For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழுக்குப் படிந்த ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

By Maha
|

தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி இருப்பது போன்று ஃப்ரிட்ஜ் இருக்கின்றது. ஃப்ரிட்ஜ் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், இன்றைய காலத்துப் பெண்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இத்தகைய ஃப்ரிட்ஜ்ஜை ஒவ்வொருவரின் வீட்டில் பார்த்தால் குப்பைத் தொட்டியை விட மோசமாக இருக்கும். அந்த அளவில் அதில் அழுக்குகளானது படிந்திருக்கும்.

அதுமட்டுமின்றி, அந்த அழுக்குகளானது நீண்ட நாட்கள் அப்படியே இருப்பதால், அவற்றைத் துடைத்தாலும் விரைவில் செல்லாமல் இருக்கும். என்ன உங்கள் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் மோசமாகத் தான் உள்ளதா? எவ்வளவு தான் தேய்த்தாலும் அதில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கவில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸைப் பயன்படுத்திப் பாருங்கள்.

சோப்புத் தண்ணீர்

சோப்புத்தண்ணீரைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை தேய்த்துக் கழுவலாம். அதிலும் வெதுவெதுப்பான நீரில் டிஷ்வாஷ் நீர்மத்தை சேர்டத்து கலந்து, அதனைக் கொண்டு தேய்க்க வேண்டும். இப்படி இரண்டு முறை தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் ஃப்ரிட்ஜ் புதிது போன்று மின்னும்.

வினிகர்

வினிகர் கூட ஃப்ரிட்ஜ்ஜில் படிந்துள்ள கறைகளை எளிதில் அகற்ற உதவும். அதற்கு கறைப் படிந்த இடத்தில் சிறிது வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான துணியால் தேய்த்தால், கறைகளானது போய்விடும்.

பேக்கிங் சோடா

கறைகள் மிகவும் கடினமாக இருந்தால், பேக்கிங் சோடாவை கறைப் படிந்த இடத்தில் தூவி, பின் நீரில் கலந்த வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து பின் தேய்த்தால், கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

எலுமிச்சை

வினிகருக்கு உள்ள சக்தி எலுமிச்சைக்கும் உள்ளது. அதுமட்டுமின்றி எலுமிச்சைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்தால், ஃப்ரிட்ஜ் நன்கு நறுமணத்துடன் இருக்கும். அதற்கு எலுமிச்சையின் தோலைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் கறைகள் அகலும்.

English summary

Tips To Care For Stained Fridges

These are tips for cleaning stained fridges. For cleaning a fridge well, read on...
Story first published: Saturday, October 18, 2014, 17:38 [IST]
Desktop Bottom Promotion