தீபாவளியை இப்படிக் கூட கொண்டாடலாம்!!

Posted By: Staff
Subscribe to Boldsky

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்புக்கள், ஆட்டம், பாட்டம் என்று கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் போதிலும், சிலர் இந்தக் கொண்டாட்டங்களிலிருந்து விலகியே இருக்க விரும்புவார்கள். அல்லது, தீபாவளியைத் தனியாக, அமைதியாகக் கொண்டாட விரும்புவார்கள்.

நீங்களும் அப்படி தீபாவளி களேபரங்களிலிருந்து விலகி இருக்க விரும்புகிறீர்களா? ஆனாலும், அதே அளவுக்கு உங்கள் மனதையும் குதூகலமாக வைத்துக் கொள்ள சில வழிகள் உள்ளன. அதற்கு உங்களுக்கென சில க்ரியேட்டிவ்வான ஐடியாக்களை உருவாக்கிக் கொண்டு சுறுசுறுப்பாக இருங்கள். தீபாவளி போன்ற விடுமுறைக் காலங்களை உங்கள் போக்கில் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள். இதோ அதுப்போன்ற சில ஐடியாக்கள்...

வீட்டை அலங்கரிக்கலாம்

தாம் தூமென்று வெளியே எல்லோரும் அளப்பரை செய்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, உங்கள் வீட்டை அலங்கரிப்பதில் ஈடுபடுங்கள். வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். புதிய மரக்கன்றுகளை நடுங்கள். மணம் பரப்பும் மெழுகுவர்த்திகளை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஏற்றி வையுங்கள். குதூகலமாய் இருங்கள்.

புதிதாய் சமைக்கலாம்

குடும்பத்துடன் சேர்ந்து புதிதாக ஏதாவது சமையல் செய்து அசத்தலாம். டைனிங் டேபிளைப் புதுவிதமாக அலங்கரிக்கலாம். புதிய டேபிள் விரிப்புகளை அதில் விரித்து, புதிதாய் சமைத்த உணவுகளைப் பரப்பி, அழகான மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, கலக்கலான 'கேண்டில் டின்னர்' சாப்பிடுங்கள்.

உங்களையே அலங்கரிக்கலாம்

வீட்டிற்குள்ளேயே இருப்பதால், நீங்களே உங்களைப் பார்த்துப் பார்த்து நன்றாக அலங்காரம் செய்து கொள்ளலாம். அட்டகாசமான முடி அலங்காரத்துடனும், அசத்தலான மேக்கப்புடனும் வீட்டிற்குள் வளைய வாருங்கள். வீட்டிலுள்ளவர்கள் அனைத்துக் கண்களும் உங்கள் மேல்தான் இருக்கும்.

உங்கள் ஊரைச் சுற்றலாம்

ஒருவேளை வீட்டிற்குள்ளேயே இருந்து போரடித்து விட்டால், டூ வீலரை எடுத்துக் கொண்டு அப்படியே உங்கள் ஊரைச் சுற்றி வாருங்கள். ட்ராஃபிக்கே அவ்வளவாக இல்லாத ஒரு புதிய அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.

நண்பர்களுடன் மகிழலாம்

ஒரு சூப்பர் டூப்பரான விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து பார்ட்டி கொடுங்கள். காதுக்கு இனிமையான இசையுடன், குட்டிக் குட்டி விளையாட்டுக்களை அவர்களுடன் விளையாடி மகிழ்ச்சியாக இருங்கள்.

சினிமா பார்க்கலாம்

ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கும் போது பார்க்க முடியாமல் போன, ஆனால் விருப்பமான திரைப்படங்களைப் பட்டியல் எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவற்றை ஆன்லைனில் தேடி எடுத்து, பார்த்து மகிழுங்கள்.

டூ இட் யுவர்செல்ஃப்

Spice Up Your Diwali Staycation

இக்காலத்தில் இது மிகவும் பிரபலமாகி வருகிறது; இது ஒரு பெரிய விஷயமும் கூட. சமையல் குறிப்புகளிலிருந்து, ஆடல், இசை, பெயிண்ட்டிங், ஆடை அலங்காரம், மேக்கப், கைவினைப் பொருட்கள் செய்தல், தோட்டம் வளர்ப்பு என்று லட்சக்கணக்கான கலைகளை ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து, புதிதாகக் கற்றுக் கொள்ளுங்கள். தீபாவளி வாழ்த்துக்கள்!!

Please Wait while comments are loading...
Subscribe Newsletter