For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஷூ கப்படிக்குதா? இதோ கைவசம் சூப்பர் ஐடியாக்கள்!!

ஷூவிலிருந்து வரும் நாற்றம் மற்றவர்களின் கேலிக்கும்கிண்டலுக்கும் ஆளாவதைவிட பிறரது மனதில் நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திடும்.இதனை தவிர்க்க சில எளிய டிப்ஸ்

|

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்பவர் வரை பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஷூவை

பராமரிப்பது தான் பெரிய விஷயம். திடீரென்று ஷூவிலிருந்து வரும் நாற்றம் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதைவிட பிறரது மனதில் நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திடும்.

how-get-rid-shoe-odor

இதை எளிதாக தீர்க்க சில டிப்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன காரணம் :

என்ன காரணம் :

முதலில் ஷூவில் எப்படி நாற்றம் வருகிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை வராமல் தடுப்பதும் எளிது.

பாக்டீரியா :

ஷூவை நீண்ட நேரம் காலில் மாட்டியிருந்தால் காலில் வேர்த்து ஷாக்ஸ் நனைந்து அதன் மூலமாக பாக்டீரியாக்களால் உருவாகும். அப்படி வளரும் பாக்டீரியாக்கள் காலில் உள்ள டெட் செல்களை உணவாக்கிக்கொள்ளும்போது நாற்றம் வரும்.

ஷூ-சாக்ஸ் :

நம் காலுக்கு பொருந்தாத ஷூ, சாக்ஸ் அணிந்து கொண்டாலும் கெட்ட நாற்றம் வரும். காற்று புக முடியாதபடிடைட்டாக அணியக்கூடாது.காட்டன் சாக்ஸ்தான் பயன்படுத்த வேண்டும். பாலிஸ்டர்,நைலான்,பாலிஸ்டர் போன்றவற்றில் சாக்ஸ் அணியக்கூடாது. ஏனென்றால் இவையெல்லாம் வியர்வையை உறிஞ்சாது.

சுத்தம் :

காலை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது அவசியம். கால் நகங்களில் அழுக்கு இருப்பது, ஏதேனும் காயங்கள்

இருந்து அதனை பராமரிக்காமல் காற்றோட்டமாக வைக்காமல் ஷூ அணிந்திருந்தாலோ இப்படி நாற்றம் வரும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா :

சமையல் சோடாவை நாம் சமையலுக்கு மட்டுமல்ல இதற்கும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை குட்டிப் பாக்கெட்டுகளில் அடைத்து அதனை ஷூக்களில் போட்டு வைத்தால் அவை ஷூவில் உள்ள பாக்டீரியாக்களை அழித்திடும். இதனால் நாற்றம் வராது.

முதல் நாள் மாலை ஷூ கழற்றியதும் இந்த பாக்கெட்டுகளை போட்டுவைத்திடுங்கள் மறுநாள் நீங்கள் அணியும் போது அதனை வெளியே எடுத்துவைத்துவிட்டு அணிந்து கொள்ளலாம். பாக்கெட்டில் அடைக்காமல் அப்படியே ஷூவின் உள்ளே தூவவும் செய்யலாம்.

Image Courtesy

வினிகர் :

வினிகர் :

இரண்டு கப் வினிகருடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய ஷூவை முக்கியெடுத்தாலே ஷூவில் உள்ள பாக்டீரியாக்கள் எல்லாம் இறந்திடும்.

யூக்கலிப்டஸ் ஆயில் :

யூக்கலிப்டஸ் ஆயில் :

பஞ்சை எடுத்து சிறிய பால் போல உருட்டி அதனை ஆயிலால் நிரப்பிக்கொள்ளுங்கள் அதனைக்கொண்டு ஷூ உள்ளே நன்றாக துடைத்திடுங்கள்.பின்னர் அதன் மேலே பேப்பரை வைத்து மூடிவிடுங்கள். இதனால் யூக்கலிப்டஸ் ஆயிலின் வாசம் வெளியேறாமல் உள்ளேயே இருக்கும். முந்தைய தினமே இப்படி செய்துவைத்துவிட்டால் மறுநாள் ஷூ நாற்றம் இருக்காது.

டீ பேக் :

டீ பேக் :

ப்ளாக் டீ பேக் இதற்கு பயன்படுத்தலாம். அதிலிருக்கும் டாக்சின்கள் பாக்கிடீரியாக்களை அழித்திடும். அதுமட்டுமல்லாமல் டீ இலைகள் ஷூவில் இருக்கும் கெட்ட நாற்றத்தை உறிஞ்சிடும். பயன்படுத்திய டீ பேக்குகளை எடுத்து நன்றாக உலர்த்தி ஷூ உள்ளே போட்டு வைத்தால் போதும். ஸ்போர்ட்ஸ் ஷூக்களுக்கு இந்த முறை நல்ல பலனை கொடுக்கும்.

வெங்காயம் :

வெங்காயம் :

வெங்காயத்தில் இருக்கும் கார்ப்புத் தன்மை ஷூவில் உள்ள பாக்டீரியாக்களை அழித்திடும். முந்தைய நாள் இரவு வெங்காயத்தை சின்ன துண்டுகளாக வெட்டி ஷூக்குள்ளே போட்டு வைத்திடுங்கள். இது பேக்டீரியாக்களை அழிப்பதுடன் நாற்றத்தையும் உறிஞ்சிவிடும்.

ஆரஞ்சு பழத்தோல் :

ஆரஞ்சு பழத்தோல் :

அதிகப்படியான நாற்றமிருந்தால் இதனை முயற்சிக்கலாம். ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டவுடன் தோலை தூக்கியெறியாமல் அதனை ஷூவின் உள்ளே போட்டு வையுங்கள். இது நாற்றத்தை போக்குவதுடன் வாசனையையும் கொடுக்கும்.

பேபி பவுடர் :

பேபி பவுடர் :

சாக்ஸ் அணிவதற்கு முன்னால் உங்கள் பாதங்களுக்கு பேபி பவுடர் போட்டுக்கொள்ளுங்கள். இதனை வியர்ப்பது குறியும். இதனால் பாக்டீரியாக்கள் உருவாவது தவிர்க்கப்படும்.

ட்ரையர் ஷீட் :

ட்ரையர் ஷீட் :

ஷூவை பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் வைத்திருந்தாலும் அதில் பாக்டீரியாக்கள் உருவாகி நாற்றம் வரும். இதனை தவிர்க்க ட்ரையர் ஷீட்களை ஷூக்குள்ளே வைத்திடுங்கள். அடுத்த முறை பயன்படுத்தும் வரை அதனை எடுக்க வேண்டாம்.

சுத்தம் :

சுத்தம் :

இதை எல்லாவற்றையும் விட சுத்தம் மிகவும் அவசியம். இரண்டு ஜோடி ஷூக்களை வைத்திருங்கள். தினமும் துவைத்த சுத்தமான சாக்ஸ்களையே பயன்படுத்துங்கள். அவசரம் என்று சொல்லி ஈரக்காலில் சாக்ஸ் அணிய வேண்டாம். உங்கள் காலுக்கு பொருத்தமான ஷுக்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: home and garden tips
English summary

How To Get Rid Of Shoe Odor

Here some Home remedies To Get Rid Of Shoe Odor
Story first published: Monday, July 17, 2017, 12:59 [IST]
Desktop Bottom Promotion