For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காய்கறி தோட்டத்தில் உள்ள பூஞ்சைகளைப் போக்க சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

ஒவ்வொரு தோட்டத்திலும் காணப்படும் பிரச்னை செடிகளில் பூஞ்சை ஏற்படுவது தான். ஒருவேளை உங்கள் தோட்டத்திலும் இவை இருந்தால் நீங்கள் இதை குறித்து கவலைப் பட வேண்டாம். ஆனாலும் இவை நிச்சயம் கவனிக்கத்தக்க விஷயங்களாக அமைகின்றன. எந்த ஒரு செடியும் பூஞ்சைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்காது. அது ரோஜாவாக இருந்தாலோ அல்லது ஏதேனும் அலங்கரிக்கும் செடியாக இருந்தாலோ கூட பூஞ்சைகளிடமிருந்து காப்பாற்றுவது கடினமானதாகும். ஆனால் இதை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாகவே பூஞ்சை தான் இருக்கும் செடியிலிருந்து வேறு வகை செடிக்கு பரவக் கூடியது கிடையாது.

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பூஞ்சை பிடித்திருப்பதை நாம் தெரிந்துக்கொள்ள பல வழிகள் உண்டு. இலைகளில் சாம்பல் அல்லது வெள்ளை பொடி போன்று இருந்தாலோ அதை விரைவில் அகற்ற முற்பட வேண்டும். மிகுந்த முதிர்ந்த காலத்தில் அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இதையும் நாம் கவனிப்பது நல்லது.

Getting Rid Of Fungi In Vegetable Gardens

இத்தகைய பூஞ்சைகள் செடிப்பிரியர்களுக்கு மிகுந்த வேதனையை கொண்டு வரும். இதைக் கட்டுப்படுத்த நாம் பல வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நமது வீட்டில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளுக்கும் கூட இந்த குறைகள் ஏற்படலாம். இதை நாம் அப்படியே விட்டுவிட்டால் காய்கறிகள் விற்கும் விலைக்கு இவைகளும் நமக்கு பெரும் நஷ்டத்தை தந்துவிடும். இந்த பகுதியில் எவ்வாறு இத்தகைய பூஞ்சைகளை கட்டுப்படுத்துவது என்பதை நாம் பார்ப்போம்.

பூச்சிக்கொல்லிகள்

பூஞ்சைகள் காய்கறி தோட்டங்களை பாழ்படுத்தக் கூடியவையாகும். இவை காய்கறியின் சத்துக்களை எல்லாம் உறிஞ்சி விடும். நாம் முன் எச்சரிக்கையாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி காத்துக் கொள்வது சிறந்ததாகும். திரவமாக இருக்கும் சோப்பை எடுத்து சிறிது தண்ணீரில் கலக்கி உங்கள் செடிகள் மீது தெளித்தால் அவை இயற்கையான பூச்சிக்கொல்லியாக அமையும். இந்த குறிப்பு நிச்சயம் பயன்தரும்.

பூண்டின் மந்திரம்

பூண்டு மிகுந்த நற்குணங்களை கொண்ட பயிராகும். இது தோட்ட பாதுகாப்பிற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. பூண்டை அரைத்து, தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளித்தால் அது சிறந்த பூஞ்சை கொள்ளியாக அமையும். இந்த குறிப்பும் கூட சிறந்த வகையில் நமக்கு உதவியாக இருக்கும் மற்றும் தேவையான நேரத்தில் உடனடியாக கை கொடுக்கும்.

சமையல் சோடா

பாத்திரம் கழுவும் சோப்பு, ஒரு காலன் தண்ணீர், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து அந்த கலவையை தெளித்தால் போதும், பூஞ்சைகளை ஒழித்து விட முடியும். சீக்கிரமாக மற்றும் எளிமையான முறையில் நாம் இதை தயார் செய்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை நாம் பயன்படுத்தினால் போதும் பூஞ்சைகளிடமிருந்து செடிகளை தப்புவிக்க முடியும்.

பூண்டு மற்றும் மிளகு கலவை

பூண்டு மற்றும் மிளகு கலவை அற்புதங்களை செய்ய வல்லது. பூண்டு, மிளகு, திரவமாக இருக்கும் சோப்பு மற்றும் ஒரு காலன் தண்ணீர் ஆகியவற்றை கலவையாக கலந்து எடுத்துக் கொண்டால், அந்த கலவை நமது செடிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். பூஞ்சைகள் இருக்கும் காய்கறி செடிகள் மீது இதை தெளித்தால் போதும் அவை விரைவில் குணம் பெரும்.

கந்தகம் உதவும்

கந்தகம் அல்லது சல்பர் என்று கூறப்படும் இந்த பொடியினால் செய்யப்பட்ட எந்த பொருளும் பூஞ்சைகளை அழிக்க உதவும். இதை நாம் பூஞ்சைகள் வரும் முன் செய்தால் நலமாய் இருக்கும். இதை தெளிக்கும் போது வெப்ப சூழ்நிலை 90° பாரன்ஹீட் ஆக இருப்பது சிறந்தது. அதிக அளவு கந்தகத்தை நாம் பயன்படுத்துவதும் செடிகளை பாழ்படுத்தி விடும். ஆதலால் கவனமாக தெளிக்கவும்.

எண்ணெய் வைத்தியம்

பூஞ்சைகளை எண்ணெய் தெளித்தும் விரட்டலாம். செடிகளின் மேல் எண்ணைய்களை தொடர்ந்து தெளிக்கவும். வேப்ப எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய் ஆகியவை செடிகளை பூஞ்சைகளிடமிருந்து பாதுகாக்கும். எண்ணெய அதிக சூட்டில் இருக்கும் போது தெளிக்கக்கூடாது. உபயோகிக்கும் முறையை உணர்ந்து கொண்டு இதை பயன்படுத்துவது சிறந்தது.

நீங்கள் தோட்டக்கலை மற்றும் செடி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் செடிகள் பூஞ்சைகளால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு வேதனையடைவீர்கள். உங்கள் தோட்டம் விலையுயர்ந்தது! செடிகளுக்கும் உயிர் உண்டு. ஆதலால் உங்கள் அன்பையும் பராமரிப்பையும் அவற்றிற்கு காட்டுங்கள்.

English summary

Getting Rid Of Fungi In Vegetable Gardens

To know if the plants in your vegetable garden are affected by fungi, you need to look for certain things. Look for gray or white powdery spots and if you find them, you really need to look for ways to get rid of it. Here are a few tips to get rid of fungi in vegetable gardens.
Story first published: Wednesday, January 1, 2014, 13:41 [IST]
Desktop Bottom Promotion