Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
கண்ணாடியை வைத்து எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்?
ஒரு அறையில் எந்த பொருள் இருந்தாலும் கூடுதலாக அங்கு ஒரு கண்ணாடி இருந்தால் நன்றாக இருக்கும். கண்ணாடி ஒளியை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சரியான அலங்காரங்களுடன் சுவற்றில் மாட்டி வைத்தால், கலைநயத்தையும் கொடுக்கும். நவீன அல்லது பழமையான அலங்காரத்தின் எந்த வகை வேலைகளிலும் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். சிறிய மற்றும் பெரிய கண்ணாடிகளின் பயன்பாடுகள் நிறைய உள்ளன. பெரும்பாலான மக்கள் அதன் அழகு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி அறியாமல் தினமும் அதை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வீட்டின் பொது அறையில் உள்ள கண்ணாடி ஒருவருடைய பிரதிபலிப்பை காட்டுவதை விட, ஒரு சிறந்த அலங்காரப் பொருளாகவே விளங்குகிறது.
மேலும் ஒரு கண்ணாடியை சுவற்றில் மாட்டவோ அல்லது ஒரு பெரிய துண்டாக ஓரிடத்தில் வைக்க முயற்சி செய்யும் போது, கலையுணர்வுடன் தேர்வு செய்ய வேண்டும். ஒரு அழகான ஓவியத்தை கண்ணாடியின் எதிர் புறத்தில் மாட்டி வைத்தால், அது அந்த ஓவியத்தை பிரதிபலித்து, அந்த ஓவியத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. இப்பொழுது இத்தகைய கண்ணாடி எப்படியெல்லாம் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது என்பது பற்றிய சில விவரங்களை கீழே காணலாம்.

மொசைக் கண்ணாடிகள்:
வீட்டை அலங்கரிக்க கண்ணாடித் துண்டுகளை பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாகும். கைவினைப் பொருட்கள் மீது ஆர்வமுடையவராக இருந்தால், ஒரு பலகையில் பல்வேறு நிறங்களைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளை ஒட்டி, சுவற்றில் தொங்கவிடலாம்.
பழங்கால கண்ணாடிகள்:
பழைய புள்ளியிட்ட கண்ணாடிகள், பழங்கால வசீகரத்தை வழங்கும். சந்தைகள் மற்றும் புற விற்பனை நிலையங்கள் மூலம் இத்தகைய பழைய கண்ணாடிகளை சேகரிக்கலாம். அவற்றை மொத்தமாக மற்றும் அனைத்து மூலைகளிலும் தொங்கவிட்டு, நேர்த்தியான அழகை உருவாக்கலாம். எளிய மற்றும் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிகளை பொருத்தி, தவறான பொருத்தமின்மையால் அவற்றை புதிய வகை மற்றும் புதுப்பாணியின் மறு வடிவம் ஆக்கலாம்.
ஃப்ரேம் அலங்கரிப்பு:
ஹாலில் கண்ணாடியைப் பயன்படுத்தும் போது, கடல் சிப்பிகள் மற்றும் சங்குகளைக் கொண்டு, கண்ணாடி ஃப்ரேமை அலங்கரித்து தொங்கவிட்டால், அது மிகவும் சூப்பராக இருக்கும்.
ஜன்னலில் கண்ணாடி:
ஒரு பெரிய கண்ணாடி முன் ஒரு எளிய ஜன்னலின் ஃப்ரேம்மை பயன்படுத்தி, ஒரு ஜன்னல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். அதற்கு கீழே ஒரு அடுக்கை ஏற்படுத்தி, அதில் செடி வகைகளை வைக்கலாம். இதை சிறிய மற்றும் பெரிய வகை கண்ணாடிகளிலும் பயன்படுத்தலாம். இது மற்றொரு உலகத்திற்கான பார்வையை வழங்குகிறது.
விரும்பாத இடங்களில் கண்ணாடிகள்:
சுவற்றின் இருண்ட பகுதிகளில், சமையலறையில் மற்றும் அலமாரியில் ஒளி ஏற்பட கண்ணாடி துண்டுகளைப் பயன்படுத்தவும். ஒரு அறையின் வெளிச்சத்தை அதிகரிக்க, ஃபோட்டோ ஃப்ரேம் கொண்ட கண்ணாடியை விளக்குக்கு பின்னால் வைக்கவும். மேலும் பண்டிகை நேர சாப்பாட்டின் மகிழ்ச்சியை கூட்ட, கண்ணாடி ஓடுகளை சாப்பாட்டு மேசை மீது பாய் போல பரத்தி வைக்கலாம். குறைந்த வெளிச்சம் கொண்ட அறையில், கண்ணாடிகளை மேற்கூரையில் பொறுத்தினால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்ப்பது போன்ற உணர்வை அது ஏற்படுத்தும்.
தோட்டத்தில் கண்ணாடி:
புல்வெளிகள் மற்றும் தோட்டங்களில் கண்ணாடியைப் பயன்படுத்துவது அற்புதமான விஷயமாகும். தோட்டத்திலுள்ள சுவர்களில் நிமிர்த்தி வைக்கப்படும் செவ்வக வடிவ கண்ணாடிகளை வைத்தால், மற்றொரு தோட்டம் உள்ளது போல் இருக்கும். மேலும் கண்ணாடியை நோக்கி ஒரு பாதையை உருவாக்கி வைத்தால், அது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும். அதுவும் நிழலான இடங்களில் கண்ணாடிகளை வைக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றின் அழுத்தமான மற்றும் வலுவான பிரதிபலிப்பு தாவரங்களை சேதப்படுத்தும்.



Click it and Unblock the Notifications