For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய சில சிம்பிளான வழிகள்!

By Maha
|

ஷூக்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், அதை சுத்தம் செய்து முடிப்பதற்குள் உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் போய்விடும். குறிப்பாக வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று நினைக்கும் போதே பல தாய்மார்கள் சோர்ந்துவிடுவார்கள்.

அதற்காக வெள்ளை நிற ஷூக்களை துவைக்காமல் இருக்க முடியுமா என்ன? ஒருவேளை வாரம் ஒரு முறை அதனை சுத்தம் செய்யாமல் இருந்தால், பாதங்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் 1-2 வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும்.

வெள்ளை நிற 'சாக்ஸ்' வெள்ளையாக இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..

அப்படி சுத்தம் செய்யும் போது, வேலை எளிதில் முடிப்பதற்கு தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதன்படி செய்தால், நிச்சயம் ஷூக்களை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் சுத்தம் செய்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரமான ஸ்பாஞ்ச்

ஈரமான ஸ்பாஞ்ச்

இது மிகவும் ஈஸியான ஒரு வழி. அது என்னவென்றால், எப்போது வெள்ளை நிற ஷூக்களை அணிந்து வந்த பின்னரும், தினமும் அதனை ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து வந்தால், வெள்ளை நிற ஷூவின் நிறம் பாழாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் வாரம் ஒரு முறை சோப்பு தண்ணீரில் ஊற வைத்து, வெளியில் உலர வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், வெள்ளை நிற ஷூவானது நன்கு ஜொலிக்கும்.

டிடர்ஜெண்ட்

டிடர்ஜெண்ட்

இது மற்றொரு மிகச்சிறப்பான மற்றும் ஈஸியான வழி. அதற்கு வெள்ளை நிற ஷூவை வெதுவெதுப்பான சோப்பு நீரில் 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பயன்படுத்தி கூட வெள்ளை நிற ஷூவை சுத்தம் செய்யலாம். அதற்கு பேக்கிங் சோடாவை சோப்பு நீரில் கலந்து, அதில் வெள்ளை நிற ஷூக்களை ஊற வைத்து துவைத்து, வெயிலில் உலர வைக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை

பாதங்கள் அதிகம் வியர்க்குமானால், அத்தகையவர்கள் எலுமிச்சை சாற்னினைப் பயன்படுத்தி துவைத்தால், ஷூக்களில் உள்ள மஞ்சள் நிற கறைகள் நீங்குவதோடு, ஷூக்களும் நன்கு நறுமணத்துடன் இருக்கும். வேண்டுமானால் அத்துடன் சிறிது உப்பையும் சேர்த்து ஊற வைத்து துவைக்கலாம். குறிப்பாக, எப்போது ஷூக்களை துவைத்தப் பின்னரும், அவற்றை சூரிய வெப்பத்தில் உலர வைக்க வேண்டும். இதனால் விரைவில் ஷூவானது உலர்வதோடு, அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றம் போன்றவை நீங்கிவிடும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

வினிகர் கூட ஷூக்களை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்றாகும். அதற்கு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை சரிசமமாக எடுத்து, அதில் ஷூக்களை 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் அதில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Clean White Shoes At Home: Tips

Cleaning white shoes is more of a pain. However, here are some simple cleaning tips to wash white shoes at home and keep them clean. Take a look.
Story first published: Friday, February 7, 2014, 16:48 [IST]
Desktop Bottom Promotion