மசாலாப் பொருட்கள் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க சில டிப்ஸ்....

Posted By:
Subscribe to Boldsky

உணவின் சுவையையும், நறுமணத்தையும் அதிகரிக்கப் பயன்படும் மசாலாப் பொருட்களானது அனைவரது வீட்டிலும் நிச்சயம் நிறைய இருக்கும். அப்படி வாங்கி வைக்கும் மசாலாப் பொருட்களில் சில விரைவில் கெட்டுப் போனது போன்றோ அல்லது கட்டி கட்டிகளாகவோ இருக்கும். இதற்கு முக்கிய காரணம் வாங்கும் மசாலாப் பொருட்களை சரியாக பராமரிக்காதது தான்.

இதற்கு சமைக்கும் போது மசாலாப் பொருட்களை பயன்படுத்திய பின் அதனை சரியாக மூடி வைக்க மறந்துவிடுவோம். இதனால் காற்றானது அதிகம் நுழைந்து பொருட்கள் எளிதில் பாழானது போல் இருக்கும். அதுமட்டுமின்றி, அப்படி திறந்து வைத்த மசாலாப் பொருட்களை மீண்டும் சமையலில் பயன்படுத்தும் போது உணவின் சுவை குறைந்திருக்கும். ஆகவே நீங்கள் வாங்கும் மசாலாப் பொருட்கள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க ஒருசில டிப்ஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அரைத்த மசாலாப் பொருட்களை வாங்க வேண்டாம்

சிலர் அடிக்கடி கடைக்கு செல்ல சோம்பேறித்தனப்பட்டு, அரைத்து விற்கப்படும் மசாலாப் பொருட்களை அதிகம் வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் அப்படி அரைத்த நிலையில் உள்ள மசாலாக்களை வாங்கி, அதனை சரியாக பராமரிக்காவிட்டால், 3 மாதங்களில் அவை பாழாகிவிடும். ஆகவே எப்போதும் அரைத்து விற்கப்படும் மசாலாப் பொருட்களை அதிகம் வாங்க வேண்டாம். ஒருவேளை வாங்குவதாக இருந்தால், அரைக்காமல் முழுமையாக இருப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இருள் சூழ்ந்த இடத்தில் பராமரியுங்கள்

மசாலாப் பொருட்களை எப்போதும் இருள் சூழ்ந்த மற்றும் காற்று அதிகம் புகாத வறட்சியான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஏனெனில் மசாலாப் பொருட்களுக்கு எதிரியே வெளிச்சம், காற்று, ஈரப்பதம் தான். ஆகவே அதனை சரியான டப்பாவில் அடைத்து வைத்து, சரியான இடத்தில் வைத்து பராமரியுங்கள்.

குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரியுங்கள்

ஒருவேளை அளவுக்கு அதிகமாக மசாலாப் பொருட்களை வாங்கினால், அதனை சற்று குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் எவ்வளவு தான் பராமரித்தாலும், முழுமையாக இருக்கும் மசாலாப் பொருட்களானது 3 வருடங்களும், அரைத்த நிலையில் இருக்கும் மசாலா 6 மாதமும் தான் நன்கு இருக்கும். இருந்தாலும், அதிக அளவில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

எப்போது தூக்கிப் போட வேண்டும்?

How To Store Your Spices Well

மசாலாப் பொருட்களானது பழையது ஆகிவிட்டால், அதன் நிறம் மற்றும் மணம் மாறி காணப்படும். அப்படி இருந்தால் தூங்கி எறிந்துவிட வேண்டும். இருப்பினும் வாங்கும் மசாலாப் பொருட்களை அவ்வப்போது உபயோகித்து தீர்த்துவிடுவது நல்லது.

English summary

How To Store Your Spices Well

Spices are what make our food flavourful and tasty and storing them well will bring out the best taste and aroma in them. We tell you how...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter