For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாவரங்கள் வளர தரமான மண் அவசியம்

By Mayura Akilan
|

Gardening
சிறிய இடத்தில் கூட அழகான தோட்டம் அமைக்கலாம். வீட்டுத் தோட்டத்தில் செடிகள் வளர்த்து பராமரிக்க முதலில் மண் வளம் அவசியமானது. நிலம் வளமாக இருந்தால்தான் செடிகள் பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எனவே தோட்டத்தில் மண்ணை வளமாக்க தேவையான ஆலோசனைகளை கூறுகின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.

அமிலத்தன்மையை மாற்றலாம்

மண்ணின் அமிலத்தன்மையை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கு பிஹெச் மதிப்பை சோதனை செய்து கண்டறிந்து அதற்கேற்ப நிலத்தை பராமரிக்க வேண்டும். மண்ணை சோதனை செய்வதோடு வேலை முடிந்துவிடுவதில்லை. அமிலத்தன்மை அதிகம் இருந்தால் அதனை மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு சல்பர் உபயோகிக்கலாம். மண் அதிக களிமண் கொண்டதாக இருந்தால் ஆற்றுமணல் உபயோகித்து சமன் செய்யலாம்.

சத்தான நிலம்

மண்ணை வளப்படுத்த இயற்கை முறையில் அதற்கு தேவையான உரம் அளிக்கவேண்டும். ரசாயன உரங்களை முதலில் போடவேண்டாம். இயற்கை உரங்களை முதலில் நிலத்தில் இட்டு பின்னர் அதற்கேற்ப வளப்படுத்தலாம்.

வீட்டு உபயோகப் பொருட்களின் கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பயன்படுத்தலாம். இது நிலத்தை வளமாக்கும்.

நிலத்தை உழவேண்டும்

நன்றாக உழுத நிலத்தில்தான் தாவரங்கள் நன்றாக முளைக்கும். நிலம் கடினத்தன்மையுடன் இருந்தால் அவற்றில் தாவரங்கள் முளைப்பதில்லை எனவே நன்றாக நிலத்தை உழுது ஆறப் போடவேண்டும். அப்பொழுதுதான் மண்ணில் காற்று உள்ளே புகுந்து வர ஏதுவாகும். விதை விதைக்கப்படும் போது தாவரங்கள் மண்ணைக் கீறி எளிதில் வெளிவர வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள். இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் சரியான முறையில் தோட்டத்தில் செடிகளை வளர்க்கலாம்.

Read more about: home decor garden soil
English summary

How To Prepare Soil For Your Garden? | தாவரங்கள் வளர தரமான மண் அவசியம்

To prepare soil that is good enough for home gardening you need to get a few specifics in place. Soil in your garden is the most basic ingredient, you cannot grow anything without it; it is like the gas or oven in your kitchen, you cannot cook without it. So the quality of your soil is the first step towards determining the quality of your plants.
Story first published: Wednesday, January 25, 2012, 16:46 [IST]
Desktop Bottom Promotion