For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கை அறையை தூங்குவதற்கு வசதியாக மாற்ற 5 வழிகள்!!!

By Ashok CR
|

உடல் ஆரோக்கியத்திற்கான அதிமுக்கிய தேவைகளில் ஒன்று தான் இரவில் நன்றாக உறங்குவது. எப்போதும் முனைப்பாக இருக்க மூளைக்கு வேலை கொடுத்து எப்போதும் அதனை சுறுசுறுப்புடன் வைத்திருப்பதை போல, தூக்கம் உங்கள் மெட்டபாலிச வீதத்தை பரமாரிக்க உதவும். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்கப்படுத்தவும் உதவும்.

போதுமான அளவு தூங்கினால் உங்கள் மனதும் ஆத்மாவும் உற்சாகமடையும். இதனால் ஆற்றல் இழந்து சோர்வுடன் இருக்கும் உடலை மீட்கும். நல்ல தூக்கத்தை பெறுவதற்கு உங்கள் படுக்கையறை அதற்கு தோதாக அமைய வேண்டும். தூக்கத்திற்கு தோதாக அமையும் படுக்கையறை உங்களுக்கு ஓய்வு எடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அறையாகவும் அதனை மாற்றும். எல்லா விதத்திலும் சிறப்பாக அமைந்த படுக்கையறையில் யாருக்கு தான் நேரத்தை செலவிடப் பிடிக்காது?

அப்படி உங்கள் படுக்கையறை எப்படி மாற்றுவது என்பதை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். இதனை நீங்கள் பின்பற்றினால் ஓய்வு எடுப்பது மேம்பட்டு நல்ல தூக்கத்தையும் பெறலாம்.

உங்களுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்த படுக்கையறையை இந்த 5 வழிகளில் மாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொலைக்காட்சியை தவிர்க்கவும்

தொலைக்காட்சியை தவிர்க்கவும்

படுக்கையறையில் தொலைக்காட்சி வைத்துக் கொள்வது தற்போதுள்ள நாகரீகமாக உள்ளது. உங்கள் படுக்கையறை உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளிக்க வேண்டுமானால், இந்த முட்டாள் பெட்டியை உள்ளே கொண்டு வராதீர்கள். நீங்கள் உங்கள் கணவன்/மனைவியுடன் உங்கள் படுக்கையறையில் இருக்கும் போது, தொலைகாட்சி உங்கள் இருவருக்கும் இடையே தொந்தரவாக இருக்கும். மேலும் உங்கள் தூக்கத்திற்கும் முட்டுக்கட்டையாக விளங்கும்.

இருட்டறை

இருட்டறை

பல பேருக்கு அறை இருட்டாக இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஆழ்ந்த நித்திரையை பெற விரும்புபவர்களின் பலரும் வெளிச்சம் இருக்கின்ற அறையை விட இருட்டறையை தான் விரும்புகின்றனர். தடியான திரைச்சீலைகளை பயன்படுத்தினால் கொஞ்சம் உதவும். இது வெளிச்சத்தை உள்ளே வராமல் தடுக்கும். மேலும் பகல் நேரத்தில் போதிய வெளிச்சம் வரும் படி செய்து கொள்ளலாம்.

இரவு நேர மங்கிய விளக்குகள்

இரவு நேர மங்கிய விளக்குகள்

பல பேருக்கு முழுமையான இருளில் தூங்கவே விருப்பம் என்றாலும் கூட, சிலருக்கு மங்கிய வெளிச்சத்தில் தூங்க பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மங்கிய விளக்குகள் உதவி புரியும். மேலும் இந்த மங்கிய விளக்குகள் பல வண்ணத்தில் வருகின்றன. அதனால் வண்ணம் மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விளக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தேவையற்ற சத்தங்களை தவிர்க்கவும்

தேவையற்ற சத்தங்களை தவிர்க்கவும்

கதவு மற்றும் ஜன்னல்களின் கீல்களுக்கு அவ்வப்போது எண்ணெய் போடுங்கள். மேலும் குழாய்களில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழாய்களில் தண்ணீர் ஒழுகினால் அது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். இவை இரண்டையும் ஒழுங்காக பராமரித்தால் சந்தேகமில்லாமல் நல்ல தூக்கத்தை பெறலாம்.

குளியலறை மற்றும் கழிவறை கதவுகளை மூடி வைத்தல்

குளியலறை மற்றும் கழிவறை கதவுகளை மூடி வைத்தல்

உங்கள் படுக்கையறை ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, இரவு நேரத்தில் அதிக காற்று வீசினால், உங்கள் குளியலறை மற்றும் கழிவறை கதவுகள் காற்றுக்கு ஆடி, சத்தத்தை எழுப்பும். அதனால் கதவுகளை மூடுங்கள். இது உங்கள் தூக்கத்தை கெடுக்காமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Ways To Make Your Bedroom Sleep Friendly

We all love to sleep, don't we? A good sleep invigorates the mind and body. Here are 5 ways to make your bedroom sleep friendly.
Desktop Bottom Promotion