விமானம் டேக்-ஆப், லேண்டிங் ஆகும் போது ஏன் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் நபர்களுக்கு மட்டும் இது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், விமானம் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் சமயங்களில் பயணிகளை கழிவறை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். பெரும்பாலும் இது ஏன் என விமானத்தில் பயணித்தவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்.

இதையும் படிங்க: ஏன் இந்த கழிவறை கதவுகள் முழுதாக மூடப்படாமல் இருக்கிறது என நீங்கள் யோசித்தது உண்டா?

இதற்கு பின்னணியில் சிலபல காரணங்கள் கூறப்படுகின்றன. அவை என்னென்ன, ஏன் இப்படி கூறுகின்றனர் என இனி தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் ஒன்று:

காரணம் ஒன்று:

விமானம் 1000 அடிக்கு கீழே பறந்துக் கொண்டிருக்கும் போது, பயணிகள் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருக்க வேண்டும் என்பது சர்வதேச விமான போக்குவரத்து சட்டம்.

இதனாலும் கூட பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. (காரணம் கழிவறையில் சீட் பெல்ட் இருக்காது)

காரணம் இரண்டு:

காரணம் இரண்டு:

டேக்-ஆப், மற்றும் லேண்டிங் ஆகும் சமயங்களில் தான் பயணிகளுக்கு அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, அந்த சமயங்களில் பயணிகளின் மீது விமான ஊழியர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

இதை கருத்தில் கொண்டு தான் பயணிகளை கழிவறை பயன்படுத்து இந்த தருணத்தில் விமான ஊழியர்கள் அனுமதிப்பது இல்லை என ஓர் விமான பணிப்பெண் கூறுகிறார்.

காரணம் மூன்று:

காரணம் மூன்று:

விமானத்தின் கழிவறையில் சீட்-பெல்ட் வசதி கிடையாது. மேலும், கழிவறை ஃப்ளோர் சற்று கடினமாக இருக்கும் என்பதால் எளிதாக அடிப்பட வாய்ப்புகள் உள்ளன.

இதனாலும், பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என விமான ஊழியர்கள் கூறுகின்றனர்.

பயணிகளின் நன்மை:

பயணிகளின் நன்மை:

பயணிகள் மீது இருக்கும் அக்கறை, கவனம் மற்றும் சர்வதேச விமான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற காரணங்களால் தான் பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த தடை கூறப்படுகிறது.

முன்னறிவிப்பு:

முன்னறிவிப்பு:

இதற்காகவே, சில நீண்ட விமான பயணத்தின் போது, பணிப்பெண்கள் சில மணி நேரத்திற்கு முன்பே, கழிவறை பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விமானம் தரை இறங்க தயாராகிறது என கூறிவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: toilet, கழிவறை
English summary

Ever Wondered Why Airplanes Don't Allow Using Toilet During Take Off And Landing?

Ever Wondered Why Airplanes Don't Allow Using Toilet During Take Off And Landing? take a look on here.
Story first published: Wednesday, July 20, 2016, 12:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter