புத்தக அலமாரியை அழகாக பராமரிப்பது எப்படி?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

நீங்கள் ஒரு புத்தகப் பிரியரா? நீங்கள் அவற்றை சரியாக பராமரிப்பவர் இல்லையென்றால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் புத்தகங்கள் அங்கும் இங்கும் இறைந்து கிடக்கும். உங்கள் புத்தகங்களை நன்றாக வரிசைப்படுத்தியும் நன்கு உபயோகப்படுத்தும் முறையிலும் வைத்துக் கொள்வது மிகவும் சுலபம்.

இது உங்கள் வேலையினை எளிதாக்குவது மட்டுமல்ல, உங்கள் வேலையையும், இடத்தினையும், தெளிவாகவும், துல்லியமாகவும் வைத்துக் கொள்ளவும் உதவும். உங்கள் புத்தகங்களை நன்கு பராமரிக்க உதவும் யோசனைகள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எழுத்து வரிசைப்படி பிரித்துக் கொள்ளுங்கள்

எழுத்து வரிசைப்படி பிரித்துக் கொள்ளுங்கள்

அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் சிறந்த மற்றும் பொதுவான முறை, புத்தகங்களை அதன் பெயரின் எழுத்துக்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது. இது புத்தக ஆசிரியரின் பெயர் அடிப்படையிலோ அல்லது புத்தகப் பெயரின் அடிப்படையிலோ செய்யலாம்.

பொருள்வாரியாக பிரித்தல்

பொருள்வாரியாக பிரித்தல்

புத்தகங்களை அடுக்க மிகவும் சுலபமான வழி, அவற்றின் தலைப்புகள் வாரியாகப் பிரிப்பது. இது நீங்கள் விருப்பப்படும் பொருள் அல்லது தலைப்புகளை எளிதில் கண்டறிந்து எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். நகைச்சுவை, பழம்பெரும் படைப்புகள், விறுவிறுப்பான தலைப்புகள் மற்றும் மர்மமானவை என தனித்தனியாக அலமாரியை பிரித்து வைக்கலாம்.

நிறம் வாரியாக

நிறம் வாரியாக

புத்தகங்களை நிறம் வாரியாக அடுக்குவதன் மூலம் ஒரு அழகான வானவில்லாகவே உங்கள் புத்தக அலமாரியை மாற்றி விடலாம். எடுத்துக்காட்டாக, உங்களின் பெரும்பாலான புத்தகங்கள் கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ இருப்பின், அதை ஒரு கருப்பு-வெள்ளை பகுதியாகவே மாற்றிவிடலாம்.

பதிப்பகத்தின் அடிப்படையில் மாற்றலாம்

பதிப்பகத்தின் அடிப்படையில் மாற்றலாம்

நீங்கள் உங்கள் புத்தகங்களை வைத்துக் குழம்பிக் கொள்ள விரும்பவில்லையென்றால், அவற்றை பதிப்பகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது சுலபமான வழி. அலமாரியை பல பிரவுகளாக்கி பதிப்பாளரின் அடிப்படையில் அவற்றை அடுக்கி குழப்பமில்லாமல் வரிசைப்படுத்தலாம்.

உணர்வுகளின் அடிப்படையில்

உணர்வுகளின் அடிப்படையில்

எப்போதும் போல வழக்கமான முறைகளையே புத்தகங்களை அடுக்க வேண்டும் என்பதில்லை. சற்று வித்தியாசமாகவும் செய்யலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பரிசாக புத்தகங்களை அளித்திருந்தால், அவற்றிற்காக தனியாக இடம் வைத்து, அவற்றின் மீது பெயர் சீட்டுகளை ஒட்டி அடுக்கி வைக்கலாம். நீங்களே வாங்கிய புத்தகங்களை தனியாக பெயர் சீட்டுகளை இட்டு அடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Ways To Organise Your Book Shelf

Sometime our bookshelf is organized in a bad way that we get frustrate. But organizing a bookshelf can become an easy and fun task if you look at it this way!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter