Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
கஷ்டப்பட்டு சமைச்சாலும் பெண்கள் சமைக்கிற மாதிரி டேஸ்ட் வரலையா? இந்த டிப்ஸ மனசுல வெச்சிக்கோங்க
இங்கு சில ஐடியாக்கள் தருகிறோம். அதைப் பயன்படுத்தி சமையல் செய்து, ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்.
சமையல் என்பது ஒரு சிறந்த கலை என்பார்கள். அதிலும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது ருசியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பரிசாக தரக் கூடியது.

ஆனால் அப்படி சமைக்கின்ற போது நாம் செய்யும் சில தவறுகள் அந்த உணவை ஆரோக்கியமற்மதாக மாற்றுகின்றன. உதாரணமாக நாம் தாளிக்கும் போது சேர்க்கும் எண்ணெய் நமது உடலை எந்த வகையில் எல்லாம் பாதிப்பை உண்டாக்கும் எனத் தெரியுமா?

சமையல்
வேலைக்கு போகணும், வெளியே கிளம்பணும் என்று சீக்கரம் சீக்கிரமாக நொடிக்குள் சமைக்க வேண்டும் என்று நாம் செய்யும் சமையல் தவறுகள் தான் நம் ஆரோக்கிய பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதிக நேரம் காய்கறிகளை வதக்கி கொண்டே இருப்பது அதன் ஊட்டச்சத்துக்களை இழக்க செய்கிறது. அதை சாப்பிடும் நமக்கும் எந்த வித ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதில்லை. இப்படி சமையலில் நாம் செய்யும் சில தவறுகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

அதிக பதப்படுத்துதல்
சாலட் மற்றும் சாண்ட்விட்ச் சாப்பிட நினைத்தாலே போதும் அதில் அதிகளவு சோயா சாஸ் அல்லது மயோனைஸ் ஊற்றி சாப்பிடத் தான் விரும்புவோம். ஆனால் இந்த மாதிரி அலங்கரித்து சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லது கிடையாது. காரணம் இதில் அதிகளவில் சோடியம் உள்ளது. இதனால் உங்கள் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து உடலில் நீர் தேக்கம் ஏற்படலாம்.

தேனை அதிகளவில் சூடுபடுத்துதல்
நாம் பயன்படுத்தும் சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகளுக்கு பதிலாக தேனை பயன்படுத்துவோம். இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் அதே இந்த தேனை ரெம்ப நேரம் நீங்கள் சூடுபடுத்தி வந்தால் அதன் மருத்துவ குணங்கள் போய்விடும். இதற்கு பதிலாக நீங்கள் இதை அப்படியே சூடுபடுத்தாமல் குடிப்பது நல்லது. சூடுபடுத்துவதால் இதிலுள்ள என்சைம்கள் இழந்து உடலுக்கு நச்சாக மாறி விடும். 40 டிகிரி செல்சியஸில் சூடுபடுத்தினாலே இதன் தன்மை மாறி கசக்க ஆரம்பித்து விடும்.

அதிக நேரம் எண்ணெய்யை சூடாக்குதல்
சில வெஜிடபிள் ஆயில்களுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை இருக்கும். ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்த கூடாது. எனவே இதன் புகை நிலைக்கு மேல் சூடுபடுதுதினால் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிய கூடும். சன்ப்ளவர் ஆயில் போன்றவற்றை சமையலில் வதக்க, பொரிக்க, வறுக்க மட்டுமே பயன்படுத்தவும். உணவின் மீது தெளிக்க, ப்ளோவர் கொடுக்க நீங்கள் ஆளி விதை எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

வறுத்த உணவு
வறுத்த உணவு என்றால் எல்லாருக்கும் ரெம்ப பிடிக்கும். ஆனால் இது ஒரு ஆரோக்கியமற்ற உணவு என்பதே உண்மை. எண்ணெய்யில் பொரித்த ிகள், எண்ணெய்யில் பொரித்த சிக்கன் போன்றவைகள் டயாபெட்டீஸ் மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இப்பொழுது எல்லாம் சில இடங்களில் ஏர் ப்ரையர் கொண்டு குறைந்தளவு எண்ணெய்யை பயன்படுத்தி வறுக்கின்றனர். இது ஆரோக்கியமான உணவுக்கு வழிவகுக்கிறது. எனவே நீங்களும் ஏர் ப்ரையர் கொண்டு ஆரோக்கியமான வறுத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

தவறான பாத்திரங்களை பயன்படுத்துதல்
சில டிஷ்கள் சமைக்கும் போது அதற்கு பயன்படுத்தும் பாத்திரங்களும் முக்கியமானது. உணவுகள் ஒட்டாமல் இருக்க பயன்படும் நான்ஸ்டிக் பாத்திரங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டெவ்ளான் என்ற பொருள் உள்ளது. இந்த டெவ்ளான் மனிதர்களில் பெர்ப்ளோரோஆக்டோனிக் என்ற அமிலத்தை உருவாக்கி கல்லீரலை பாதித்து ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கிறது. எனவே நீங்கள் இரும்பு, கண்ணாடி, செராமிக், எவர் சில்வர் பாத்திரங்கள் போன்ற நம் முன்னோர்கள் கடைபிடித்த பாத்திரங்களை பயன்படுத்தலாம். அது தான் நமது உடலுக்கும் நல்லது.

சமைக்காத உப்பு
சில பேர்களுக்கு சாப்பிடும் போது கொஞ்சம் உப்பு தூவிக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். உப்பு நன்றாக உணவில் ஒட்ட வேண்டும் என்பதற்காக இதைச் செய்வார்கள். ஆனால் சமைக்காத இந்த உப்பால் இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. டயட்டீசியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர். ஹர்ஜீட் கவுர் அமென்தீப் மருத்துவமனையில் இருந்து கூறுவதாவது இப்படி சமைக்காத உப்பை உணவை சேர்க்கும் போது இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் நமது உடலில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் ஒரு சமச்சீரற்ற விளைவை ஏற்படுத்தி விடுகிறது என்கிறார்.

அதிக நேரம் காய்கறிகளை வேக வைத்தல்
அதிக நேரம் காய்கறிகளை வேக வைப்பது அதன் ஊட்டச்சத்துக்களை இழக்க செய்கிறது. எனவே ரெம்ப நேரம் காய்கறிகளை கொதிக்க விட வேண்டாம். காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே கிடைக்க லேசாக அதை வதக்கினாலே போதும். அப்படி இல்லையென்றால் சூப் போட்டு குடியுங்கள். உடலுக்கும் நல்லது.

காய்கறிகளின் தோலை உரித்தல்
நிறைய காய்கறிகளின் தோலை உரித்து தான் சமையலுக்கே பயன்கடுத்துவோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா உருளைக்கிழங்கு, காரட், பூசணிக்காய், வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்ற உணவுகளின் தோலில் ஏராளமான ஊட்டச்சத்துகள், தாதுக்கள் உள்ளன. தோலில் அதிகளவில் நார்ச்சத்து உள்ளது. இது நமது சீரண மண்டலத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. எனவே நீங்கள் தோலை நீக்கும் போது இந்த ஊட்டச்சத்துகள் உங்களுக்கு கிடைக்காமல் போகின்றன. வேண்டும் என்றால் காய்கறிகளை நன்றாக கழுவி விட்டு தோலை நீக்காமல் பயன்படுத்துங்கள். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேற்கண்ட தவறுகளை களைந்து இனிதாவது ஆரோக்கியமான சமையலை செய்து உண்டு வளமாக வாழலாம்.



Click it and Unblock the Notifications











