Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
பெட்ரூமை அலங்கரிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!
வீட்டில் இருக்கும் அறைகளிலேயே அனைவருக்கும் பிடித்த அறை என்னவென்று கேட்டால், அது நிச்சயம் படுக்கையறையாகத் தான் இருக்கும். ஏனெனில் மற்ற அறைகளை விட இந்த அறையில் தான் நிம்மதியாக ரிலாக்ஸ் எடுக்க முடியும். அதிலும் திருமணமானவர்களாக இருந்தால், ரொமான்ஸ் செய்வதற்கு படுக்கும் அறை தான் சிறந்ததாக இருக்கும்.
எனவே அத்தகைய அறையை நன்கு பிடித்தவாறு அலங்கரிக்க பல கற்பனையான ஐடியாக்கள் உள்ளன. படுக்கும் அறையானது தனியாக இருந்தாலும் சரி, துணையுடன் இருந்தாலும் சரி, நன்கு வசதியாக, தாளாரமான இடைவெளியில் இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், படுக்கையறையை அழகாக அலங்கரிக்கலாம்.
படுக்கையறையில் பல விதமான அலங்கரிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் படுக்கையறையின் அளவுகளைப் பொறுத்தது. படுக்கை அறையின் இடமானது தாராளமாக இருந்தால், நாற்காலிகள், சுவர்களில் வண்ண படங்கள், திரைச்சீலைகள் (curtains) போன்றவற்றை வைத்து அலங்கரிக்கலாம். இருப்பினும் சாதாரணமாக படுக்கையறையை அலங்கரிக்க டேபிள், லேம்ப், சிறிய ஷோபா போன்றவற்றை பயன்படுத்தி அலங்கரிக்க வேண்டும்.
இப்போது ஒருசில படுக்கையறை அலங்கரிப்புகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து உங்கள் வீட்டு படுக்கையறையை வேண்டியவாறு அலங்கரித்து, மகிழுங்கள்.

தனிமையான படுக்கையறை
இந்த மாதிரியான படுக்கையறை திருமணமான தம்பதிகளுக்கு சரியானதாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள், தங்கள் துணையை தொந்தரவு செய்யாமல், துணைக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கலாம். இத்தகைய டிசைன் நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

பேச்சுலருக்கான அறை
திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், படுக்கையறையை பெரிய பெரிய பொம்மைகளை வைத்து அலங்கரிக்கலாம். இது ஒரு எளிமையான அலங்காரம்.

கிளாசிக் பெட்ரூம்
இது மிகவும் எளிமையான மனதைக் கவரும் கிளாசிக் பெட்ரூட் டிசைன். இதில் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளைப் போட்டு, அருகில் இருக்கும் டேபிளில் வண்ணமயமான லேம்ப் வைத்து, சுவர்களில் மேட்ச்சான படங்களை தொங்க விட வேண்டும்.

இளவரசி டிசைன்
இளவரசியின் படுக்கை அறை போன்று இருக்க வேண்டுமா? அப்படியெனில் இந்த டிசைன் சரியானதாக இருக்கும். இதற்கு மெத்தைக்கு விரிக்கும் ஃப்ரில் வைத்த பெட் சீட் வாங்கி விரித்து, கட்டிலுக்கு அருகில் கண்ணாடி வைத்த டேபிளை வைத்து, அழகான பூ விரிந்தது போன்ற லேம்ப் வைக்க வேண்டும்.

பிரிண்டட் பெட்ரூம்
பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், படுக்கையறையில் பூ பிரிண்ட் போட்ட தலையணை கவர், மெத்தை கவர் மற்றும் சுவர்களில் பூ பிரிண்ட் போட்ட பேப்பரை ஒட்டி அலங்கரிக்கலாம்.

முகலாய ஸ்டைல் அறை
உங்கள் படுக்கையறை ஒரு பழைய மன்னரின் படுக்கையறை போன்று இருக்க வேண்டுமெனில், அதற்கு சில்க்கில் எம்ராய்டு போட்ட பெட் சீட்டை வாங்கி விரித்து, சுவற்றிற்கும் அதே நிறத்திற்கு ஏற்றவாறு பெயிண்ட் அடித்தால், அருமையாக இருக்கும்.

ரெட் ஹாட் பெட்ரூம்
ரொமான்ஸிற்கு சிவப்பு நிறம் சிறந்ததாக இருக்கும். அதனால் தான் காதலை வெளிப்படுத்த சிவப்பு நிற ரோஜாவை பயன்படுத்துகின்றனர். எனவே திருமணமானவர்கள் தங்கள் படுக்கையறையை சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட பொருட்களால் அலங்கரிக்கலாம்.

ரொமான்ஸ் ரூம்
பொதுவாக ஹோட்டல்களில் உள்ள அறையைப் பார்த்தால், லைட் அலங்கரிப்புகள் ரொமான்ஸ் செய்வதற்கானது போன்று இருக்கும். அதே டிசைனை வீட்டிலேயே கட்டில், ஷோபா ஆகியவற்றை மரங்களால் செய்யப்பட்டவையாக பார்த்து வாங்கி அலங்கரித்து, ரொமான்ஸ் லைட் செட்டிங்க்ஸ் அமைக்க வேண்டும்.

தாராளமான படுக்கையறை
இதனை ஒவ்வொருவரின் கனவுப் படுக்கையறை என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அறையில் விசாலமான இடத்தில், பெரிய கட்டில், மிருதுவான மெத்தை, ஷோபா செட், பெரிய கண்ணாடி டேபிள், படுக்கையறையிலிருந்து இரவு நேரத்தில் நிலாவைப் பார்க்க ஃபைபர் கண்ணாடி சுவர் என்றெல்லாம் இருந்தால், எப்படி பிடிக்காது என்று சொல்ல முடியும்.

சிம்பிள் பெட்ரூம்
படுக்கையறை பார்ப்பதற்கு சிம்பிளாக இருக்க வேண்டுமெனில் அதற்கு சாதாரண இரும்பு கட்டிலில் மென்மையான மெத்தை போட்டு, அதில் சுவருக்கு ஏற்றவாறு மெத்தை விரிப்பனை விரித்து, இரும்பு டேபிளுடன் கூடிய கண்ணாடியைப் பொறுத்தி, மிருதுவான மேட்டை தரையில் விரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











