Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
வீட்டிற்குள் கோடை வெயிலை சமாளிக்க 10 கூலான வழிகள்!!!
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாகவே வெயில் வெளுத்து வாங்கும். கோடைக் காலத்திலோ நம்மை வறுத்து எடுத்துவிடும். அலுவலகத்திற்கு செல்பவர்கள் ஜாலியாக ஏ.சி.-யிலே இருந்துவிட்டு வந்திடுவார்கள். ஆனால், வீட்டில் 24 மணி நேரமும் ஏ.சி.-யைப் போட்டு உட்கார முடியுமா? கரெண்ட் பில் எகிறிடுமே! மேலும் அது உடல் நலத்திற்கும் ஏற்றதல்ல.
பிறகு கோடையின் தாக்கத்தை எப்படித் தான் சமாளிப்பது? கூல்டிரிங்க் சாப்பிடலாம்; பலமுறை குளிக்கலாம். ஆனால் வீட்டையும் கூலாக வைக்க வேண்டுமே! அதற்கும் சில வழிகள் உள்ளன.
கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, வீட்டில் சில மாறுதல்களைச் செய்தாலே போதும். செலவே இல்லாமல் ஓசியிலே 'ஏ.சி.' கிடைக்கும். இயற்கையோடு ஒன்றி கோடையை அனுபவித்த மாதிரியும் இருக்கும். இதோ, கோடை வெயிலை வீட்டிற்குள் சமாளிக்க 10 கூலான வழிகள்...

'குப்பை'களைக் கடாசுங்கள்
தேவையே இல்லாமல் நீண்ட நாட்களாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்துங்கள். அவை வீட்டிற்கு உள்ளேயே இருக்கக்கூடாது. முடிந்தால் அவற்றை விற்று விடுங்கள். இப்போது தான் நாம் எதையும் ஆன்லைனிலேயே விற்கலாமே!

காற்றோட்டமாக வைத்திருங்கள்
ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும். காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாகத் திறந்து வையுங்கள். ஆனால், உச்சி வெயிலடிக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள். இதனால் வெப்பமானது வீட்டில் இறங்காமல் இருக்கும்.

மெல்லிய திரைகளை உபயோகியுங்கள்
வெயிலின் தாக்கம் இல்லாமலிருக்க முரட்டுத் திரைத் துணிகளை சிலர் தங்கள் கதவு, ஜன்னல்களில் மாட்டியிருப்பர். அது தவறு. மெல்லிய திரைகளை மாட்டினால் தான் வீடு காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.

ஸ்விட்சுகளை ஆஃப் செய்யுங்கள்
டி.வி., மைக்ரோவேவ் ஓவன், ட்யூப்லைட் உள்ளிட்ட மின் சாதனங்கள் நிறைய வெப்பத்தைப் பரப்பும். ஆகவே அவற்றைப் பயன்படுத்தாத போது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள்.

மூங்கில் திரைகளை ஈரப்படுத்துங்கள்
பால்கனி மற்றும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பயன்படுத்துங்கள். முடிந்தால் அவற்றை அப்போதைக்கு அப்போது ஈரப்படுத்தி வையுங்கள். அவை வீட்டை கூலாக வைத்திருக்கும்.

ஃபேன்களைத் துடையுங்கள்
நம் வீட்டு சீலிங் மற்றும் எக்சாஸ்ட் ஃபேன்கள் அடிக்கடி தூசி படிந்திருப்பதைப் பார்த்திருப்போம். அவற்றைத் தூசித் தட்டி, கிரீஸ் மாற்றி நன்றாக ஓடும் நிலையில் வைக்க வேண்டும்.

லைட்டிங்கை மாற்றுங்கள்
மஞ்சளாக எரியும் குண்டு பல்புகளை விட சி.எஃப்.எல். போன்ற ப்ளோரெஸண்ட் பல்புகளைப் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், வீடு இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.

கூரையைக் கூலாக வையுங்கள்
தற்போது பிரபலமாகி வரும் ஃபால்ஸ் சீலிங்கை வீட்டின் மேற்கூரையில் பொருத்தினால் வீடு சூடு குறையும். அவ்வளவு வசதி இல்லையா? வீட்டின் மேற்கூரையில் வைக்கோலைப் பரப்பி, அதில் அடிக்கடி நீர் விட்டால் வீடு குளிரும்.

செடிகள் வளருங்கள்
நம் வீட்டு மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்க்கலாம். இந்த பசுமையான செடிகள் கோடை வெப்பத்தைக் குறைக்கும்.

குட்டி நீர்த்தொட்டி வையுங்கள்
வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வைத்துப் பாருங்கள். வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும். ஆனால் ஒரு எச்சரிக்கை: அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், அவை கொசுக்கள் அல்லது பூச்சிகளின் கூடாரமாகிவிடும்.



Click it and Unblock the Notifications