For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!

By Maha
|

வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது.

எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூனைகளை வளர்த்து வாருங்கள்

பூனைகளை வளர்த்து வாருங்கள்

உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.

புதினா

புதினா

எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.

மனிதனின் முடி

மனிதனின் முடி

மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.

நாப்தலின் உருண்டை

நாப்தலின் உருண்டை

நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.

அம்மோனியா

அம்மோனியா

எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.

மாட்டு சாணம்

மாட்டு சாணம்

எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.

ஆந்தை

ஆந்தை

கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.

மிளகு

மிளகு

எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.

பிரியாணி இலை

பிரியாணி இலை

பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.

வெங்காயம்

வெங்காயம்

எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.

பேபி பவுடர்

பேபி பவுடர்

பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Kill Rats Naturally

Want to know how to kill rats? Here are some of the ways to kill rats naturally and get rid of them completely with home remedies.
 
Desktop Bottom Promotion