For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசும்புல் தோட்டங்களை வளர்த்து பராமரிக்கலாம்

By Mayura Akilan
|

Lawn
வீட்டின் முன் பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களை பசுமையான புற்களை வளர்ப்க்கலாம். இதனால் வீட்டின் அழகு அதிகரிக்கும் மண் அரிப்பு ஏற்படாது. புல்தரை அமைப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

புல்தரை அமைக்கும் முன் நடைபாதை அமைக்கும் இடத்தையும், புல்தரை அமைக்கும் இடத்தையும் தேர்வு செய்யவேண்டும்.

அருகம்புற்கள்

அருகம்புல் என்று பொதுவாக அழைக்கப்படும் பெர்முட புல்லானது விரைவான வளர்ச்சி, வறட்சியைத் தாங்கும் தன்மை, குறைந்த நீர் தேவை மற்றும் அடிக்கடி வெட்டப்படுவதற்கான தன்மைகளைக் கொண்டுள்ளதால் இத்தகைய புல்லினை நீங்கள் பயன்படுத்தலாம்.

இ‌தி‌ல் பூ‌ச்‌சிகளு‌ம் அ‌ண்டாது. பா‌ர்‌க்கவு‌ம் அழகாக இரு‌க்கு‌ம். இவை ஒரு வேளை கோடை‌க்கால‌த்‌தி‌ல் வாடி‌ப்போனாலு‌ம், ‌மீ‌ண்டு‌ம் ‌நீ‌ர் ஊ‌ற்‌றினா‌ல் பசுமையாக முளை‌த்து‌விடு‌ம். இவை படரு‌ம் த‌ன்மை கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் வள‌ர்‌ப்பது‌ம் ‌எ‌ளிது, வற‌ட்‌சி கால‌த்‌திலு‌ம் ‌நீ‌ண்ட நா‌ட்களு‌க்கு வாழு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.

நடவு செய்யும் முறை

வேர்களை ஊன்றி புல்தரை அமைப்பதே சிக்கனமான முறையாகும். ஆனால் இம்முறையில் புல்தரை அமைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும். இதில் ஈரமான நிலையிலுள்ள தயார்படுத்தப்பட்ட நிலத்தில் சிறு வேர்களை ஊன்ற வேண்டும்.

நடவு செய்த ஆறுமாத காலத்தில் வேர்கள் நன்கு படர்ந்து வளர்ந்ததுடன் புல் வெட்டுதல், உருளையை உருளவிடுதல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய செயல்களை மேற்கொண்டு திடமான புல்தரையும் உருவாகிவிடும்.

சீராக வெட்டி பராமரிக்கலாம்

புல்வெட்டும் கருவியைக் கொண்டு சீரான உயரத்திற்கு புற்களை வெட்ட வேண்டும். பருவத்தைப் பொறுத்து புல் வெட்டுவதற்கான கால இடைவெளி மாறுபடும். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட புல்தரையினை நன்கு படர்ந்து வளரும் வரை வெட்டக்கூடாது.

புற்களின் உயரம் 5-6 செ.மீட்டருக்கு மிகையாகமல் இருக்கும்படியாக புல்வெட்டும் கருவியிலுள்ள கத்திகளின் உயரத்தை பொறுத்த வேண்டும்.ஆரம்பத்தில் வீசுக் கத்தியினைக் கொண்டு புற்களை நறுக்க வேண்டும்.

படர்ந்த புல்தரையானது அழகாகக் காணப்பட்டாலும் சில சமயம் ஒரேமாதிரியாகக் காணப்படும். ஆனால் பல சிறுஞ்செடிகள் அல்லது மரங்களை இப்புல்தரையில் வளர்ப்பது சரியானதல்ல. இருப்பினும் பரந்து விரிந்த புல் தரையின் நடுவே ஒரேயொரு மரம் அல்லது சிறுஞ்செடியை புல்தரையின் நடுவில் நடவுசெய்யலாம் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.

English summary

How To Grow Grass | பசும்புல் தோட்டங்களை வளர்த்து பராமரிக்கலாம்

Grass is pretty. Especially if you have a wide space in your backyard or garden, growing grass is a fantastic idea. You could host lawn parties during the spring and flaunt the lustrous green shade of your grass. To complement the wide terrain of your lawn, you can grow a wide array of exotic plants and flowers, along the sides.
Story first published: Friday, April 13, 2012, 14:36 [IST]
Desktop Bottom Promotion