Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தை போக்க சில டிப்ஸ்...
சமைக்கும் போது பாத்திரங்களில் இருந்து சமைத்த உணவுப் பொருளின் மணம் வீசுவது சாதாரணம் தான். ஆனால் பூண்டு, முட்டை போன்ற பொருட்களைப் பயன்படுத்தினால், அந்த பொருட்களின் நாற்றமானது அவ்வளவு எளிதில் பாத்திரத்தில் இருந்து போகாது. அதேப் போல் மீன் சமைத்த பாத்திரங்களில் இருந்து வெளிவரும் மீன் நாற்றமும் அவ்வளவு எளிதில் போகாமல் இருக்கும்.
அதன் காரணத்தினாலேயே பலர் வீட்டில் மீன் வாங்கி சமைப்பதை நிறுத்திவிடுகின்றனர். ஆனால் அப்படி மீன் நாற்றத்தைப் போக்கும் சில வழிகளை தெரிந்து கொண்டால், எந்த ஒரு கவலையும் இல்லாமல் வீட்டிலேயே மீனை வாங்கி சமைக்கலாம்.
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் முட்டை துர்நாற்றத்தைத் தடுக்க சில டிப்ஸ்...
இங்கு மீன் சமைத்த பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தைப் போக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன் படி மீன் சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்து பாருங்கள். இதனால் நிச்சயம் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தைப் போக்கலாம்.

டிஷ் வாஷ் நீர்மம்
மீன் சமைத்த பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தைப் போக்க, டிஷ் வாஷ் நீர்மத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து, பின் அந்த நீரில் மீன சமைத்த பாத்திரத்தை 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தைப் போக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையின் அற்புதமான நறுமணத்தைக் கொண்டு எளிதில் மீன் நாற்றத்தைப் போக்கலாம். அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு மீன் சமைத்த பாத்திரத்தை தேய்த்து, 20 நிமிடம் கழித்து, பின் கழுவினால் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் வாசனையானது போய்விடும்.

வினிகர்
வினிகர் கூட மீன் நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே வினிகரைப் பயன்படுத்தி மீன் சமைத்த பாத்திரத்தை கழுவுங்கள். இதனால் மீன் நாற்றம் மட்டுமின்றி, பாத்திரத்தில் உள்ள கறைகளும் நீங்கிவிடும்.

பால்
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தை பால் கொண்டும் போக்கலாம். அதற்கு அந்த பாத்திரத்தை பாலில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழத்தின் தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரில் மீன் சமைத்த பாத்திரத்தை 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு டிஷ் வாஷ் நீர்மம் கொண்டு கழுவினால், மீன் நாற்றம் போய்விடும்.

ஆப்பிள்
மீன் சமைக்கும் முன்பு, அந்த பாத்திரத்தில் ஆப்பிள் துண்டுகளை தேய்த்து, பின் சமைத்தால், மீன் வாசனையானது பாத்திரத்தில் தங்காமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications