For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்...

By Super
|

பொருளாசை இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நல்ல இடத்தில் வாழ்ந்தாலும் கூட, நாம் வாழ்வதற்கு பணம் என்பது மிக முக்கிய அங்கமாக மாறி விட்டது. அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்ள கீழ்கூறியுள்ள அருமையான வாஸ்து டிப்ஸ்களை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று குஷ்தீப் பன்சால் என்ற வாஸ்து நிபுணர் கூறுகிறார்.

வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து டிப்ஸ்...

பொதுவாக பஞ்சத்தத்துவா எனப்படும் ஐந்து கூறுகள் மற்றும் 16 மகா வாஸ்து மண்டலங்கள் தான் நீங்கள் எப்படி சிந்திப்பீர்கள், எதிர்வினையாற்றுவீர்கள் என்பதை தீர்மானிக்கும். சரியான வாஸ்து சாஸ்திரங்களைப் பின்பற்றியுள்ள வீட்டில் செல்வங்கள் பெருகும். சரி, இப்போது வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!

வாஸ்துப்படி வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சில டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ்: 1

டிப்ஸ்: 1

வடக்கு வாஸ்து மண்டலத்தில், பிராதன நிறமாக நீலம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; சமையலறை மற்றும் கழிவறையில் சிகப்பு நிறத்தை தவிர்க்கவும். இவ்விடத்தில் குப்பைத் தொட்டி, துடைப்பம், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை வைக்கக்கூடாது. சமையலறை என்பது தீயை குறிக்கும். இங்கே பொருட்களைத் தவறாக வைத்தால், பணம், வாய்ப்புகள் மற்றும் தொழில் வளம் குறையும்.

டிப்ஸ்: 2

டிப்ஸ்: 2

வடக்கு மண்டலத்தில், மணி பிளாண்ட்டை பச்சை பூந்தொட்டியில் வைத்திடவும் அல்லது தொங்க விட வேண்டும்; பார்ப்பதற்கு பச்சை பசேலென இருக்க வேண்டும். இவை செல்வம் மற்றும், தொழில் ரீதியான வாய்ப்புகளை பெருகச் செய்யும்.

டிப்ஸ்: 3

டிப்ஸ்: 3

வட மேற்கு வாஸ்து மண்டலம் உங்களுக்கு வங்கிகள் மற்றும் தொழில் சார்ந்த நபர்களிடம் இருந்து நிதி ஆதரவை பெற்றுத் தரும்.

டிப்ஸ்: 4

டிப்ஸ்: 4

அழகிய நுழைவு வாயில் சந்தோஷத்தையும். வளமையையும் அளிக்கும். மேலும் சமுதாயத்தில் தனிப்பட்ட நபரின் மதிப்பு மற்றும் பாராட்டுக்களை பெறச் செய்யும். ஒழுங்கற்ற முறையில் இருந்தால் உங்களை பிரச்சனைகள் சூழும்.

உதாரணத்திற்கு, தென் மேற்கு கதவு கடன் மற்றும் நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தும். வடக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் தொழில் ரீதியான வாய்ப்புகளையும், செல்வத்தையும் அளிக்கும். கிழக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் மன அமைதியை தரும். மேற்கு நுழைவாயில் என்றால் செல்வத்தையும், வளத்தையும் தரும்.

டிப்ஸ்: 5

டிப்ஸ்: 5

சமையலறையை தென் கிழக்கு அல்லது தெற்கு தென்-கிழங்கு திசையில் அமைத்திடவும். வெளிர் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறமே இதன் பிரதான நிறமாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம், வேலை பார்க்கும் மேஜை, வரவேற்பு அறை ஆகியவற்றை வடக்கு பகுதிகளில் வைத்தால். ஆரோக்கியமான பண ஓட்டம் இருக்கும்.

டிப்ஸ்: 6

டிப்ஸ்: 6

மேற்கு திசையில், வெள்ளையும் மஞ்சளும் தான் பிராதன நிறங்களாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம் வைப்பதற்கு இதுவும் கூட சிறந்த இடமாகும். வட்ட வடிtம் என்பது உலக கூறுகளை குறிப்பதால். அந்த வடிவத்தில் இருக்கும் பொருட்களை இங்கே பயன்படுத்தலாம். மேற்கு தென்-மேற்கு என்பது சேமிப்புகளுக்கான மண்டலமாகும். இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை படிப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் பணத்தையும், செல்வங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து இங்கே வைத்தால், உங்கள் செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

டிப்ஸ்: 7

டிப்ஸ்: 7

மொத்தத்தில், உங்கள் வீட்டில் மனதிற்கு இசைவான மற்றும் சமநிலையான ஆற்றல் சுழற்சி இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 8

டிப்ஸ்: 8

4-படி மகா வாஸ்து முறைப்படி, உங்கள் வீட்டை முற்றிலும் சோதனை செய்து பாருங்கள். எந்த பகுதிகளில் சமநிலையான ஆற்றல் சுழற்சி உள்ளது என்பதை கண்டு கொள்ளுங்கள். அதேப்போல் மண்டலங்கள் வெட்டப்பட்டுள்ளதா, நீட்டிக்கப்பட்டுள்ளதா அல்லது குறைகிறதா என்பதையும் கண்டு கொள்ளுங்கள். நிறங்கள், விளக்குகள், சின்னங்கள், ரங்கோலிகள் மற்றும் செடிகள் ஆகியவைகளை கொண்டு எளிய வாஸ்து டிப்ஸ்களால் இந்த பகுதிகளை சீர் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Attract Wealth With Vastu

Ever imagine living in a world which is not materialistic? Well, had that been true it would've been the ideal place to live in, but sadly money does form a very important part of our lives and if you are struggling to hold onto it, then you ought to read through these amazing Mahavastu tips to increase your wealth, shared by Vastu guru Khushdeep Bansal.