For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....

By Mayura Akilan
|

Gardening
வீட்டு அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் செடிகள், அழகோடு வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுவது உண்டு. பூக்கள் காய்கறிகள் என ஆண்டுக்கு ஒருமுறை பலன் தரும் செடிகளையும் வீட்டில் வளர்ப்பது உண்டு. பலவகைகளில் செடிகளை வீட்டினுள் வளர்க்கும் போது அவற்றின் சீரான வளர்ச்சிக்கு நல்ல பராமரிப்புத் தேவை. அப்பொழுதுதான் செடி கொடிகள் புத்துணர்ச்சியோடு இருக்கும். தோட்டக்கலை வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றினால் அழகான தோட்டத்தை ஆயுள் முழுவதும் பராமரிக்கலாம்.

தொட்டிகள் இடம்மாற்றம்

வீட்டிற்குள் நாம் வளர்க்கும் செடி, கொடி, வைத்துள்ள தொட்டிகள் போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அந்த தொட்டிகளை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். மனதிற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

தண்ணீர் தேவை

செடிகளுக்குத் தேவையான தண்ணீரை சரியாக வழங்கவேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றதாகும். செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்துவது அவசியம். அப்பொழுதுதான் அழகியலாக இருக்கும்.

நோயிலிருந்து பாதுகாப்பு

செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்மாற்றம் அவசியம்

தொட்டிகளில் நிரப்பும் மண்ணை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ மாற்றவேண்டும் அப்பொழுதுதான் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பழைய சத்தற்ற மண்ணாக இருந்தால் செடிகள் வளர்ச்சி குன்றிவிடும், பூக்கும், காய்க்கும் தன்மை நின்றுவிடும். எனவே தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்துவிட்டு புது மண்ணைக் கொண்டு நிரப்புதல் அவசியம் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.

இது போன்ற பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் நம் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.

Read more about: home garden soil refresh
English summary

How to Refresh Soil in a Container Garden | மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....

If you grow vegetables, perennial and annual flowers or shrubs in containers, you absolutely do not need to replace the soil in every pot each year. Instead, you can save money and resources by refreshing the soil each spring. Refreshing the soil each spring is a quick, easy and inexpensive process-and it will help your container gardens look lush year after year. Here's what you need to do.
Story first published: Thursday, January 19, 2012, 14:29 [IST]
Desktop Bottom Promotion