Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வாஸ்துப்படி வீட்டின் பூஜை அறையில் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்ல கஷ்டம் தான் அதிகரிக்கும்...
வீட்டின் பூஜை அறையில் சரியான பொருட்களை வைத்திருக்க வேண்டும். தவறான மற்றும் வைக்கக்கூடாத பொருட்களை பூஜை அறையில் வைத்தால், அதன் விளைவாக வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் கடவுளை வைத்து வழிபட பூஜை அறை இருக்கும். இந்த பூஜை அறையானது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இட வசதியைப் பொறுத்து பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும். பெரிதாக இருக்கும் பூஜை அறையில் கடவுள் சிலைகளை வைத்து வழிபட போதுமான இடம் இருக்கும். ஆனால் சிறிய வீடுகளில் குறைவான இடமே இருக்கும். வாஸ்துப்படி, வீட்டில் பூஜை அறையை அமைக்கும் போது ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வீட்டிலேயே பூஜை அறை தான் மிகவும் சக்தி வாய்ந்த இடம். இந்த இடத்தை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் வீட்டின் பூஜை அறையில் சரியான பொருட்களை வைத்திருக்க வேண்டும். தவறான மற்றும் வைக்கக்கூடாத பொருட்களை பூஜை அறையில் வைத்தால், அதன் விளைவாக வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருக்கும். உங்களுக்கு வீட்டின் பூஜை அறையில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது தெரியாதா? கீழே வாஸ்துப்படி எந்த பொருட்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

லெதர் பொருட்கள்
விலங்குகளின் தோலால் ஆன பொருட்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது. ஏனெனில் இது ஒரு உயிரை அழித்து, அதன் தோலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இம்மாதிரியான பொருட்களை பூஜை அறையில் வைப்பது, அந்த வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே லெதர் பர்ஸ்கள், லெதர் பெல்ட், லெதர் பைகள் போன்றவற்றை பூஜை அறையில் லைக்காதீர்கள்.

காலணிகள்
காதணிகள் அழுக்குகள் நிறைந்தவை மற்றும் இது பெரும்பாலும் விலங்குகளின் தோலால் ஆனவை. இத்தகைய காலணியை பூஜை அறையினுள் கொண்டு செல்லக்கூடாது. முக்கியமாக காலணியை வைக்கும் ஸ்டாண்ட்டை பூஜை அறைக்கு அருகில், பூஜை அறையின் சுவற்றை ஒட்டி வைக்கக்கூடாது.

இறந்தவர்கள் போட்டோக்கள்
பூஜை அறையில் தெய்வங்களின் போட்டோக்கள் மற்றும் சிலைகளை மட்டும் தான் வைக்க வேண்டும். நிறைய பேர் அப்படிப்பட்ட புனிதமான அறையில், மறைந்தவர்களின் போட்டோக்களை வைப்பதுண்டு. ஆனால் இந்த அறையில் இறந்தவர்களின் போட்டோக்களை வைக்கக்கூடாது. ஒரு வேளை வைத்தால், அது வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதோடு, வீட்டின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

உடைந்த சிலைகள்
வீட்டின் பூஜை அறையில் சிலைகளை வைத்து வழிபடுவது நல்லது. ஆனால் அந்த சிலைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் உடைந்த சிலைகளை பூஜையறையில் வைத்திருப்பது நல்லதல்ல. ஒருவேளை உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனே அப்புறப்படுத்துங்கள்.

காய்ந்த பூக்கள்
வீட்டின் பூஜை அறையில் தெய்வத்திற்கு படைத்துள்ள பூக்களை தினந்தோறும் மாற்ற வேண்டும். பூஜை அறையில் பூக்கள் காய்ந்திருந்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, துரதிர்ஷ்டத்தை தான் தரும். எனவே தினமும் மறக்காமல் பூக்களை மாற்றும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications