Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
கொசுக்களை விரட்டும் செடிகள்!!!
பூச்சிகளிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் கொசுக்களினால் ஏற்படும் காய்ச்சல்களால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதிலும் டெங்கு, மலேரியா போன்ற உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் காய்ச்சல்கள் கொசுக்களின் மூலம் தான் ஏற்படுகிறது. குறிப்பாக தற்போது நகரங்களில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கு நீர் தேங்கிய நிலையில் இருப்பதால், கொசுக்களானது எளிதில் உற்பத்தியாகின்றன.
ஆகவே பலர் வீட்டில் கொசுக்களை விரட்டும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய கொசு மருந்துகளால், சிலருக்கு அலர்ஜி கூட ஏற்படும். எனவே அத்தகையவர்கள் வீட்டில் கொசுக்களை விரட்டக்கூடிய செடிகளை வளர்க்கலாம். இதனால் அந்த செடிகளின் நறுமணத்தால், அவை வீட்டையே அண்டாது. மேலும் கொசுக்களை விரட்டுவதற்கு பயன்படும் பெரும்பாலான செடிகள் கொசுக்களை விரட்டுவதோடு, அலங்காரத்திற்கும் பயன்படுகிறது.
எனவே வீட்டையும், குடும்பத்தையும் இயற்கையான முறையில் பாதுகாப்பதற்கு, கீழே குறிப்பிட்டுள்ள சில கொசு விரட்டி செடிகளை வளர்த்து பயன்பெறுங்கள்.

சாமந்தி
சாமந்திப் பூவின் நறுமணத்தினால், வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்க முடியும். இந்த செடிக்கு நிறைய சூரியவெளிச்சமானது தேவைப்படும். ஆகவே இதனை தொட்டியில் வளர்த்து, காலையில் தோட்டத்திலும், மாலையில் வீட்டின் உட்பகுதியில் வைத்து வளர்க்கலாம்.

சிட்ரோநல்லாபுல் (Citronella)
இது ஒரு புல் வகையைச் சேர்ந்தது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இதிலிருந்து எலுமிச்சை வாசனை வரும். மேலும் இந்த புல் கொத்தாக, நீளமான கிளைகளை கொண்டது.

துளசி
அனைத்து இந்துக்களின் வீடுகளிலும் வளர்க்கும் செடி தான் துளசி. இந்த நறுமணமிக்க மூலிகைச் செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் வருவதை தவிர்க்கலாம்.

ஹார்ஸ்மிண்ட் (Horsemint)
இது ஒரு வகையான புதினா செடியாகும். இந்த செடியை வீட்டில் வளர்த்தால், அதன் நறுமணத்தினால், கொசுக்கள் வீட்டையே அண்டாது.

கேட்னிப் (Catnip)
இந்த செடியில் உள்ள டீட் என்னும் கெமிக்கல், கொசுவர்த்தி மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றை விட அதிக அளவில் இருப்பதால், இதனை வீட்டில் வளர்த்தால், இதன் வாசனையால் கொசுக்கள் வீட்டில் வருவதைத் தவிர்க்கலாம்.

லெமன் பாம் (Lemon Balm)
லெமன் பாம் செடியும் புதினா செடியின் வகையைச் சேர்ந்தது. ஆனால் இதில் எலுமிச்சை வாசனை வரும். இந்த செடியை வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய செடியை வீட்டில் வளர்த்தால், வீடே வாசனையுடன் இருப்பதோடு, கொசுக்கள் வராமலும் இருக்கும்.

அப்பக்கொடி (Ageratum)
இந்த செடியில் அழகான ஊதா நிறப் பூவானது பூக்கும். இருப்பினும், இதிலிருந்து வரும் கௌமரின் என்னும் கொசுவை விரட்டும் கெமிக்கல் உள்ளதால், கொசுக்கள் வீட்டை அண்டாது.

லாவெண்டர்
லாவெண்டர் நறுமணத்திற்கு கொசுக்கள் வீட்டிற்கு வராது. எனவே லாவெண்டர் செடியை வீட்டில் வளர்த்து, வீட்டை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

ரோஸ்மேரி
ரோஸ்மேரியில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. இத்தகைய ரோஸ்மேரியை வீட்டின் தோட்டத்தில் வளர்த்தால், கொசுக்கள் மட்டுமின்றி, மற்ற பூச்சிகள் வராமலும் தடுக்கலாம்.

கிராம்பு
மசாலாப் பொருட்களில் ஒன்றான கிராம்பின் நறுமணத்திற்கும் கொசுக்கள் வராது. எனவெ இந்த கிராம்பு செடியை வீட்டில் வளர்த்து, கொசுக்களை விரட்டுங்கள்.



Click it and Unblock the Notifications