For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பாத்ரூம் ஷவரை சுத்தம் பண்ணவே முடியலையே... இத ட்ரை பண்ணி பாருங்களேன்...

ஷவரில் இருந்து வெளிவரும் நீர், நாலாபுறமும் தெறித்து சிதறுகிறதா ? அல்லது சரியான விசையில் வராமல் நீர் விட்டு விட்டு வெளி வருகிறதா ? ஆம் என்றால், உங்கள் ஷவரில் இருக்கும் துளைகளில் மினரல்கள் அடைத்து கொண்ட

By Kripa Saravanan
|

ஷவரில் இருந்து வெளிவரும் நீர், நாலாபுறமும் தெறித்து சிதறுகிறதா ? அல்லது சரியான விசையில் வராமல் நீர் விட்டு விட்டு வெளி வருகிறதா ? ஆம் என்றால், உங்கள் ஷவரில் இருக்கும் துளைகளில் மினரல்கள் அடைத்து கொண்டிருக்கும் . இதற்காக கவலைப்பட வேண்டாம். குட் ஹவுஸ் கீப்பிங் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விளக்கத்தை அந்த துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றை அப்படியே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை செய்தாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஷவரின் தலையை எப்படி சுத்தம் செய்வது

1. ஷவரின் தலையை எப்படி சுத்தம் செய்வது

ஸ்கரப்பர் ஸ்பான்ச் சற்று மென்மையாக இருக்கும். அதன்மூலம் உங்களுடைய ஷவர் ஹெட்டை சுத்தப்படுத்தலாம். ஸ்பான்ஞ்சில் ஓரளவுக்குத்தான் சுத்தப்படுத்த முடியும். ஏனெனில் ஷவர் ஓட்டையை சுற்றிலும் இருக்கிற அழுக்குகள் அவ்வளவாக வெளியேறாது.

2. வினிகர்

2. வினிகர்

ஸ்கிரப்பர் ஸ்பான்ஞ் கொண்டு நீக்கியும் சுத்தமாகவில்லையா?... இன்னும் நீர் சரியாக விழவில்லையா? கவலையை விடுங்க... வினிகர் இருக்கு உங்களைக் காப்பாற்ற...

தண்ணீர் மற்றும் வினிகரை சரி பாதி அளவிற்கு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் பையில் ஊற்றிக் கொள்ளவும். ஷவர்ஹெட் இந்த பையில் உள்ள நீரில் மூழ்கும் படி வைத்து பையை ஷவரோடு சேர்த்து கட்டவும்.

20 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஷவர் ஹெட் இந்த நீரில் ஊறட்டும்.

நன்கு ஊறிய பின், அந்த பையை பிரித்து மீதம் உள்ள அழுக்கை அகற்றவும். இப்போது ஷவரை திறந்து நீரை வேகமாக சிதற செய்யவும். இப்போது எல்லாம் முடிந்தது. ஷவரில் உள்ள மொத்த அழுக்கும் வெளியேறிவிடும்.

3. ஷவரை எப்படி பராமரிப்பது

3. ஷவரை எப்படி பராமரிப்பது

வினிகர் ஷவரில் கறைபடிந்திருக்கும் இழுக்குகளை சுத்தமாக பளிச்சென நீக்கிவிடும். இப்போது உங்கள் ஷவர் சீரான பயன்பாட்டிற்கு தயார். நீங்களும் சந்தோசமாக குளிக்கலாம். ஷவரில் உள்ள மற்ற பாகங்களை சுத்தம் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

4. பூஞ்சை காளான் படர்ந்த இடங்கள்

4. பூஞ்சை காளான் படர்ந்த இடங்கள்

உங்கள் குளியலறையின் கதவு மற்றும் வெண்டிலேடரை திறந்து வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த நறுமணத்துடன் இருக்கும் டப் அண்ட் டைல் ஸ்ப்ரே கிளீனரை எடுத்துக் கொள்ளவும். ஷவரை 3 பகுதியாக சுத்தம் செய்யத் தொடங்குங்கள். இதனால், புகை வெளிவராது. முதல் பகுதியில் கிளீனரை ஸ்ப்ரே செய்து சில நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அதனை சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன் அடுத்த பகுதியில் கிளீனரை ஸ்ப்ரே செய்யவும். முதல் பகுதியை சுத்தம் செய்யும் நேரத்தில் அடுத்த பகுதி ஊறி விடும்.

5. வெட் ஸ்கிரப்பர் ஸ்பான்ஞ்

5. வெட் ஸ்கிரப்பர் ஸ்பான்ஞ்

ஈரமான ஸ்கரப்பர் ஸ்பான்ச் கொண்டு முதல் பகுதியை நன்றாக துடைக்கவும். ஒரே நேரத்தில் நீளமான பகுதியை துடைப்பதால் குறைந்த நேரத்தில் அதிக இடத்தை துடைக்க முடியும். பிறகு ஸ்பாஞ்சை நீரில் முக்கி எடுக்கவும். ஒரு கப் தண்ணீரால் துடைத்த இடத்தை கழுவிக் கொள்ளவும். முதல் பகுதியை சுத்தம் செய்தவுடன், மூன்றாம் பகுதியில் கிளீனரை ஸ்ப்ரே செய்யவும். அந்த பகுதி ஊறுவதற்குள் இரண்டாம் பகுதியை சுத்தம் செய்யலாம். பிறகு மூன்றாவது பகுதியை சுத்தம் செய்யலாம்.

6. ப்ளீச்

6. ப்ளீச்

முழுவதும் சுத்தம் செய்த பிறகும், அங்கும் இங்குமாக இருக்கும் சில அழுக்குகளை போக்க, ஒரு மடங்கு ப்ளீச் மற்றும் இரண்டு மடங்கு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். சிறிது நேரம் இந்த கலவை ஊறட்டும். பிறகு ஷவரை திறந்து தண்ணீரை வெளியேற்றவும். பின், இந்த ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள நீரை வெளிப்புறமாக ஷவரில் தெளிக்கவும்.

7. ஷவரின் வடிநீர் தட்டில் அடைப்பு ஏற்பட்டால்

7. ஷவரின் வடிநீர் தட்டில் அடைப்பு ஏற்பட்டால்

வடிநீர் தட்டு அல்லது பைப்களில் அடைப்பு ஏற்பட்டால் அமிழ்த்தியை (plunger) பயன்படுத்தி அடைப்பை போக்கலாம். இதே அமிழ்த்தியை பயன்படுத்தி ஷவரில் அடைப்பு ஏற்பட்டாலும் போக்கலாம். ஷவரின் வடிநீர் தட்டின் மூடியை திறந்து கொள்ளவும். பின்பு அமிழ்த்தியை பயன்படுத்தி அடைப்பை போக்கவும். அப்படியும் அடைப்பு போகவில்லை என்றால் ரசாயன கிளீனரை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: cleaning
English summary

How to Clean a Showerhead That's Seen Better Days

How to Clean a Showerhead That's Seen Better Days.
Story first published: Monday, March 19, 2018, 10:06 [IST]
Desktop Bottom Promotion