் சிறிது பஞ்சை வைத்து முக்கி நன்றாகத் துடையுங்கள். டெட்டால் மற்றும் தண்ணீரைக் கொண்டு அவ்வப்போது துடைத்து பூஞ்சை பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பணம் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள்

பணம் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள்

பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பஞ்சில் சுற்றி அவற்றை பிளாஸ்டிக் உறைகளில் போட்டு வையுங்கள். வெள்ளி நகைகள் பெரும்பாலும் மழை காலங்களில் நிறம் குறைந்து கருப்பாக மாறிவிடும். வெண்ணெய் காகிதத்தை உபயோகித்து அதை பாதுகாக்கலாம். அதன் பிறகு சுத்தம் செய்யும் திரவத்தை வைத்து சுத்தம் செய்யலாம்.

வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்

வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்

வீட்டு உபயோக பொருட்களும், கருவிகளும் பெரும்பாலும் மின்னணு சர்கியுட் போர்டுகளால் ஆனதால் இவற்றில் உள்ள செம்பினால் ஆன பாகங்கள் ஈரப்பதத்தால் பாதிப்படையும். பின்னர் அவை பழுதடைந்து உபயோகிக்க இயல வண்ணம் ஆகிவிடும். இவை பெரும்பாலும் நிருதிவைப்பதை விட இயங்கும் பொது தான் அதிக பாதிப்படைகின்றன. மொபைல் போன்கள், கேமராக்கள் மற்றும் ஐ-பாட ஆகியவற்றை பிளாஸ்டிக் கையுறைகளைக் கொண்டு பாதுகாத்திடுங்கள். இசைக் கருவிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை உபயோகித்த பிறகு பெரிய பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடுங்கள். ஈராக்கையோடு பொத்தான்களை அழுத்தினால் மின் அதிர்வு உண்டாகும் என்பதால் அதை தவிர்த்திடுங்கள். அனைத்து மின்சார உபகரணங்களையும் உபயோகித்த பின் சுவிட்சை நிறுத்தி வயர்களை எடுத்து விடவும். ஷாக் அடிப்பதை தவிர்க்க, அனைத்து மின் இணைப்புகளையும் சோதிக்கவும். உங்கள் இல்லத்தை சுத்தமாக வைத்து நோய் தொடரை தவிருங்கள். பானைகள் அல்லது பாத்திரங்கள் திறந்த நிலையில் நீருடன் இருந்தால், அவற்றை கொட்டி புதிய நீரை அடிக்கடி மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Rainproof Your Home

Besides your clothes and footwear, your home, too, needs special care during this rainy season. A little bit of care can help protect your belongings from this damage. Here's how...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter