Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
சமையலறையில் வேலைப் பார்க்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய 10 பாதுகாப்பு டிப்ஸ்...
உங்கள் வீட்டில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரே இடம் சமையலறை தான். காரணம் அங்கே தான் ஆபத்தான மற்றும் எரிபொருள் சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளது. அதனால் உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை.
உங்க ஃப்ரீஸர் முழுக்க ஐஸ்கட்டியா இருக்கா? படிப்படியாக அதை நீக்க சில டிப்ஸ்...
சமையலறையின் உள்ளேயும் வெளியேயும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான டிப்ஸ்களை பற்றி இப்போது விளக்க உள்ளோம். இதனால் உங்களுக்கும் உங்கள் மனம் விரும்பியவர்களும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம்.

குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் சமையலறைக்குள் விடாதீர்கள்
சமையலறையில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவனத்தை திசை திருப்புவத்தில் குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல காரணங்களுக்காக, கூர்மையான பல கருவிகள் அங்கே அடுப்பு மேடையில் இருப்பதால், அதனை கொண்டு அவர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்ளலாம். அதனால் குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் சமையலறையை விட்டு வெளியேற்றுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு வேலையில் உதவி செய்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும். சூடான பாத்திரங்களை கையாளும் போதும் சூடு பட்டு விடலாம்.

கால்களை மூடும் செருப்பு அல்லது ஷூ மற்றும் பாதுகாப்பு ஆடை அணிவித்தல்
சமையலறையில் எப்போதுமே பாதுகாப்பான ஷூக்கள் அல்லது கால்களை மூடும் செருப்புக்களை அணிய வேண்டும். இதனால் கை தவறி, கத்தி போன்ற கூர்மையான கருவிகள் கீழே விழும் போது கால்கள் பாதுகாப்பாக இருக்கும். கத்தி அல்லது பிற கூர்மையான பாத்ஹ்டிரங்கள் கீழே விழும் போது, பொதுவாக நம் கால்களில் விழுவது தான் வழக்கம். அப்படிப்பட்ட நேரத்தில் தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்படலாம். அதனால் திடமான காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்.
அதே போல் சமைக்கும் போது, நீண்ட கைகளை கொண்ட லூசான ஆடைகளை அணியக் கூடாது. காரணம் அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதே போல் சமையலறையில் வேலை பார்க்கும் போது சிந்ததிக் வகை ஆடைகளை அணியக் கூடாது. அவ்வகை ஆடைகளில் தீ பற்றிக் கொண்டால், அவை உங்கள் சருமத்தொடு ஒட்டிக் கொள்ளும். இதனால் காயங்கள் அதிகமாகும்.

சமையலறை பகுதியில் அவதி அவதியென செயல்படாதீர்கள்
வேகமாக அவதி அவதியுடன் வேலை பார்ப்பதாலேயே சமையலறையில் பல விபத்துகள் நடைபெறுகிறது. வேகமாக வேலை செய்யும் போது கவனக்குறைவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நேரிடும். காய்கறிகளை வேகமாக நறுக்காதீர்கள். அதனால் உங்கள் விரல்கள் வெட்டுப்படலாம். அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முற்படாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம்.
செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள். என்ன மிஞ்சி போனால் ஒரு 15 நிமிட தாமதம் ஆகுமா? ஆனால் விபத்துகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது முக்கியமல்லவா?

ஹாட் பேட்கள்
சமையலறையில் சூடான சட்டிகள் மற்றும் குக்கர்களை கையாள ஹாட் பேட்களை (சூட்டை தாங்கும் கையுறை) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. அவைகளை தூக்க ஹாட் பேட்கள் கண்டிப்பாக தேவைப்படும். தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அவைகளை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.

கிண்டும் போது தள்ளி நில்லுங்கள்
அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இது பொதுவாகவே நம்மில் பலர் செய்யும் தவறாகும். அதனால் கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயினால் உடல் பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படலாம்.

கத்திகளை திறமையாக பயன்படுத்த வேண்டும்
சமையலறையில் கத்தியை கையாளுவது, சமையலறையில் உள்ள சவாலான வேளைகளில் ஒன்றாகும். எப்போதும் கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும். காரணம் மொட்டை கத்தி அடிக்கடி வழுக்கி, காயங்களை ஏற்படுத்தும். காயம் ஏற்படாமல் கத்தியை எப்படி திறமையாக எப்படி கையாளுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முனைப்பாக பயன்படுத்தாத கையை பொருட்களை பிடிக்க பயன்படுத்துங்கள். பின் முனைப்புடன் செயல்படும் கையை கொண்டு அதனை கத்தியை கொண்டு அறுக்க பயன்படுத்துங்கள். நன்றாக பழக்கம் ஏற்படும் வரை கத்தியை மெதுவாக கையாளுங்கள்.

அனைத்து உபகரணங்களையும் சரியாக பயன்படுத்துங்கள்
எந்த ஒரு உபகரணத்தை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதனுடன் சேர்ந்து வரும் பயன்பாட்டு புத்தகத்தை படிக்க வேண்டும். இது அந்த உபகரணத்தின் இயற் பண்பை பற்றி உங்களுக்கு புரிய வைக்கும். மேலும் அந்த உபகரணத்தை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். ஃபுட் ப்ராஸசர் போன்ற உபகரணங்களை தண்ணீரில் கழுவ கூடாது. இது மின்கசிவை ஏற்படுத்தி உங்கள் உபகரணத்தை பாதித்து விடும். இருப்பினும் அதன் சில பகுதிகளை ஈரத் துணியால் துடைக்கலாம்.

சிந்திய பொருட்களை சுத்தமாக துடைத்தல்
சமைக்கும் போது சில பொருட்கள் சிந்தும். கீழே சிதறி கிடக்கும் பொருட்களை துடைக்க தயங்காதீர்கள். அவைகள் விபத்துகள் ஏற்பட காரணமாக அமையலாம். எந்த ஒரு கரைகளும் இன்றி அவைகளை சுத்தமாக துடைக்க மறக்காதீர்கள்.

பொருட்களை தூக்கும் போது கவனமாக இருங்கள்
சூடான சட்டிகளை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்க முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்களால் சில பாத்திரங்களை தூக்க சிரமமாக இருந்தால், வீட்டில் உள்ள ஆண்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அதில் உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு சில பாத்திரத்தில் மாற்றி அவைகளை தேவையான இடத்திற்கு தூக்கிச் செல்லுங்கள்.

சூடான உணவுகளின் மீது வரும் ஆவியை கவனியுங்கள்
கொதிக்கும் உணவு மேலே பட்டால் எவ்வளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு காயம், உணவின் ஆவி முகத்தில் அடிக்கும் போதும் ஏற்படும். ஆவி பறக்கும் உணவுகளை கையாளும் போது அதிக கவனம் தேவை. உதாரணத்திற்கு, மைக்ரோவேவ்வில் எதையாவது கொதிக்க வைக்கும் போது, அதன் மூடி உங்கள் பக்கம் திறந்து இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











