Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தோட்டத்தில் மாட்டு சாணத்தை உரமாக பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்...
தோட்டத்தில் வளரும் செடிகள் நன்கு செழிப்புடன், எந்த ஒரு பூச்சியும் தாக்காமல் வளமாக வளர்வதற்கு உரம் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய உரம் செடிகளில் தாக்கும் பூச்சிகளை அழிப்பதோடு, செடியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஏனெனில் உரங்களில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவை இருக்கும். இவை தான் செடிகளை புரோட்டீனை உற்பத்தி செய்ய வைத்து, வேர்களையும், தண்டு மற்றும் இவைகளை நன்கு வலுவோடும் செழிப்புடனும் வளர வைக்கும்.
உரங்களில் பல உள்ளன. மேலும் தற்போது கெமிக்கல் கலந்த பல உரங்களும் மார்கெட்டுகளில் வந்துள்ளன. எனவே இத்தகைய கெமிக்கல் உரங்களையும் தற்போது பலர் பயன்படுத்துகிற்னர். இருப்பினும் நிறைய தோட்டங்களில் மாட்டு சாணத்தையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் விட, இது ஒரு இயற்கையான மற்றும் செடிகளை ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் உரங்களில் முதன்மையானது. இப்போது அத்தகைய மாட்டு சாணத்தை எப்படி உரமாக பயன்படுத்துவது என்பதற்கான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

* நல்ல ப்ரஷ்ஷாக இருக்கும் மாட்டுச் சாணத்தையும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். அதற்கு செடியைச் சுற்றிலும், அதனை போட்டு, காய வைத்து, பின் அதனை லேசாக கொத்தி மண்ணுடன் கலக்குமாறு செய்யலாம்.
* மாட்டு உரத்தில் ஊட்டச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், அதனை வைக்கோலுடன் சேர்த்து போடலாம்.
* ஒரு வேளை ஆர்கானிக் உரம் செய்ய வேண்டுமெனில், மாட்டுச் சாணத்தை காய்கறிகளின் தோல், தோட்ட குப்பைகளுடன் கலந்து, உரம் போடலாம்.
* குறிப்பாக செடியை தொட்டியில் வளர்க்கும் போது, அதற்கு அதிகப்படியான மாட்டு சாணத்தைப் போடக்கூடாது. மேலும் மாட்டு சாணத்தை உரமாக போடும் போது, அதற்கு போதிய வெயில், காற்று மற்றும் சிறிது அதிகப்படியான இடம் போன்றவை தேவைப்படும் எனவே அளவாக பயன்படுத்தினால், அது காய்ந்து நல்ல உரமாக இருப்பதோடு, செடியும் நன்கு வளரும்.
* தோட்டத்தில் செடியைச் சுற்றிலும் ஒரு கால்வாய் அமைக்கும்போது, அங்கு மண்ணுடன், மாட்டுச் சாணத்தை சரிசமமாக கலந்து செய்வதன் மூலமும், செடிக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும்.
இவையே மாட்டுச் சாணத்தை தோட்டத்தில் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள். வேறு ஏதாவது தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
