For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொட்டியில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

By Maha
|

இன்றைய காலத்தில் நிறைய அபார்ட்மெண்ட்டுகள் வந்துவிட்ட நிலையில், பெரிய அளவில் தோட்டம் அமைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. அதற்கேற்றாற் போலவே அவ்வப்போது காய்கறிகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் பலர் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.

ஆனால் இப்படி காய்கறிகளை உணவில் சேர்க்காமல் போனால், பின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலில் பல்வேறு நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும். ஆகவே தற்போது பலர் இதனைப் புரிந்து கொண்டு, நம்மிடம் இருக்கும் சிறு இடத்திலேயே எப்படி காய்கறிகளை வளர்க்கலாம் என்று யோசித்து வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் அபார்ட்மெண்ட் வந்துவிட்டதால், தொட்டியில் வளர்க்கக்கூடியவாறான காய்கறி செடிகளைப் பற்றி பலர் தேட ஆரம்பித்துவிட்டனர்.

இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

ஆகவே அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்ட் ஸ்கை தொட்டியில் நன்கு வளரக்கூடிய சில காய்கறிகளை பட்டியலிட்டுள்ளது. அந்த காய்கறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவற்றை வாங்கி வளர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கியானது எளிதில் தொட்டியில் வளரக்கூடிய காய்கறிகளுள் ஒன்று. ஆகவே நல்ல அகன்ற தொட்டியை வாங்கி, அதில் முள்ளங்கியின் விதைகளை தூவிவிட்டால் போதும். ஆனால் தொட்டியில் உள்ள மண்ணானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இப்படி வைத்துக் கொண்டால், ஒரு மாதத்தில் முள்ளங்கி செடியின் வளர்ச்சியை நன்கு காணலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாய் கூட தொட்டியில் வளரும். ஆனால் இந்த செடி வளர்வதற்கு தொட்டியானது நன்கு பெரியதாக இருக்க வேண்டும். ஏனெனில் 5 கேலன் அளவுள்ள தொட்டியில் 1-2 செடி தான் வளரும்.

வெங்காயத்தாள்

வெங்காயத்தாள்

வெங்காயத்தாளானது 5 கேலன் அளவுள்ள தொட்டியில் நன்கு வளரக்கூடியது. இதிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை வளர்த்து வந்தால் சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

லெட்யூஸ்

லெட்யூஸ்

இந்த பச்சை காய்கறியானது தொட்டியில் ஈஸியாக வளரும். அதற்கு தொட்டியில் உள்ள மண்ணில் விதையை பரப்பி, தேவையான அளவு தண்ணீரை அவ்வப்போது ஊற்றி வர வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான மண்ணில் லெட்யூஸ் ஈஸியாக வளரும்.

தக்காளி

தக்காளி

நிச்சயம் இந்த காய்கறியானது அனைத்து வீடுகளிலும் இருக்கும். அதிலும் இந்த செடியை தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால், குட்டையாக வளரக்கூடிய தக்காளி செடியின் விதையை தூவி வளர்க்கலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்

அனைத்து வகையான பீட்ரூட்டும் தொட்டியில் நன்கு வளரக்கூடியதே. இருப்பினும் சிவப்பு நிற பீட்ரூட் தான் வேகமாக தொட்டியில் வளரும். ஆனால் இதை வளர்க்க வேண்டுமானால், தொட்டி பெரியதாகவும், 12 இன்ச் ஆழமாகவும் இருக்க வேண்டும். இதனால் பீட்ரூட்டானது எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables To Grow In Pots

If you want to grow vegetable plants in pots, then check out the ones that you can pick from. Now, you can add some organic vegetables in your diet.
Desktop Bottom Promotion