வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை நீக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே வந்தாலே சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும். இத்தகைய நிலையில் வெள்ளை நிற துணிகளை அணிந்து செல்லவே பயமாக இருக்கும். ஏனெனில் வெள்ளைத் துணிகளில் சேற்றுக் கறைகள் படிந்தால், அதனைப் போக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே பெரும்பாலும் மழைக்காலத்தில் வெள்ளை நிற உடைகளை அணிந்து செல்லவேமாட்டார்கள்.

இருப்பினும் பள்ளிகளுக்கு குழந்தைகள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து செல்ல வேண்டி வரும். அப்படி அணிந்து செல்லும் போது, துணிகளை சேற்றுக் கறைகள் படிந்தால், கவலைப்பட வேண்டாம். ஏனெனில் சேற்றுக் கறைகளை ஒருசில பொருட்கள் கொண்டு சுத்தம் செய்ய முடியும். இங்கு வெள்ளை நிறத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளைப் போக்குவது எப்படி என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிடர்ஜெண்ட்

டிடர்ஜெண்ட்

சேற்றுக் கறைப் படிந்த வெள்ளைத் துணிகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரில் டிடர்ஜெண்ட் பவுடரைப் போட்டு, கறைப் படிந்த துணிகளை நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து அலசினால், கறைகள் அகலும்.

வினிகர்

வினிகர்

வினிகரைப் பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் துணிகளில் படிந்த கறைகளைப் போக்க வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதில் துணியை ஊற வைத்து நன்கு தேய்த்து அலச வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை போக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரை ஒன்றாக கலந்து, அதனை கறை படிந்த இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து குளிர்ந்த நீரில் அலசினால், சேற்றுக் கறைகள் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை கடினமான சேற்றுக் கறைகளையும் எளிதாகப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் கறைப்படிந்த துணியை ஊற வைத்து பின் தேய்த்து துவையுங்கள். இல்லாவிட்டால், ஒரு அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் கறைப்படிந்த துணியையும் சேர்த்து சிறிது நேரம் கழித்து தேய்த்தால், சேற்றுக் கறைகள் அகன்றுவிடும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைடு

1 கப் நீரில், 1/2 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, 1/2 கப் பேக்கிங் சோடா மற்றும் 1/2 கப் வினிகர் சேர்த்து கலந்து, பின்பு அதில் சிறிது டிடர்ஜெண்ட் பவுடர் சேர்த்து, பின் அதில் சேற்றுக் கறை படிந்த வெள்ளைத் துணியை 1 மணிநேரம் ஊற வைத்து தேய்த்து அலசினால், கறைகளை போய்விடும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remove Mud Stains From White Clothes

Stay a step ahead by being prepared to fight them. It does not take too much to remove mud stains. All we need to do is stock up on a few basic items. Here are some of the tips to remove mud stains from white clothes.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter