Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க அதிர்ஷ்டம் பிரகாசிக்கணுமா? அப்ப தீபாவளியன்று இந்த நிற மெழுகுவர்த்தியை வீட்டுல ஏத்தி வையுங்க...
Diwali 2023: அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த தீபாவளி பண்டியை வரப் போகிறது. தீப ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகை நாளில் அனைவரும் தங்களின் வீடுகளை விளக்குகளால் அழகாக அலங்கரிப்போம். தீபாவளி நாளில் விளக்குகள் முக்கியமான ஒன்றாகும். வீட்டின் ஒவ்வொரு மூலையும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வீடே பிரகாசமாக ஒளிரும்.
அதுவும் வீட்டில் ஏற்றும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் சரியான இடத்தில், திசையில் வைத்தால், அது வீட்டிற்கு சந்தோஷத்தையும், செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. ஜோதிடத்தின் படி, தீபாவளி நாளில் ஏற்றப்படும் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை சரியான திசையில் இருக்க வேண்டும்.

சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு திசையும் ஒரு குறிப்பிட்ட நிறத்தைக் குறிக்கிறது. அந்த நிற மெழுகுவர்த்தியை அந்த திசையில் தீபாவளி நாளில் ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்போது எந்த திசையில் எந்த நிற மெழுகுவர்த்தியை ஏற்றினால் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
சிவப்பு நிற மெழுகுவர்த்தி
சிவப்பு நிற மெழுகுவர்த்திகளை வீட்டில் ஏற்றி வைப்பது, வீட்டிற்கு செல்வ செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதுவும் இந்த சிவப்பு நிற மெழுகுவர்த்திகளை வீட்டின் தெற்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். இப்படி ஏற்றுவதன் மூலம், வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல் நீக்கப்பட்டு, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, செல்வம் பெருகும்.
மஞ்சள் நிற மெழுதுவர்த்தி
தீபாவளி நாளில் வீட்டில் மஞ்சள் நிற மெழுகுவர்த்திகளை ஏற்றினால், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். அதுவும் இந்த நிற மெழுகுவர்த்திகளை வீட்டின் வாசலில் லட்சுமி தேவி வரும் பாதையில் ஏற்றி வைக்க வேண்டும். இது தவிர வீட்டின் செழிப்பை பராமரிக்க, வீட்டின் வராண்டாவின் நடுப்பகுதியில் ஏற்றி வைக்க வேண்டும்.
கருப்பு நிற மெழுகுவர்த்தி
கருப்பு நிற மெழுகுவர்த்தி பாதுகாப்பின் சின்னமாகும். எனவே இந்த கருப்பு நிற மெழுகுவர்த்தியை வீட்டு வாசலில் ஏற்றி வைத்தால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும். மேலும் கருப்பு நிற மெழுகுவர்த்திகளை வீட்டின் வடக்கு திசையில் ஏற்றி வைத்தால், வாழ்க்கையில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்றி, வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கும்.
வெள்ளை நிற மெழுகுவர்த்தி
தீபாவளி நாளில் வெள்ளை நிற மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வாழ்க்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரும். அதுவும் இந்த வெள்ளை நிற மெழுகுவர்த்தியை வீட்டின் மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் ஏற்றி வைக்க வேண்டும். முக்கியமாக வடகிழக்கு திசையில் ஏற்றி வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.
பச்சை நிற மெழுகுவர்த்தி
பச்சை நிற மெழுகுவர்த்தி வீட்டில் பணத்தை அதிகம் பெருகச் செய்யும். எனவே நீங்கள் இந்த தீபாவளிக்கு வீட்டில் விளக்குகளை ஏற்றி வைக்கும் போது, பச்சை நிற மெழுகுவர்த்யையும் ஏற்றி வைக்க மறவாதீர்கள். அதுவும் இந்த பச்சை நிற மெழுகுவர்த்தியை கிழக்கு திசையில் ஏற்றி வைத்தால், வாழ்க்கையில் முன்னேற்றத்தை உறுதி செய்யும். அதோடு, இந்த மெழுகுவர்த்தியை ஏற்ற சிறந்த திசை தென்கிழக்கு திசை என்றும் கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications