For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்!!!

By Maha
|

இதுவரை தோட்டத்தில் செடிகள் மற்றும் பூக்களைத் தான் வளர்ப்போம். இத்தகைய செடிகள் மற்றும் பூக்களை வளர்க்க பல்வேறு பராமரிப்புகளை பின்பற்ற வேண்டும். அவ்வாற முறையான பராமரிப்புகள் இல்லாவிட்டால், அவை வாடி இறந்துவிடும். ஆனால் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல், செழிப்புடன் ஏதேனும் ஒன்றை வளர்க்க ஆசைப்பட்டால், அதற்கு காளான் சரியானதாக இருக்கும்.

பொதுவாக காளானை யாரும் அதிகமாக தோட்டத்தில் வளர்க்கமாட்டார்கள். ஏனெனில் காளானில் சில நல்லவையும் இருக்கின்றன. அதே சமயம் தீமை விளைவிப்பது இருக்கின்றன. அதுமட்டமல்லாமல், காளான் மழைப் பெய்தால் வளர்வது தானே, அதில் என்ன அழகு உள்ளது என்று சிலர் அதனை வளர்க்கமாட்டார்கள். மேலும் அனைவருக்கும் காளானில் வெள்ளை நிற காளானைப் பற்றி மட்டும் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் மற்றும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவற்றிலும் பலவகையான கண்ணைக் கவரும் வண்ணங்களில் காளான் வகைகள் உள்ளன. அத்தகைய வண்ணமயமான காளான்கள், வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவியாக உள்ளன.

எனவே அத்தகைய காளான்கள் என்னவென்று பார்த்து, அவற்றை வீட்டின் உள்ளே அல்லது தோட்டத்தில், சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடத்தில் வைக்காமல், நிழல் உள்ள ஈரமான இடத்தில் வளர்க்கலாம். இப்போது அந்த வண்ணமயமான காளான்களில் சில உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைசீனா இன்ட்ரப்டா (Mycena interrupta)

மைசீனா இன்ட்ரப்டா (Mycena interrupta)

இந்த வகையான காளான்கள் நீல நிறத்தில், அலங்கரிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். இவற்றில் சில சமைக்கக்கூடியது. ஆனால் பெரும்பாலான இந்த வகை காளான்கள் தீமை விளைவிக்கும். எனவே இவற்றை அலங்கரிக்க மட்டும் பயன்படுத்தினால் நல்லது.

ஃபோலியோட்டா இனம் (Pholiota sp.)

ஃபோலியோட்டா இனம் (Pholiota sp.)

இந்த மாதிரியான ஆரஞ்சு நிற காளான்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் காணப்படும். அதுவும் இது மரங்களில் வளரக்கூடியது. எனவே ஒரு நல்ல ரசனையுடன் இந்த மாதிரியான காளானை வளர்த்தால் சூப்பராக இருக்கும்.

ஹைக்ரோசைப் காக்சினே (Hygrocybe coccinea)

ஹைக்ரோசைப் காக்சினே (Hygrocybe coccinea)

இந்த காளானை மற்ற காளானை விட வித்தியாசமாகவும், அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இத்தகைய காளானை நல்ல கலை உணர்வுடன், சரியான இடத்தில் வைத்து வளர்க்கலாம்.

பிங்க் மைசீனா இனம் (Pink Mycena sp.)

பிங்க் மைசீனா இனம் (Pink Mycena sp.)

மைசீனா வகையான காளான்கள் பல நிறங்களில் உள்ளன. ஆனால் இந்த பிங்க் நிறத்தில் உள்ள மைசீனா காளானை ஹாலில் உள்ள மேஜையில் வைத்து அலங்காரத்துடன் வளர்க்கலாம்.

மராஸ்மியஸ் இனம் (Marasmius sp.)

மராஸ்மியஸ் இனம் (Marasmius sp.)

காளான்களில் பெரும்பாலும் மராஸ்மியஸ் வகையான குடும்பத்தை சேர்ந்தது. இத்தகைய காளான் சமையலில் பயன்படுவதோடு, இவற்றை சமையலறையை அலங்கரிக்கும் வகையில் கிச்சனில் வைத்து வளர்க்கலாம்.

மைசீனா பர்புரியோஃபஸ்கா (Mucena purpureofusca)

மைசீனா பர்புரியோஃபஸ்கா (Mucena purpureofusca)

இந்த காளான் குடை போன்றது. இது லெதர் ப்ரெள் நிறத்தில் இருப்பதோடு, மூலிகை செடிகள் வளர்க்கும் தோட்டத்தில் வளர்த்தால், அழகாக இருக்கும்.

ரமாரியா இனம் (Ramariya sp.)

ரமாரியா இனம் (Ramariya sp.)

இந்த காளான் அதன் அழகிய மஞ்சள் நிறத்தின் காரணமாக, தங்க நிற கோல்டன் பவள காளான் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த காளானின் வடிவம் பவள துண்டு போன்று உள்ளது. இந்த வகையான காளானில் 200 வெவ்வேறு துணை இனங்கள் உள்ளன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை சமைக்கக்கூடியவை.

ப்ளியூராசைபெல்லா போரிஜென்ஸ் (Pleurocybella porrigens)

ப்ளியூராசைபெல்லா போரிஜென்ஸ் (Pleurocybella porrigens)

இந்த காளான்கள் வெள்ளை நிறத்தில், தெய்வீக மலர் போன்று காணப்படும். மேலும் இந்த காளானில் உடலானது நரம்புகளுடன் காணப்படும். நிறைய பேர் இத்தகைய காளானை சாப்பிடுவார்கள்.

அமனிட்டா விர்ஜிநியோட்ஸ் (Amanita virgineoides)

அமனிட்டா விர்ஜிநியோட்ஸ் (Amanita virgineoides)

பொதுவாக இந்த காளான்கள் வெள்ளை நிறத்துடன், உடலில் ஆங்காங்கு முள் போன்று காணப்படுவதால், கெட்டதாக கருதப்படுகிறது. ஆனால் இவற்றையும் தோட்டத்திலோ அல்லது அலங்காரத்திலோ வைத்து வளர்த்தால், வித்தியாசமான தோற்றத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Colourful Mushrooms To Grow At Home | வீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்!!!

If you are growing mushrooms solely for decoration then you must choose the colourful ones. These are some types of mushrooms that look bright and colourful.
Desktop Bottom Promotion