For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் இந்த கழிவறை கதவுகள் முழுதாக மூடப்படாமல் இருக்கிறது என நீங்கள் யோசித்தது உண்டா?

|

சில பெரும் மால்கள் அல்லது ஹோட்டல்கள் சென்றால் அங்கு இருக்கும் கழிவறைகளின் கதவுகள் முழுவதுமாக மூடப்படாமல் மேலும், கீழும் திறந்த வெளி இருப்பதை நீங்கள் காண முடியும். பெரும்பாலும் முன்னர் நாம் இதை ஆங்கில படங்களில் தான் கண்டிருப்போம்.

ஆனால், இப்போது நமது ஊர்களிலும் இது மிகவும் சாதரணமாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏன் இது போன்று கழிவறை கதவுகளில் மேலும், கீழும் திறந்த வெளியாக இருக்கிறது என நீங்கள் என்றாவது யோசித்து உண்டா? இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காரணம் #1

காரணம் #1

அவசர நிலை காரணத்திற்காக இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவேளை யாரேனும் கழிவறையில் இருக்கும் போது மாரடைப்பு அல்லது மயக்கம் ஏற்பட்டு உள்ளே மயங்கிவிட்டால். அதை உடனே கண்டறிந்து அவர்களை எளிதாக வெளி கொண்டுவரவும் இந்த வகை உதவுகிறது.

 காரணம் #2

காரணம் #2

சிலர் கழிவறையை வேறு காரியங்களுக்கும் பயன்படுத்துவது உண்டு. இதை தவிர்க்கவும் இந்த வகை கழிவறை முறை உதவுகிறது.

 காரணம் #3

காரணம் #3

வெளியில் இருந்து உதவி பெறலாம். ஒருவேளை டாய்லெட் பேப்பர் தீர்ந்துவிட்டால். வெளியில் இருக்கும் நபரிடம் இருந்து உதவி பெறவும் இந்த முறை கழிவறைகள் உதவுகின்றன.

 காரணம் #4

காரணம் #4

ஒருவேளை உட்புறமாக கதவு லாக் ஆகிவிட்டாலும் கூட, மிக எளிதாக வெளியே வந்துவிடலாம்.

 காரணம் #5

காரணம் #5

பொதுவாக நம் மக்கள் இடையே ஓர் பழக்கம் இருக்கிறது. திறக்க முயன்று உள்பக்கம் மூடியிருந்தாலும் கதவை தட்டுவார்கள். இந்த முறை கழிவறையில் உள்ளே ஆள் இருப்பதை வெளியில் இருந்தே கண்டறிந்துவிடலாம். இதனால், இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

 காரணம் #6

காரணம் #6

முழுமையாக மூடப்பட்ட கழிவறைகளை சுத்தம் செய்வது கடினம். அப்படியே செய்தலும், எளிதாக மீண்டும் மூலை, இடுக்குகளில் அழுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். இதுவே, இந்த வகை கழிவறைகளை மிக எளிதாக சுத்தம் செய்துவிடலாம்.

 காரணம் #7

காரணம் #7

மேலும், இந்த வகை கழிவறைகள் கட்டமைக்க குறைந்த அளவில் தான் செலவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Toilet Stall Doors Don't Go All The Way Down To The Floor

Why Toilet Stall Doors Don't Go All The Way Down To The Floor?, read here in tamil.
Desktop Bottom Promotion