Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மழைக்காலத்தில் வீட்டில் வீசும் துர்நாற்றத்தை போக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே வீடுகளில் பொருள்கள் அதிகமாக வைத்திருக்கும் அறைகளில் குறிப்பாக மரச்சாமான்கள் வைத்திருக்கும் அறைகளில் உள்ள ஈரப்பதத்தால், ஒருவித துர்நாற்றம் வீசக்கூடும். இந்த துர்நாற்றத்தைப் போக்கி ஹால், பெட்ரூம் என எல்லா அறைகளிலும் நன்கு வாசனையாக இருக்க இந்த குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்கள்..
1. முதலில் உங்கள் வீடு எங்கும் மாசு அல்லது குப்பைச் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. அது மிகவும் முக்கியம். குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முறையான முறையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். குப்பை எடுத்துச் செல்லும் முறையில் ஒவ்வொரு நாளும் அதை நீக்குவது நல்லது.

2. வீட்டின் உள்ளே ஈரப்பதம் மிகுந்தோ அல்லது வெப்பநிலை அதிகம் இருந்தாலோ துர்நாற்றம் வீசக்கூடும்.. அதனால் எப்போதும் உங்கள் வீட்டில் பரவலாக காற்றோட்டம் இருந்தால், துர்நாற்றம் குறையவும், நீர் ஊட்டமுள்ள இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் உதவியாக இருகும்..
3. உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியிலும் வாசனைக் கம்பிகளை பயன்படுத்துங்கள். மல்லிகை, அல்லது எலுமிச்சை போன்ற நுகர்த்திய வாசனைகள் உள்ள திரவியங்கள் இந்தப் பிரச்சனையை குறைக்க உதவும். அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கெட்ட வாசனைகள் விரைவில் நீக்கப்பட்டு நல்ல வாசனைகள் வீட்டிற்குள் வரும்..
4. சமையல் செய்யும்போது அதிக எண்ணெய் மற்றும் மசாலா பயன்படுத்தினால் வாசனை ஏற்படலாம். அது கண் எரிச்சல் மற்றும் தும்மல் ஏற்படும்.. அதனால், சமையல் செய்யும் போது, கூடுதலாக எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்காதது மிகவும் நல்லது. இதுவே வாசனையையும் குறைக்க உதவும்.
5. உங்கள் வீட்டில் செருப்புகளை வைக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை இவற்றைப் சுத்தம் செய்வது நல்லது.. அவற்றின் மேல் கூடுதலாக மூடியிருப்பதன் மூலம் வாசனைகள் குறைக்கலாம்.
6. வீட்டில் துர்நாற்றம் மற்றும் மாசுபாடு ஏற்படக்கூடிய பகுதிகளில் நெருப்புக்கட்டிகளை பயன்படுத்தலாம். அதில் சாம்பிராணி அல்லது பூண்டின் தோல்களை போட்டு வைத்தால் வீடு முழுக்க நல்ல வாசனை நிறைந்திருக்கும்.. இதன் மூலம் மாசுப்பாட்டைப் தவிர்க்க முடியும்..
7. குளியலறை முதல் சமையலறை வரை எதையும் சுத்தம் செய்ய எலுமிச்சை பயன்படுத்தலாம். அவற்றை சுத்தம் செய்ய தண்ணீாில் எலுமிச்சை பழத்தின் தோலை அரைத்தோ அல்லது அதன் சாறை பிழிந்தோ விட்டு, தரையைச் சுத்தம் செய்யலாம். இது துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும், சுத்தமாக வைத்திருப்பதற்கும் உதவும்.
8. எலுமிச்சை பயன்படுத்தி துர்நாற்றத்தை போக்கலாம்.. பாத்திரங்கள் தொடங்கி, வீட்டின் மூலை முடுக்குகள், தரையைத் துடைப்பது, சுவர்கள் மற்றும் கதவுகளை சுத்தம் செய்வது, துணிகளில் வரும் துர்நாற்றம் என எல்லா வகையான க்ளீனர்களாகவும் இந்த எலுமிச்சை பழத்தைப் பயன்படுத்த முடியும்.
9. சாறு பிழிந்து விட்டு கீழே தூக்கி எறியும் எலுமிச்சை தோல்களைத் சேகரித்து வைத்து, ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு அதில் எலுமிச்சை தோல்களைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின் இது ஆறியதும் அதே நீரை விட்டு அரைத்து வடிகட்டி, அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறை முழுவதும் ஸ்பிரே செய்து விட துர்நாற்றம் நீங்கி, அறை முழுவதும் நல்ல நறுமணம் வீசும். ரூம் ஸ்பிரேக்களே தேவைப்படாது.
இந்த வழிகளைப் பின்பற்றி, உங்கள் வீட்டில் துர்நாற்றம் வராமல் எளிதாக கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications