வெள்ளிப் பாத்திரங்களை பளிச்சென்று மின்ன உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்களை மீண்டும் புதியது போல் மின்னச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை அறையில் உள்ள வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் வெள்ளி சிலைகளை சுத்தம் செய்வது வழக்கமாக இருக்கும். அப்படி அவற்றை சுத்தம் செய்யும் போது, அதனை பளிச்சென்று கொண்டு வர நன்கு சோப்பு பயன்படுத்தி தேய்ப்போம்.

இருப்பினும் அவற்றால் நம் உடலில் உள்ள சக்தி தான் குறையுமே தவிர, வெள்ளிப் பொருட்களானது பளிச்சென்று ஆகாது. ஆனால் வெள்ளிப் பொருட்களை ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று மின்னச் செய்யலாம். இங்கு வெள்ளிப் பொருட்களை புதிது போன்று பளிச்சென்று மின்ன செய்யும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் பற்களை மட்டும் வெண்மையாக்க உதவுவதில்லை, வெள்ளிப் பொருட்களையும் வெண்மையாக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு சிறிது வெள்ளையான டூத் பேஸ்ட்டை கையில் எடுத்து, வெள்ளிப் பொருட்களின் மீது தேய்த்தால், வெள்ளிப் பொருட்கள் மின்னும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பின் ஈரமான துணி பயன்படுத்தி வெள்ளிப் பொருட்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் ஈரமான துணியால் வெள்ளிப் பாத்திரங்களை அழுத்தி துடைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைப் பயன்படுத்தி, வெள்ளிப் பாத்திரங்களை தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், வெள்ளிப் பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும்.

டிடர்ஜெண்ட் பவுடர்

டிடர்ஜெண்ட் பவுடர்

டிடர்ஜெண்ட் பவுடரை வெதுவெதுப்பான நீரில் சிறிது போட்டு, பின் அதில் வெள்ளிப் பாத்திரங்களை 30 நிமிடம் ஊற வைத்து, சுத்தமான உலர்ந்து துணியில் துடைத்தால், வெள்ளிப் பாத்திரங்கள் புதிது போன்று மின்னும்.

கெட்சப்

கெட்சப்

பெரும்பாலான வீடுகளில் நிச்சயம் கெட்சப் இருக்கும். அந்த கெட்சப்பை வெள்ளிப் பாத்திரங்களின் மீது தடவி சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் வெள்ளிப் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Household Items That Can Polish Silver

Cleaning tarnished silver? A house cleaning company can help, or get started yourself by polishing real silverware with these household items.
Story first published: Friday, September 5, 2014, 17:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter