Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
வீட்டுல புளி இருக்கா? அப்ப அத இப்படியும் யூஸ் பண்ணுங்க...
புளி என்றாலே அனைவரது வாயிலிருந்தும் எச்சில் ஊறும். அத்தகைய புளி, இந்தியாவில் அனைத்து தென்னிந்திய வீட்டு சமையலறையிலும் நிச்சயம் இருக்கும். ஏனெனில் புளி இல்லாத சமையலை இந்தியாவில் பார்க்கவே முடியாது. அத்தகைய புளியை சாம்பார், ரசம் மற்றும் இதர உணவுகளான புளி சாதம் போன்றவற்றிலும் பயன்படுகிறது. இவ்வாறு சமையலில் மட்டும் புளி பயன்படுவதில்லை, சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. சொல்லப்போனால், டிஷ் வாஷ் நீர்மம் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அன்றைய காலத்தில் புளியைத் தான் பயன்படுத்துவார்கள்.
எப்படி புளிப்பு சுவையுடைய எலுமிச்சை மற்றும் வினிகர் சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுகிறதோ, அதேப் போல் இதுவும் சுத்தப்படுத்துவதற்கு மிகவும் சிறந்தப் பொருளாக கருதப்படுகிறது. அதிலும் புளியை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, அதன் தரத்திற்கு அளவே இல்லை. அந்த அளவு அது சுத்தத்தை தரும். அதிலும் இதனை எண்ணெய் பசை உள்ள பொருட்களில் பயன்படுத்தினால், எண்ணெய் பசை எளிதில் போய்விடும்.
இப்போது அந்த புளியை எதனையெல்லாம் சுத்தப்படுத்தப் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!

சமையலறை கழுவு தொட்டி (Kitchen Sink)
சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை, சிறிது புளி மற்றும் உப்புடன் சேர்த்து தேய்த்து கழுவினால், அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் போய்விடுவதோடு, பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.

வெள்ளிப் பாத்திரங்கள்
வெள்ளிப் பாத்திரங்களில் கருப்பு போன்று அழுக்குகள் முனைகளில் தங்கியிருக்கும். எனவே அத்தகைய கருப்பு நிற அழக்குகளைப் போக்க, புளி மற்றும் உப்பு சேர்த்து தேய்த்தால், போக்கிவிடலாம்.

நகைகள்
ஒருசில மெட்டல் அணிகலன்களில் ஆங்காங்கு அழுக்குகள் தங்கி, நகைகளின் அழகைக் கெடுக்கும். அத்தகைய அழுக்குகளை சோப்பை வைத்து சுத்தம் செய்வது மிகவும் கடினமானது. எனவே அத்தகைய அழுக்குகளைப் போக்க, புளித் தண்ணீரில் அந்த நகைகளைப் போட்டு, பின் துணியை வைத்து துடைத்தால், போய்விடும்.

பித்தளை பொருட்கள்
பித்தளைப் பொருட்கள் அழகாக மின்னுவதற்கு புளியைப் பயன்படுத்தி தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பித்தளைப் பொருட்கள் கூட மின்னும்.

காப்பர் பாத்திரங்கள்
இன்றைய காலத்தில் காப்பர் பொருட்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. ஒரு சிலர் மட்டுமே இதனைப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஷோ கோஸில் பூ ஜாடியாகப் பயன்படுத்துகின்றனர்.

துருப்பிடித்த உலோக குழாய்கள்
புளி உலோகப் பொருட்களை சுத்தப்படுத்தும் பொருட்களில் மிகவும் சிறந்தது. எனவே வீட்டில் ஏதாவது பழைய மற்றும் துருப்பிடித்த உலோகப் பொருட்களான குழாய்கள் இருந்தால், அதனை புளியை வைத்து தேய்த்தால், புதிதாக காணப்படும்.

சிலைகள்
வெள்ளி மற்றும் பித்தளையால் இருக்கும் கடவுளின் சிலைகள் அனைத்து இந்து வீடுகளிலும் இருக்கும். இத்தகைய சிலைகள் நன்கு அழகாக பளிச்சென்று காணப்படுவதற்கு புளியைப் பயன்படுத்தினால், அதில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடலாம்.

புகைப்போக்கி (Chimney)
சமையலறையில் இருக்கும் வெப்பம் மற்றும் எண்ணெய் வாசனையைப் போக்க புகைப்போக்கி எனப்படும் சிம்னி இருக்கும். அத்தகைய சிம்னியில் எண்ணெய் பசைகள் மற்றும் கறைகள் படிந்து, அசுத்தமாக காணப்படும். எனவே அந்த கறைகளைப் போக்க புளியைப் பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications
