For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோட்டத்திற்கு தகுந்த வளமான மண்ணை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

By Ashok CR
|

ஒரு வீட்டை கட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். வீட்டை கட்டி முடித்த பின்பு அதனை பராமரிப்பது என்பது அதைவிடக் கடினமான ஒன்றாகும். ஒரு சிலர் தனது வீட்டில் தோட்டம் அமைக்க ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு தோட்டத்தை அமைப்பதற்கு முன் நாம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். இந்த நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றி அழகான தோட்டத்தை அமைத்து வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கலாம்.

உங்கள் வீட்டின் அழகான தோட்டம் தான் உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கச் செய்யும். உங்கள் வீட்டின் தோட்டம் உங்கள் வீட்டின் அழகை மாற்றும். உங்கள் தோட்டத்தின் வளமான மண்ணை பற்றி உங்கள் நண்பர்களிடம் பெருமையாக கூறி பாராட்டுகளை பெறலாம். ஆனால், உங்கள் தோட்டம் அவ்வாறு இல்லையென்றால்? என்ன செய்வது? மீண்டும் ஒரு பிரச்சனையில்லா தோட்டத்தை அமைக்க முடியுமா?

How To Pick Up Garden-Friendly Soil?

ஒரு புதிய தோட்டத்தை அமைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தாலும், நம்மில் பலர் இதனை தவறாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். ஒரு தோட்டத்தை அமைப்பதற்கு முன் உங்கள் நிலமண் தோட்டம் அமைப்பதற்கு தகுதியானதா எனக் கண்டறிய வேண்டும்.நல்ல வளமான மண்ணை பெற்றிருந்தால், கண்டிப்பாக அமைக்கலாம். நல்ல தோட்டம் அமைப்பதற்கான மண்ணை தேர்ந்தேடுப்பதற்கு இந்த அறிகுறிகளை அறிந்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே கீழ்க்கூறிய டிப்ஸ்களை படித்து, உங்கள் மண்ணை வளமாக்குங்கள்.

1. மண்ணின் வகையே மிகவும் முக்கியம்:

ஒரு மண்ணை பார்த்த உடனேயே அது வளமானதா இல்லையா என்பதை கூறி விடலாம். உங்கள் தோட்டத்தின் மண்ணை பரிசோதிக்க திட்டமிட வேண்டும். சிறிது மண்ணை உங்கள் உள்ளங்கையில் எடுத்து பிழியவும். அது ஒரு சரியான உருண்டையை உருவாக்கி கரும் நிறத்தில் இருந்தால், அதுதான் வளமான மண்ணாகும். அவ்வாறு இல்லையென்றால், அதில் மணல் பொருட்கள் அதிகமாகவும் செம்மண் குறைவாகவும் உள்ளது என்பதாகும்.

2. நீர் வடிக்கும் திறனை பரிசோதித்தல்:

உங்கள் தோட்டத்து மண்ணை பரிசோதிக்கும்போது, அது எவ்வாறு நீரை வடிக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும். தோட்டம் அமைக்க உதவும் வளமான மண் அதிக வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நீரை வடிக்காது. இதன் மூலமாக செடிகளுக்கு தேவைப்படும் நீரை அளிக்குமா அளிக்காதா எனத் தெரிந்து விடும். வளமான தோட்டத்து மண்ணானது நீரை தக்கவைத்து செடி வளருவதற்கும் ஈரப்பதம் நிறைந்திருக்கவும் உறுதுணையாக இருக்கும்.

3. pH பரிசோதனை:

இது ஒரு எளிமையான முறையாகும். இதன் மூலமாக தோட்டம் அமைப்பதற்கு உங்கள் மண் வளமானதா இல்லையா எனக் கண்டறியலாம். கடைகளில் இருந்து pH பரிசோதிக்கும் கிட்டை வாங்கி அதில் உள்ள செயல்முறையை செய்து பரிசோதிக்க வேண்டும். அதிக அமிலத்தன்மை அல்லது அல்கலினிடி உள்ள மண் தோட்டம் அமைப்பதற்கு ஏற்றது அல்ல.

இயற்கையான முறையில் தோட்டத்தின் மண்ணை பரிசோதிக்கும் வழிகள்:

4. மண்புழுக்கள்:

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்றழைக்கப்படும். இது உங்கள் தோட்டத்தை இயற்கையான முறையில் வளப்படுத்தும். உங்கள் தோட்டத்து மண்ணை தோண்டும்போது அதிக மண்புழுக்கள் காணப்பட்டால் அதுவே வளமான மண்ணாகும். எனினும், அவை வெளிச்சத்தை விரும்பாதவை என்பதால் சூரிய வெளிச்சத்தில் அதிகம் தென்படாது.

5. கற்கள்:

அதிகமான கற்கள் நிறைந்த மண் உங்கள் தோட்டத்திற்கு பிரச்சனையை அளிக்கும். கற்கள் நிறைந்த மண்ணானது செடிகளில் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், அவற்றை நீக்கி வளமான தோட்டத்தை பெறலாம்.

6. தவளைகள்:

தவளைகள் மூலமாக உங்கள் தோட்டம் வளமான மண்ணை பெற்றுள்ளதா இல்லையா எனக் கூறலாம். ஆரோக்கியமான தவளைகள் வளமான மண்ணின் மட்டுமே வாழ்ந்து வரும். அதனால், உங்கள் தோட்டத்தில் தவளைகள் அதிகமாக இருந்தால், வளமான மண்ணை பெற்றுள்ளது என்பதாகும்.

உங்கள் வீடு வளமான மண்ணை பெற்றிருந்தால் தோட்டம் அமைப்பது என்பது எளிமையான ஒன்றாக இருக்கும். இந்த எளிய சில அறிகுறிகளை கொண்டு உங்கள் தோட்டத்து மண் வளமானதா எனக் கண்டறிந்து அழகான தோட்டத்தை அமைக்கலாம். அவ்வாறு இல்லையென்றால், இயற்கையான முறையில் உங்கள் மண்ணின் தன்மையை மேம்படுத்தலாம்.

English summary

How To Pick Up Garden-Friendly Soil?

If you have good garden soil, you are definitely good to go. It is highly important to understand these signs to get garden friendly soil. Read the tips below on how to check out the fertility of your soil, so that you can follow the right steps to make it fertile.
Story first published: Friday, November 29, 2013, 18:02 [IST]
Desktop Bottom Promotion