For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோதிரங்களை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ சில அசத்தலான வழிகள்!

By Boopathi Lakshmanan
|

உங்களுடைய வாழ்வில் மிகவும் மதிப்பு மிக்க சொத்தாக இருக்கும், வைர மோதிரம், உங்களுடைய விரல்களில் மின்னிக் கொண்டிருக்கிறது! இந்த காட்சியை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் மற்றும் ஒரு வைர மோதிரத்தை அணியும் உணர்வு பெருமிதம் தருவதாகவும் இருக்கும். ஆனால், அந்த வைர மோதிரத்தை உங்களால் சரியாகப் பராமரிக்க முடிகிறதா? அதனை நீங்கள் கழட்டி, சுத்தம் செய்தால் மட்டும் போதுமா?

அதீதமான ஈரப்பதம் அல்லது இது போன்ற வேறு ஏதாவது விஷயங்களால் கூட மோதிரங்கள் பாதிக்கப்படலாம். ஏதாவது ஒரு நிகழ்வுக்கோ அல்லது தினமுமோ அந்த வைர மோதிரத்தை நீங்கள் அணிய வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட மோதிரத்தை சுத்தம் செய்ய மறந்து விட்டாலோ அல்லது எப்படி சுத்தம் செய்வது என்று தெரியாவிட்டாலோ அல்லது அசுத்தம் படிந்த மோதிரத்தை அணிந்து செல்வதோ சங்கோஜமான சூழலையே முன்நிறுத்தும்.

வைர மோதிரம் போன்றவற்றை நீங்கள் நன்றாக கவனித்து வந்தாலும், சாதாரணமாக அணியக் கூடிய வெள்ளி மோதிரங்கள் பாத்திரங்களை கழுவும் போதும் அல்லது வேறு சூழல்களில் தினசரி வேலைகளை செய்யும் போதும் துருப்பிடித்தப் போனால் என்ன செய்வது?

எனவே, நீங்கள் விரல்களில் அணியும் மோதிரத்தை துருப்பிடிக்காமல் பாதுகாப்பதும் மற்றும் சுத்தம் செய்வதும் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா? வைர மோதிரங்கள் மட்டுல்லாமல், அதே போன்று தோற்றமளிக்கும் பிற மோதிரங்களைப் பற்றியும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மோதிரங்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள் பற்றி இங்கே காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோதிரத்தை முழுக வைத்தல்

மோதிரத்தை முழுக வைத்தல்

நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை மோதிரத்தை முழுகி இருக்கச் செய்வது தான். மென்மையான சோப்புக் கலவையை தயார் செய்து, மோதிரத்தை சுத்தம் செய்யும் வகையில் மூழ்கியிருக்கச் செய்ய வேண்டும். இதற்காக ஐவரி டிஷ்வாஷிங் திரவத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இது மிகவும் மென்மையானதாக இருப்பதால், உங்களுடைய மோதிரத்தை பாதிக்காது. ஆனால், இந்த திரவம் கிடைக்காத போது, வேறு ஏதாவது மென்மையான சோப்பைக் கூட தயங்காமல் பயன்படுத்தலாம். இந்த திரவத்தை தயார் செய்யும் போது, தண்ணீரும், ஐவரி டிஷ்வாஷிங் திரவமும் சமமான அளவில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அழுக்கைத் துடைத்தல்

அழுக்கைத் துடைத்தல்

மோதிரத்தை சிறிது நேரத்திற்கு மென்மையான சோப் திரவத்திற்குள் மூழ்கியிருக்கச் செய்யத பிறகு, அதனை சுத்தம் செய்யத் தொடங்குங்கள். மோதிரங்களை சுத்தம் செய்ய ஏற்ற மென்மையான பிரஷ் ஒன்றைத் தயாராக வைத்திருங்கள். மென்மையான பிரஷ் பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம். தடிப்பான கால்களை கொண்ட எந்தவொரு பிரஷ்-ம் உங்களுடைய மோதிரத்தின் அழகைப் பாழாக்கி விடும். மோதிரத்தின் மேல், மென்மையாகத் தேய்த்து, அதில் படிந்துள்ள அழுக்கை நீங்கள் நீக்கிவிட முடியும்.

மோதிரத்தை அலசுதல்

மோதிரத்தை அலசுதல்

மோதிரத்தை மென்மையான முடிக்கால்களைக் கொண்ட பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தும் வேளையில், அதனை நன்றாக மூழ்கியிருக்கச் செய்யவும் வேண்டும். ஒருமுறை நீங்கள் அதனை சுத்தம் செய்த பின்னர், இதனை தண்ணீருக்குள் மீண்டும் மூழ்க வைக்கவும். இப்பொழுது, மோதிரத்தை வெளியே எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் மூழ்க வைக்கவும். இதை செய்யும் போது, உங்களுடைய சாக்கடை மூடியிருப்பதை உறுதி செய்யவும். ஏனெனில், மோதிரம் சாக்கடைக்குள் விழுந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாறாக, முறையானதொரு வடிகட்டியைப் பயன்படுத்தியும் கூட மோதிரத்தை காப்பாற்றிட முடியும்.

மோதிரத்தை உலர வைத்தல்

மோதிரத்தை உலர வைத்தல்

ஒருமுறை நீங்கள் அலசி விட்டால், மோதிரத்தை வெளியே எடுத்து வைத்து விடவும். ஈரத்தை உறிஞ்சக் கூடிய துணியைக் கொண்டு, மோதிரத்தை உலர வைக்கலாம். வைர மோதிரங்கள் விலைமதிப்பு மிக்கiவாகவும் மற்றும் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். இந்த வகை மோதிரங்களை நீங்கள் தேய்த்த சுத்தம் செய்யும் போது, அவை வெளியே வந்து விழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, துணியைக் கொண்டு எளிதாகத் துடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுத்தம் செய்யக் கூடிய வைர மோதிரத்தில் பிளவுகள் எதுவும் இல்லையென்றால், அம்மோனியா கரைசலைக் கொண்டும் கூட சுத்தம் செய்யலாம். இவ்வாறாக பிளவுகள் உள்ள மோதிரங்களுக்கு, மென்மையான கரைசலைப் பயன்படுத்துவது நல்லதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Clean Finger Rings

While diamond rings are something that you are pretty careful about, there are some rings like your normal silver rings which can rust away in case you wear them and wash the utensils or perform your chores. Here are ways to clean your finger rings without much efforts.
Desktop Bottom Promotion