Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தூங்கும் மெத்தையை தேர்ந்தெடுக்க 6 எளிய வழிகள்!!!
ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம். எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பது மட்டும் நல்ல தூக்கத்திற்கான அளவுகோல் கிடையாது. தூக்கத்தின் போது நமக்கு ஏற்படும் சொகுசும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சொகுசு பயன்படுத்தும் மெத்தையை பொறுத்தே அமைகிறது. மெத்தைகள் என்பது வெறும் சொகுசுக்காக பயன்படும் பொருள் கிடையாது. அதற்கும் நம் தூக்கத்திற்கும் வெகுவாக சம்பந்தம் உள்ளது.
மெத்தைகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில மெத்தைகள் முதுகுக்கு இதமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில மெத்தைகள் உங்களின் உயரம், வயது மற்றும் உடல் எடையை அனுசரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக மெத்தை வாங்கும் போது. இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் இதனால் தூங்கும் முறை வெகுவாக பாதிக்கப்படும்.
ஆகவே அத்தகைய மெத்தைகளை தேர்ந்தெடுக்கும் முன் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்களை, இதோ உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பயன்பெறுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் மெத்தையின் வயது:
தூங்குவதில் பிரச்சனைகள் உள்ளதா? அப்படியெனில் மெத்தையால் ஏற்படுகிறது என்று கூறுவதை விட மெத்தையின் வயதினால் ஏற்படுகிறது என்று கூறுவதே சரியாக இருக்கும். ஒவ்வொரு மெத்தைக்கும் காலாவதி தேதி கண்டிப்பாக இருக்கும். ஒரு காலத்திற்குப் பின், அந்த மெத்தையால் முன்பு அளித்த சொகுசை, அளிக்க முடியாது. இந்த நேரம் தான் மெத்தையை மாற்ற சிறந்த நேரம். மாற்றாமல் அதையே பயன்படுத்தினால், ஆரோக்கியம் மேலும் பாதிப்படையும்.
மூன்று தாரக வார்த்தைகள்:
மென்மை, தாங்குதல், அளவு - இவை மூன்றும் தான் மெத்தை வாங்க தேவையான மூன்று முக்கிய குணங்கள். இந்தியாவிலுள்ள பல வாடிக்கையாளர்கள் இந்த மூன்று குணத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட விலைக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பர். இதனால் தரத்தில் குறைபாடு ஏற்படுவதால், மெத்தை வாங்கிய சில நாட்களுக்கு பின்னர் குறை கூற ஆரம்பித்து விடுவர்.
தேர்ந்தெடுப்பதற்கு முன் சோதித்து பாருங்கள்:
ஒரு மெத்தையை தேர்ந்தெடுத்து விட்டால், அதில் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் படுத்துப் பாருங்கள். இது அந்த மெத்தை அளிக்கும் சொகுசின் அளவையும், அதன் தாங்கும் சக்தியையும் கணிக்க உதவும். மெத்தை முக்கியமானதாக உள்ளதால், வேக வேகமாக கடைக்காரனின் பேச்சுத் தாக்கத்தால் அவசரப்பட்டு வாங்கி விடாதீர்கள்.
வாங்கும் முன் அனைத்து ரகங்களையும் பாருங்கள்:
வாங்கும் மெத்தை திடமானதாக, ஈர்க்கும் விதமாக மற்றும் தலையணைகளுடன் சேர்ந்து வருகிறதா? அனைத்து வகை மெத்தைகளைப் பார்த்து, பின் தேவைகளை பூர்த்தி செய்யும் நல்ல தரமுள்ள மெத்தையை தேர்தெடுக்கவும்.
மெத்தைகளுக்கென தனியாக இருக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள்:
மெத்தைகளை பல்பொருள் அங்காடிகளில் கண்டிப்பாக வாங்காதீர்கள். பொதுவாக மெத்தை விற்கும் கடைகளில் உள்ள விற்பனை பணியாளர்கள் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பர். அதனால் சரியான மெத்தையை தேர்ந்தெடுக்க அவர்கள் உதவி புரிவார்கள்.
வாரண்டி இருக்கிறதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள்:
ஒரு நல்ல மெத்தைக்கு குறைந்தது பத்து வருடமாவது வாரண்டி இருக்கும். இந்த வாரண்டியில் மெத்தைக்கு ஏதும் பாதிப்பு உண்டானால் முழுவதுமாக புது மெத்தையே மாற்றித் தரப்படும்.



Click it and Unblock the Notifications
